
நாம் தினசரி உடுத்தும் உடைகளுக்கும் நமது மன உணர்வுகளுக்கும் சம்பந்தம் உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? விதவிதமான நிறங்களுக்கும் அவற்றின் குணங்களுக்கும் உள்ள சம்பந்தம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மஞ்சள் நிறம்: மஞ்சள் நிற ஆடை அணிந்து இருப்பவர்கள் பிறரிடம் காதலை விட நட்பைத்தான் அதிகமாகப் பாராட்டுகிறார்கள் என்று அர்த்தம். நட்பு பிடித்திருந்தால் மஞ்சள் நிற ஆடையை அணியலாம்.
பிங்க் நிற ஆடை: பிங்க் கலரில் ஆடை அணிந்திருந்தால் அவர்கள் யாருடைய பிரப்போசலையோ ஏற்றுக் கொண்டிருப்பதாக அர்த்தம். அது காதல் பிரபோஸலாகவும் இருக்கலாம், திருமண பிரபோசலாகவும் இருக்கலாம்.
வெள்ளை நிறம்: வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தால் அவர்கள் இருக்கும் காதல் உறவில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். புதிதாக காதல் உறவில் நுழைந்து இருப்பவர்கள் இந்த நிற ஆடையை அதிகம் உடுத்துகிறார்கள்.
ஆரஞ்சு நிறம்: ஆரஞ்சு வண்ண உடை அணிந்து இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நபரை மனதில் நினைத்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் தங்களை வந்து அப்ரோச் செய்ய வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அர்த்தம்.
பச்சை நிறம்: ஒருவருக்கொருவர் பிடித்திருந்து, ஆனால் காதலை இன்னும் சொல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் இந்த நிற ஆடையை அணிகிறார்கள். அவர்கள் மீது இருக்கும் காதலை இன்னும் தெரிவிக்காமல் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
கருப்பு நிறம்: எல்லாவற்றிற்கும் எதிர்ப்பு தெரிவிக்க நாம் உபயோகிக்கும் நிறம் கருப்பு. இந்த நிற ஆடையை அணிந்திருப்பவர்கள் சிங்கிளாக, மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
நீல நிறம்: நீல நிற ஆடை அணிந்திருப்பவர்கள் பிறரை விட தன்னை அதிகமாக காதலித்து வருகின்றனர் என்று பொருள். சிங்கிளாக இருப்பவர்களும் தங்களுக்கு அந்த வாழ்க்கைப் பிடித்திருந்தால் இந்த நிற ஆடையை அணியலாம்.