குழந்தைகளை அன்பாகவும், இரக்கம் உள்ளவர்களாகவும் வளர்க்க பெற்றோர் செய்ய வேண்டிய விஷயங்கள்!

Parent Children
Parent Children
Published on

குழந்தைகள் அன்பானவர்களாகவும், இரக்கம் உள்ளவர்களாகவும் வளர வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் ஆசையாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அன்பு, பொறுமை மற்றும் நேர்மறையான எண்ணங்களை விதைத்து அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குகிறார்கள். இதற்கு பெற்றோர் சில விசேஷமான விஷயங்களை செய்வதன் மூலம் உதவ முடியும்.

1. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக திகழ வேண்டும். நீங்கள் மற்றவர்களிடம் மரியாதையுடனும், இரக்கத்துடனும் நடந்து கொள்ளும் போது, உங்கள் குழந்தைகளும் அதையே பின்பற்றுவார்கள். உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் இதை நீங்கள் செய்து காட்ட வேண்டும். உதாரணமாக, வயதானவர்களுக்கு உதவுவது, மற்றவர்களிடம் கனிவாக பேசுவது போன்ற செயல்களை குழந்தைகள் பார்க்கும்போது அவர்களும் அதையே செய்ய முயற்சிப்பார்கள்.

2. உங்கள் குழந்தைகள் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள ஊக்குவியுங்கள். மற்றவர்களின் கஷ்டங்களைப் பற்றிய கதைகளை சொல்லுவதன் மூலமும், இரக்கம் நிறைந்த விஷயங்களைப் பற்றி பேசுவதன் மூலமும் குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான கண்ணோட்டம் கிடைக்கும். மற்றவர்களின் பார்வையில் இருந்து உலகை பார்க்க அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

3.  குழந்தைகள் நன்றியுணர்வுடன் இருக்க கற்றுக்கொடுங்கள்.  ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தைகள் எதற்காக நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி பேசுங்கள். நன்றி அட்டைகள் எழுதுவது அல்லது நன்றியை வாய்மொழியாக வெளிப்படுத்துவது போன்ற பழக்கங்களை ஊக்குவியுங்கள். 

4. மற்றவர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவத்தை உங்கள் குழந்தைகளுக்கு புரிய வையுங்கள். பழைய பொம்மைகளை தானம் செய்வது, அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு உதவி செய்வது போன்ற செயல்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் அன்பை வெளிப்படுத்த கற்றுக்கொள்வார்கள். பிறருக்கு கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை அவர்கள் உணர வேண்டும்.

5. கவனமாக கவனிக்கும் பழக்கத்தை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். யாராவது பேசும்போது குறுக்கிடாமல் பொறுமையாக கவனிப்பது மற்றவர்களின் கருத்துக்களை மதிக்கவும், புரிந்து கொள்ளவும் உதவும். இது அவர்களுக்கு பொறுமை, பச்சாதாபம் போன்ற நல்ல குணங்களை வளர்க்கும்.

இதையும் படியுங்கள்:
குழந்தை பிறந்த பின் பெண்கள் சாப்பிட வேண்டிய 7 பழங்கள்
Parent Children

6. உங்கள் குழந்தைகளுடன் நேர்மறையான உரையாடல்களை மேற்கொள்ளுங்கள். நல்ல வார்த்தைகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். பிரச்சனைகளை அமைதியான முறையில் எப்படி தீர்ப்பது, எதிர்மறையான வார்த்தைகளை தவிர்த்து எப்படி அன்பாக பேசுவது என்பதையும் கற்றுக்கொடுங்கள்.

7. உங்கள் குழந்தைகள் சிறிய அன்பான செயல்களைச் செய்யும் போது அவர்களை பாராட்டுங்கள். இது அவர்களுக்கு இரக்கத்துடன் நடந்து கொள்வதற்கான ஊக்கத்தை அளிக்கும். சிறிய உதவி செய்தாலும், கனிவாக பேசினாலும் அவர்களை பாராட்டுவது நல்ல பழக்கங்களை உருவாக்கும்.

8. வீட்டில் சில தெளிவான விதிகளை உருவாக்குங்கள். மற்றவர்களை மரியாதையாக நடத்த வேண்டும், அன்பு காட்ட வேண்டும், அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் போன்ற விதிகளை ஏற்படுத்துவதன் மூலம் குழந்தைகள் அன்பானவர்களாக வளர வழிவகுக்கும்.

9. எதிர்மறையான விஷயங்களை அவர்கள் பார்ப்பதை தவிருங்கள். வன்முறை அல்லது வெறுப்பை தூண்டும் ஊடகங்களை அவர்கள் பார்ப்பதை கட்டுப்படுத்துங்கள். நேர்மறையான சமூக உதாரணங்களை மட்டுமே அவர்களுக்கு காட்டுங்கள்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் எதிர்மறை ஆற்றலைத் தவிர்க்க செய்ய வேண்டியவை!
Parent Children

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com