
நம் வீட்டின் சமையலறையில் அஞ்சறைப் பெட்டியை (Spice box) கண்டிப்பாக பார்த்திருப்போம். இது ஐந்து அறைகளைக் கொண்ட சிறிய பெட்டியாகும். இதில் சமைப்பதற்கு உடனடியாக தேவைப்படும் மசாலாக்கள் வைக்கப்பட்டிருக்கும். சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான கடுகு, சீரகம், மிளகு, மஞ்சள், வெந்தயம் போன்ற பொருட்கள் இடம் பெற்றிருக்கும். பொதுவாக அஞ்சறைப் பெட்டியில்(Spice box) ஐந்து அறைகள் இருக்கும். தற்போது 7 அல்லது 9 பெட்டிகளுடன் வருகிறது.
அஞ்சறைப் பெட்டியில் எல்லா மசாலா பொருட்களையும் வைக்கக்கூடாது. நம்முடைய அஞ்சறைப் பெட்டியில் வைக்க வேண்டிய பொருட்கள் என்று சில உள்ளது.
அஞ்சறைப் பெட்டியில் உப்பை போட்டு வைக்கக்கூடாது. உப்பிற்கு ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை உண்டு. எனவே, அதை அஞ்சறைப் பெட்டியில் மற்ற மசாலாக்களுடன் சேர்த்து வைக்கும் போது அதன் சுவை குறையும், பிளேவர் குறையும். ஆகவே, உப்பை அஞ்சறைப் பெட்டியில் சேர்த்து வைக்காமல் வேறு பாட்டிலில் தனியாக சேகரித்து வைப்பது சிறந்தது.
அஞ்சறைப் பெட்டியில் (Spice box) சமையலுக்கு சம்மந்தம் இல்லாத எந்த பொருளும் இருக்கக்கூடாது. சிலர் எடுப்பதற்கு வசதியாக இருக்கட்டும் என்று பணம் போன்றவற்றை அஞ்சறைப் பெட்டியில் போட்டு வைத்திருப்பர்கள். அது மிகவும் தவறாகும்.
திரவங்கள் மற்றும் எண்ணெய்கள் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக்கூடாது. தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை வைக்கக்கூடாது. இவ்வாறு வைக்கும் போது ஒன்றோடு மற்றொன்று கலக்க வாய்ப்புள்ளது. எண்ணெய்களை தனித்தனி கேன்களில் சேமித்து வைப்பது சிறந்தது.
அரிசி, பருப்பு, மாவு, சர்க்கரை போன்ற பெரிய அளவில் சமையலுக்கு தேவைப்படும் பொருட்களை அஞ்சறைப் பெட்டியில் வைக்க தேவையில்லை. இதை தனியாக வாங்கி சேமித்துக் கொள்ளலாம்.
அஞ்சறைப் பெட்டியில் விரைவில் கெட்டுப் போகக்கூடிய பொருட்களை வைக்கக்கூடாது. காய்கறி, பழங்கள் போன்ற விரைவில் கெட்டுப்போகும் உணவுகள் வைப்பதை தவிர்ப்பது நல்லது. அதுப்போல ஈரமான பொருட்களை உள்ளே வைப்பதால் பூஞ்சைப்பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, அதையும் தவிர்க்க வேண்டும்.
அஞ்சறைப் பெட்டியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அதில் இருக்கும் எந்த பொருளும் கெட்டுப்போகாமல் நீண்டநாட்கள் பயன்படுத்த முடியும்.
அதுமட்டுமில்லாமல் அஞ்சறைப் பெட்டியில் மருந்து மாத்திரைகளை வைத்துவிட்டால், நமக்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் என்று சொல்வார்கள்.
சனி பகவானுக்கு உரிதான எள்ளை இதில் போட்டு வைக்கக்கூடாது. இதனால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும். இவ்வாறு செய்வது குடும்பத்தின் நிதிநிலையை பாதிக்கும்.
இனி அஞ்சறைப் பெட்டியை இதுப்போல பராமரித்துப் பாருங்கள். உங்கள் வாழ்விலும் ஆரோக்கியமும், செல்வமும் பெருகும்.