ஆரோக்கிய வாழ்க்கைக்கான வழி: வாட்டர் பியூரிஃபையர் வாங்கும் முன் யோசிக்க வேண்டியவை!

Things to consider before buying a water purifier!
water purifier
Published on

றிவியல் முன்னேற்றம் பெருகப் பெருக இயற்கையுடன் இணைந்து ஆரோக்கியமாக இருந்த மனிதர்களது வாழ்க்கை முறையும் மாறி, பல உடல் நல பாதிப்புகளுக்கும் உள்ளாகி வருகிறோம். அதில் முக்கியமானது தண்ணீரால் பரவும் நோய்கள். அசுத்தமான நீரை பருகுவதால் பாதிக்கப்படும் உடல் நலம் குறித்து பலருக்கும் கவலை எழுகிறது. இருப்பினும் இதற்கான தீர்வாக அதே அறிவியல் தந்த சாதனம்தான் வாட்டர் பியூரிஃபையர் (water purifier) எனப்படும் நீர் சுத்திகரிப்பான். இதில் பல பிராண்டுகள் பலவித சுத்திகரிப்பான்கள் இருக்கும் நிலையில் எது வீட்டிற்கு உகந்தது என்ற குழப்பம் வருவது பலருக்கும் சகஜம். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

வீட்டிற்கு சிறந்த நீர் சுத்திகரிப்பான் தேர்வு செய்வது உங்கள் நீரின் தரம் மற்றும் தேவைகளைப் பொறுத்தது. UF அல்லது ஈர்ப்பு விசை சார்ந்த சுத்திகரிப்பான்கள் குறைந்த TDS தண்ணீருக்கு ஏற்றதாக உள்ளது. இது மின்சாரம் அல்லது பம்ப் இல்லாமல் தண்ணீரை வடிகட்ட ஈர்ப்பு விசையின் அடிப்படையில் அமைந்த ஒரு சாதனமாகும். வடிகட்டப்படாத தண்ணீரை ஊற்றும் மேல் அறை மற்றும் வடிகட்டப்பட்ட நீரை சேகரிக்கும் கீழ் அறை என பொதுவாக இரண்டு அறைகளைக் கொண்டு, நீர் தொடர்ச்சியான வடிகட்டிகள் வழியாக கீழ்நோக்கி பாய்ந்து, அசுத்தங்கள் மற்றும் மாசுபாடுகளை நீக்குகிறது. மலிவு விலை மற்றும் மின் செலவற்ற காரணத்தால் இது பெரும்பாலானவர்களுக்கு உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
மாணவர்களே! எலான் மஸ்க், ஜென்சங் ஹூவாங் சொல்றத கேளுங்க! இது ரொம்ப முக்கியம்!
Things to consider before buying a water purifier!

அதேநேரத்தில் அதிக TDS அளவுகள் உள்ள பகுதிகளுக்கு RO நீர் சுத்திகரிப்பான்கள் சிறந்தவையாக உள்ளன. RO (Reverse Osmosis) சுத்திகரிப்பான் என்பது ஒரு நீர் வடிகட்டுதல் அமைப்பாகும். இது உப்புகள், அழுக்கு, குளோரின் மற்றும் பிற அசுத்தங்கள் போன்றவற்றை குடிநீரில் இருந்து நீக்குகிறது. RO தலைகீழ் சவ்வூடு பரவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீரில் கரைந்த உப்புகள், அசுத்தங்களை அகற்றி, அதை பயன்பாட்டுக்கு பாதுகாப்பானதாக மாற்றுகிறது.

UV மற்றும் UF சுத்திகரிப்பான்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டையும் அறிவோம். UV சுத்திகரிப்பான் (Ultraviolet Purifier) பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்ல, UV கதிர்கள் எனப்படும் புற ஊதா ஒளியைப் பயன்படுத்துகிறது. dissolved solids மற்றும் கன உலோகங்களை இது நீக்காது. மின்சாரத்தில் இயங்குவதால் மின் தடங்கலினால் சிறு சிக்கல்கள் எழும். அதே நேரத்தில் UF சுத்திகரிப்பான் (Ultrafiltration Purifier) ஒரு சவ்வு போன்ற வடிகட்டி வலையைப் பயன்படுத்தி அவற்றைத் தடுக்கிறது. ஆனால், dissolved solids முழுமையாக நீக்காது. இதற்கு மின்சாரம் தேவையில்லை. எனவே, மின்சாரத் தடையால் இது பாதிக்கப்படாது. நீரின் சுவை மற்றும் வாசனையை மாற்றாது என்பது இதன் சிறப்பு.

தற்போது வந்துள்ள Pureit Copper போன்ற செப்பு தொழில்நுட்பம், RO மட்டும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை 99.8 சதவிகிதம் தூய தாமிரத்துடன் செலுத்துகிறது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் கூடுதல் நன்மைகளைச் சேர்க்கிறது.

இதையும் படியுங்கள்:
79வது சுதந்திர தினம்: ஒரு நிமிடமாவது இவர்களுக்காகக் கைதட்டுங்கள்!
Things to consider before buying a water purifier!

நாம் நீர் சுத்திகரிப்பான் வாங்கும்போது கவனிக்க வேண்டியது, நமது பட்ஜெட் மற்றும் இடவசதி. இவற்றின் விலைகள் வகை, பிராண்ட் மற்றும் அம்சங்களைப் பொறுத்து மாறுபடும். சாதாரண ஈர்ப்பு விசை சுத்திகரிப்பான் 2,000 ரூபாயில் துவங்கி, தரத்திற்கேற்ப மாறுபடும். அதேநேரத்தில் உயர்நிலை RO நீர் சுத்திகரிப்பான்கள் சுமாராக 30,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் செலவாகும். இதற்குக் குறைவாகவும் உள்ள பிராண்டுகள் உண்டு.

அமேசான் தளத்தில் Aquaguard, Kent, Aqua D Pure,  Livpure, Urban company native, Havells, AO Smith, Pureit, Eureka Forbes உள்ளிட்ட பல முன்னணி கம்பெனிகளின் நீர் சுத்திகரிப்பான்கள் கிடைக்கின்றன. இதில் நமக்கேற்றதை தேர்வு செய்து தூய்மையான தண்ணீரை அருந்தி உடல் நலப் பாதுகாப்பு பெறுவது நமது கடமை.

நீர் சுத்திகரிப்பான் வாங்குவதுடன் நமது கடமை முடிவதில்லை. அவற்றின் பராமரிப்பு விதிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டியது முக்கியம். குறிப்பாக, அடைபட்ட வடிகட்டிகள் சுத்திகரிப்பானின் செயல்திறனைக் குறைப்பதால், வடிகட்டிகளை தொடர்ந்து மாற்ற வேண்டும். சரியான நேரத்தில் மாற்றுவதற்கு வடிகட்டியின் காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com