
டைப் 1 டயபடிக் பார்பி பொம்மை மற்றவர்களின் வாழ்க்கையை புரிந்துக் கொள்ள உதவும் ஒரு வகையான பொம்மை கருவி எனலாம். டைப் 1 டயபடிக் பார்பி பொம்மை விழிப்புணர்வு, சகிப்புத் தன்மை மற்றும் ஒரே நிலைமையிலுள்ள சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான ஆதரவை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. உணர்வுகளை புரிந்து கொள்ளும் இத்தகைய பார்பி பொம்மை குறித்து, பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறும் கருத்துக்கள்.
Mattel நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய டைப் 1 டயபடிக் பார்பி பொம்மைக்கு, ஒரு இன்சுலின் பம்பும், குளுக்கோஸ் மானிட்டரும் உள்ளது. இது உண்மையில் டைப் 1 சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் சாதனங்களை பிரதிபலிக்கிறது.
குழந்தைகளின் நம்பிக்கையை அதிகரிக்க இத்தகைய பார்பி பொம்மைகள் உதவும். இளம் வயதில் ஆரம்பிக்கப்படும் சரியான புரிதல்கள், நீண்ட காலத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
டைப் 1 சர்க்கரை நோய் உடைய மகளைக் கொண்ட உர்மிலா பாட்கர், இந்த பார்பி பொம்மை என் மகளைப் போலவே இருப்பதால், மகள் தனியாக இல்லை என்பதைக் காட்டுவது மிகவும் முக்கியமான உணர்வென்று சொல்கிறார்.
மற்றுமொரு தாயாகிய ஆகாஷா, "எனது மகள் இந்த பார்பி பொம்மையைக் கையில் பிடித்தபோது, சந்தோஷப்பட்டாள். என் மகளுடைய தினசரி வாழ்க்கையாகிய இன்சுலின் செலுத்துவது, சர்க்கரை நிலையை பரிசோதிப்பது போன்றவைகளை இந்த டைப் 1 டயபடிக் பார்பி பொம்மை பிரதிபலிக்கிறது," என்கிறார்.
சமூக ஆர்வலரும், சுகாதாரக் குறைகள் மற்றும் அரிய நோய்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளை முன்னெடுத்தவருமாகிய லஷ்மி பிரசாத் கூறுவது, “இந்த டைப் 1 டயபடிக் பார்பி பொம்மை பொது உரையாடலைத் தூண்டும். சிறிய ஆனால் தாக்கம் கொண்ட ஆரம்பமென்றாலும், பல நிலைகளை உருவாக்கும் தூண்டுதல்."
குழந்தைகளுக்கான விளையாட்டு ஆய்வாளர் தமயந்தி ராய் கூறுவது, “இந்த வகையான பார்பி பொம்மைகள் பல்வேறு உடல்நிலை மற்றும் நோய்களை கொண்ட சிறுவர்களிடையே, சமத்துவ உணர்வை ஏற்படுத்தும். சமூக ஏற்கைகளை மேம்படுத்தும்."
டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு கல்வி வழங்கும் டாக்டர் பாரேக், “பொதுவாகவே, பொம்மைகள் குழந்தைகளின் முதல் நண்பர்கள். அவை அவர்களது உறவுகளை, கற்பனைகளை அமைக்கும். இந்த வகை பார்பி பொம்மைகள், உடனே தொடர்பு கொள்ளக் கூடியவைகள் எனலாம்.”
டைப்1 டயபடிக் பார்பி பொம்மை குறித்த எதிர்பார்ப்புக்கள் சமூக வலைத் தளங்களில் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகின்றன.