ஆயுசு முழுக்க ஆரோக்கியமா இருக்க இந்த ஒரு விஷயம் போதுமே!

This one thing is enough to stay healthy for life
This one thing is enough to stay healthy for lifehttps://www.mskomenskeho.sk
Published on

‘கோபம், வெறுப்பு அல்லது எந்த ஒரு விருப்பத்துக்கும் இடம் கொடுப்பவனால் எதிலும் சரியாக செயல்பட முடியாது’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்தக் காலத்தில் இப்படி வாழ முடியுமா? ஏதோ ஒரு தருணத்தில் யாரோ ஒருவர் மீது வெறுப்பு, நாம் ஆசைப்பட்ட ஒரு பொருளின் மீது விருப்பு, நாம் விரும்பியது நடக்காமல்போகும் சூழ்நிலையில் அதன் மீது நாம் கொள்ளும் சினம் போன்ற ஏதோ ஒருவித மனத்தடைகளை நாம் அனுபவித்தே ஆக வேண்டிய சூழல்தான் உள்ளது.

மேலும் இவர், ‘சாந்தமான, மன்னிக்கும், சமமாய் மதிக்கும், சமச்சீர் கொள்ளும் மனமே சிறப்பான செயல்களைச் செய்யும்’ என்கிறார். இப்படி எல்லாம் இருக்க ஆசைதான். ஆனால், என் வழியில் வரும் சக மனிதரும் இப்படி இருப்பாரா என்றால் கேள்விக்குறிதான்.

இந்த வழி தவிர்த்து, இன்னும் ஒரு வழி இருக்கிறது. எளிதான இதை செய்தால் நிச்சயம் நம்மால் ஆயுசு முழுக்க ஆரோக்கியமாக இருக்க முடியும். அந்தக் கல்லூரி மாணவியின் பக்கத்து வீட்டில் ஒரு பாட்டி இருக்கிறார். எந்நேரம் பார்த்தாலும் ஏதாவது ஒரு வேலையில் அவர் இருப்பதைக் காணலாம். ஒன்று தோட்டத்தை நோண்டிக் கொண்டிருப்பார் அல்லது வெங்காயத்தை உரித்துக் கொண்டு இருப்பார். அப்படி இல்லையென்றால் அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று அங்கு இருப்பவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார். இவர் வயது பாட்டிகள் எல்லாம் வீட்டில், ‘உடம்பு முடியவில்லை’ என்று தவிக்குபோது இவர் மட்டும் எப்படி இப்படி சுறுசுறுப்பாக இருக்கிறார் என்று எப்போதுமே அந்த மாணவி எண்ணுவதுண்டு.

ஒரு நாள் வழக்கம் போல் அந்தப் பாட்டி கோயிலுக்குச் செல்ல, அந்த கல்லூரி மாணவியும் அங்கே செல்கிறாள். அப்போது அந்த மாணவி பாட்டியிடம், "என்ன பாட்டி, கொஞ்ச நாளா உங்களைப் பார்க்கவே முடியவில்லை?" என்று. அதற்கு அந்தப் பாட்டி, "ஆமாம் கண்ணு, நானும் உன்னை பார்க்கவே இல்லையே என்று நினைத்தேன். படிப்பு அதிகமா?" என்று கேட்டுவிட்டு கூடவே ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போகிறார். அதாவது, "நானும் பிஸி… நீயும் பிஸி. இப்படியே பிசியா இருந்தாதான் வாழ்க்கையும் நல்லா இருக்கும். உடம்பும் நோய் நொடி இல்லாம ஆரோக்கியமா இருக்கும்" என்கிறார்.

இதையும் படியுங்கள்:
யாரெல்லாம் மயோனைஸை தொடவே கூடாது தெரியுமா?
This one thing is enough to stay healthy for life

எத்தனை சத்தியமான வார்த்தைகள்… கல்லூரி மாணவிக்குப் புரிந்தது. இந்தப் பாட்டியின் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தின் ரகசியம் இவர் எப்போதும் பிஸியாகவே இருப்பதுதான் என்று.

மனதிற்குள் கோபம், விருப்பு, வெறுப்பு போன்ற எண்ணங்கள் நுழையாமல் இருக்க மனதில் சாந்தத்துடன் நமக்குப் பிடித்தமான ஏதோ ஒன்றில் அடுத்தடுத்து என பிஸியாக இருந்தால் உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியம் பேணி நீண்ட நாள் வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com