You know who should never touch mayonnaise?
You know who should never touch mayonnaise?https://www.google.com

யாரெல்லாம் மயோனைஸை தொடவே கூடாது தெரியுமா?

ற்காலத்தில் துரித உணவு கலாசாரம் பெருகிவிட்ட நிலையில் பர்கர், பீட்சா, மோமோஸ் போன்ற உணவுப் பொருட்கள் மயோனைஸ் துணையில்லாமல் சுவையாகவே இருக்காது. சற்றே பழுப்பு நிறத்தில் இருக்கும் க்ரீம் போன்ற பொருள். குழந்தைகளுக்குக் கூட மிகவும் பிடித்தமான ஒன்றாகி விட்டது. ஆனால், அதனால் உடலுக்கு ஏற்படும் கேடுகளைப் பற்றி நிறைய பேர் நினைத்து பார்ப்பதில்லை.

மேலை நாடுகளில் மயோனைஸை ஒரு சர்ச்சைக்குரிய உணவுப் பொருளாகவே பார்க்கிறார்கள். மயோனைஸில் கான், சோயாபீன்ஸ், தாவர எண்ணெய்கள், ஒமேகா 6, ஒமேகா 3 முதலியவை இருக்கின்றன. மயோனைஸ் உடலுக்கு பலவிதமான தீங்குகளை விளைவிக்கக் கூடியது. பல நோய்களை உண்டாக்கும் தன்மையோடு, பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். எப்போதாவது அரிதாக இதை சுவைக்காக எடுத்துக் கொண்டால் பரவாயில்லை. ஆனால், ஒருசிலர் மயோனைஸ் பக்கமே தலை வைத்துப் படுக்கக் கூடாது. அதைப்பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மயோனைஸ் எப்படி தயாராகிறது தெரியுமா?

முட்டையின் வெள்ளை கரு, எண்ணெய், சர்க்கரை, உப்பு, எலுமிச்சை சாறு போன்ற மூலப்பொருட்களை பயன்படுத்தி மிக்ஸியில் அரைத்து தயாரிக்கப்படுகிறது. இதில் பாக்டீரியாக்கள் பெருமளவு இனப்பெருக்கம் செய்யக்கூடிய அபாயம் உள்ளது. இதை சரியாக பிரிட்ஜில் ஸ்டோர் பண்ணி வைக்கவில்லை என்றால் விரைவில் கெட்டுப் போய் பாக்டீரியா கிருமிகள் பல மடங்காக பெருகிவிடும். கடைகளில் விற்கப்படும் மயோனைஸில் அவை கெடாமல் இருப்பதற்காக சில ரசாயன மூலக்கூறுகள் சேர்க்கப்படுகின்றன. அவை உடலுக்கு எந்த விதத்திலும் நன்மை செய்யாது.

யாரெல்லாம் மயோனைஸை தொடவே கூடாது?

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை திரும்பிக்கூட பார்க்கக் கூடாது. ஏனென்றால் இது உடல் எடையை வேகமாக அதிகரிக்கும். இதில் அதிக கலோரிகளும் கொழுப்பு சத்தும் நிறைந்து இருப்பதால் உடல் பருமனை வேகமாக அதிகரிக்கச் செய்யும். மைக்ரேன் எனும் எனப்படும் ஒற்றைத் தலைவலி பிரச்னை இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும். தலைவலி, குமட்டல், வாந்தி வருவது போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும்.

நீரிழிவு நோயாளிகள் இதை தொடவே கூடாது. ஏனென்றால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக அதிகமாக அதிகரிக்கச் செய்துவிடும். பின்பு அவர்களுடைய உடல் வழக்கமான செயல்பாட்டில் இருந்து மாறுபட்டு பலவிதமான உபாதைகளை அவர்களுக்குத் தரும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இரத்த உறைவு, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும் அபாயகரமான மூலக்கூறுகள் இதில் உள்ளன. ஏனென்றால், இதில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களின் அளவு மிக அதிகமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
கடந்த காலத்தை நினைத்து முதியவர்கள் கவலைப்படும் விஷயங்கள் எவை தெரியுமா?
You know who should never touch mayonnaise?

ஒரு ஸ்பூன் மயோனைஸில் 1.6 கிராம் நிறைவற்ற கொழுப்பு உள்ளது. இதை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் லெவல் அதிகரிக்கும். அது இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தும். கல்லீரல் கோளாறுகளையும் இது ஏற்படுத்தும். தொடர்ந்து உண்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் அபாயமும் உண்டு.

மயோனைஸ் சாப்பிடும் ஆசையை இவர்கள் கைவிட வேண்டும். பிறரும் வீட்டிலேயே இதை செய்து சாப்பிடலாம். அடிக்கடி எடுத்துக் கொள்ளக் கூடாது. கடையில் விற்கும் மயோனைஸ் அவ்வளவு சுகாதாரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. குறைந்த கலோரிகள் கொண்ட மயோனைஸை தேர்ந்தெடுத்து வேண்டுமானால் ஆசைக்காக சாப்பிடலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com