மாணவர்களே! பொறியியல் கவுன்சிலிங் போறீங்களா? இத தெரிஞ்சுக்கோங்க...

Student counseling
Student counseling
Published on

பொறியியல் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறையில் உயர் கல்வி பெறும் வகையில் கவுன்சிலிங் என்ற கலந்த ஆலோசனை அவர்களுக்கு நடத்தப்படுகிறது. அந்த வரையில் பிளஸ்-டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப பொறியியல் அல்லது இதர தொழில் சார்ந்த படிப்புகளுக்கு உரிய கல்வியை கவுன்சிலிங்  மூலம் தேர்வு செய்து படிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

விளக்கம் பெறுவது.

கவுன்சிலிங் செல்லும் முன்னர், நீங்கள் உங்களது ஆர்வம் திறமைகளை கணக்கிட்டு எந்த துறையில் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை பற்றி சிந்தித்து, கவுன்சிலிங் அமர்வின்போது உங்கள் மனதில் உள்ள பயம், கவலை ஆகியவற்றை ஆலோசரிடம்  சொல்லி விளக்கம்  கேட்டு பெறுவது மிகவும் அவசியம்.

மாணவர்கள் கவனிக்க வேண்டியது.

1. மாணவர்கள் தேர்வு செய்த கல்வி நிறுவனம் நல்ல உள் கட்டமைப்பு வசதிகள் கொண்டதாக இருக்கிறதா? பாடத்திட்டம் மற்றும் போக்குவரத்து வசதி ஆகிய நிலைகள் சிறப்பான வசதிகள் பெற்றுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

2. சேரப்போகும் கல்வி நிறுவனத்தில் நவீன ஆய்வகங்கள்  வசதி உள்ளனவா? சிறப்பான நூலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா? விளையாட்டுக் கூடங்கள் விளையாட்டு மைதானங்கள் வசதி எந்த அளவில் உள்ளது? என்பதை கவனிக்க வேண்டும்.

3. மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்திட்டத்தில் அதற்குரிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விகிதம் பாடங்களை சொல்லித் தரும் ஆசிரியர்களின் உயர் கல்வி திறன் போன்ற விவரங்களையும் மற்றவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று கல்வி அலுவலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

4. சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் பல்கலைக்கழகத்திலிருந்து எப்படிப்பட்ட தர நிலையை பெற்றிருக்கிறது என்பதை மாணவர்கள் கவனிக்க வேண்டும். ஏனெனில், அந்த தரை நிலையின் அடிப்படையில் தான் பாடத்திட்டத்தின் சிறப்பு அமைகிறது.

5. மாணவர்களின் தேர்வு செய்த கல்வி நிறுவனத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் எப்படிப்பட்ட உயர் பதவியில் அமர்ந்து உள்ளார்கள் அல்லது தொழில் ரீதியாக சாதனை புரிந்திருக்கிறார்கள் என்ற விஷயத்தையும் மாணவர்கள் கவனிக்க வேண்டும்.

6. தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்திட்டத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் எந்த அளவிற்கு காலத்திற்கேற்ற மாற்றங்களோடு புதுப்பித்து கொண்டு வருகிறது என்ற விவரத்தையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நாவிற்கு ருசியான நேந்திரம் பழ பாயசமும்; பலாக்காய் இட்லி பொடியும்!
Student counseling

7. மாணவர்களுடைய தனி திறன்களை வளர்ப்பதற்கான சூழல் அமைந்துள்ளதா? நிர்வாகத்தில் மாணவர்களுடைய பங்கேற்பு எந்த அளவில் உள்ளது? என்ற விஷயத்தையும் மாணவர்கள் கவனிக்க வேண்டும். இதன் பின் மாணவர்கள் தங்களுடைய விருப்பப்படி குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் இணைந்து தங்களுடைய உயர்கல்வியை தொடரலாம்.

8. பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுடைய மனநிலை பல்வேறு எண்ணங்களை கொண்டதாக இருக்கும். தான் விரும்பிய படிப்பை விரும்பிய பிரிவில் விருப்பப்பட்ட கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும் என்பது அனைத்து மாணவர்களுடைய பொதுவான விருப்பமாக இருக்கும். மாணவர்கள் இதனை ஆலோசித்து கவுன்சிலிங்கில் கவனமாக உரிய கல்வியை பெற வாழ்த்துக்கள்.

இதையும் படியுங்கள்:
சருமத்தில் சியா விதை பால் மாஸ்க் செய்யும் அற்புதங்கள் பற்றி அறிவோமா?
Student counseling

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com