ஆண்களைப் புரிந்துகொள்ள முதலில் இதை புரிந்துக்கொள்ளுங்கள்!

To understand men First understand this
To understand men First understand this
க.பிரவீன்குமார்

என் பெயர் க.பிரவீன்குமார் நான் திருச்சி மாவட்டம் கவரப்பட்டி எனும் ஊரில் பிறந்து வளர்ந்தேன். எனது குடும்பம் தாய், தந்தை, தம்பி, பாட்டி என இணைந்து வாழும் ஒரு விவசாய குடும்பம். நான் எனது பள்ளி படிப்பை அவ்வூரிலேயே பயின்றேன். இளங்கலை மற்றும் முதுகலையை திருச்சி தேசியக் கல்லூரியில் படித்தேன். தற்போது அதே கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு உள்ளேன்.

Updated on

* பெரும்பான்மையான ஆண்களுக்குப் பேசுவதைக் காட்டிலும் கேட்பதற்குத்தான் அதிகமாகப் பிடிக்கும்.

* அதிகமான ஆண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள். அவை எப்படிப்பட்ட பெரும் பிரச்னையாக இருந்தாலும் சரி, தாங்கள் இயல்பாக இருப்பது போலவே காட்டிக்கொள்வார்கள்.

* ‘நான் யார்? என்னால் என்ன முடியும்?  என்னுடைய திறன் என்ன?’ போன்றவற்றை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

* ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டுமே கவனம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களால் பெண்களைப்போல் ஒரே நேரத்தில் பல வேலைகளில் கவனம் செலுத்த முடியாது.

* விளையாட்டு, செய்திகள், பருவநிலை, காலநிலை, இன்றைய சூழ்நிலை போன்ற வெளி உலகம் சார்ந்த விஷயங்களை அறிந்துகொள்வதில் ஆண்கள் மிகவும் ஆர்வம் செலுத்துவார்கள்.

* எல்லாவற்றிலும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அது மட்டுமின்றி, மற்றவர்கள் ஏதாவது அறிவுரை வழங்கினால் அவர்களுக்குப் பிடிக்காது.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தத்திற்கு மிகச்சிறந்த மருந்து எது தெரியுமா?
To understand men First understand this

* முக்கியமான நாட்கள், முக்கியமான விழாக்களை நினைவில் வைத்துக்கொள்வது கொஞ்சம் கடினமான ஒன்று. அதனால் முக்கியமான தினங்களை எல்லாம் மறந்து, மனைவியிடம் திட்டு வாங்கும் ஆண்கள் பலர் இங்கு உள்ளனர்.

* ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று ஒரு செயலைச் செய்ய மாட்டார்கள். ஒரு செயலைத் தொடங்கும்முன் அந்தச் செயலால் வரும் நன்மை, தீமைகளை நன்கு ஆராய்ந்துதான் ஒரு முடிவை எடுப்பார்கள்.

* பெண்களின் மனநிலையைப் புரிந்துகொள்வது அவர்களுக்கு சவாலாகவே இருக்கும். குறிப்பாக பெண்களின்  முக பாவனையை வைத்து அவர்களின் மனநிலையை அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது.

குறிப்பு: எல்லா ஆண்களும் இதேபோல்தான் இருப்பார்கள் என்று எண்ணிவிட வேண்டாம்! இவை ஆண்கள் இடையே பொதுவாகக் காணப்படும் குணாதிசயங்கள்! அவர்களுடன் பழகிப் பார்த்து அவர்களைப் புரிந்துகொள்வது சிறப்புடையதாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com