
2024-ம் ஆண்டு இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட விவரங்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட், வானிலை, அரசியல் போன்ற செய்திகளை மக்கள் ஆர்வத்துடன் தேடி உள்ளனர். இதிலிருந்து மக்களுக்கு எந்நெந்த விஷயங்களில் ஆர்வம் அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது. வானிலை குறித்த விவரங்களை அறிந்து கொள்ள தற்போது மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் கூகுளின் 'year in search 2024' அறிக்கையின்படி, இந்த ஆண்டு இந்தியர்கள் அதிகம் தேடியது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
விளையாட்டை ரசித்து பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது. அதுவும் கிரிக்கெட்டை ரசிக்க தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் கிரிக்கெட்தான் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் முதல் இடத்தில் உள்ளது. 2024-ம் ஆண்டில் இந்தியாவில் கிரிக்கெட் அதிகளவு ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் டி20 உலகக் கோப்பை ஆகியவை கூகுளில் அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளாக 1-வது மற்றும் 2-வது இடத்தைப் பிடித்தன.
இந்திய நாட்டின் இரண்டு முக்கிய பெரும் கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி ஒன்றாகும். கூகுள் தோடலில் பிஜேபியின் நிலைபாடு, வளர்ச்சி மற்றும் பிஜேபியை பற்றி தோடுபவ்ர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசியலில், அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தை பி.ஜே.பி அல்லது பாரதிய ஜனதா கட்சி, 2024 இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 முக்கிய வார்த்தைகளில் 3வது இடத்தைப் பிடித்தது.
நடத்து முடித்த தேர்தல் முடிவுகள் 2024 மற்றும் ஒலிம்பிக் 2024 ஆகியவையும் இந்த ஆண்டு கூகுளின் 'year in search' முறையே 4வது மற்றும் 5வது இடத்தைப் பிடித்தன.
வானிலை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான மற்றும் கட்டுப்படுத்த முடியாத பகுதியாக மாறிவருகிறது. தற்போது பெரும்பாலான மக்கள் வானிலை முன்னறிவிப்பைப் பார்ப்பதிலும், அறிந்து கொள்வதிலும் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். சுற்றுச்சூழல் மற்றும் வானிலை தொடர்பான கவலைகள், அதிக வெப்பம் போன்றவை அதிகமாகத் தேடப்பட்ட முதல் 10 முக்கிய வார்த்தைகளில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா அக்டோபர் மாதம் மரணமடைந்தார். அவரை பற்றி தெரிந்து கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். அந்த வகையில் கூகுளில் அதிகம் தோடப்பட்டவர்களில் ரத்தன் டாடா 7 வது இடத்தைப் பிடித்தார்.
இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். ராகுலின் நடைப்பயணம், பிரியங்காவில் அரசியல் பிரவேசம், போன்ற கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளாகும். அந்த வகையில் 2024-ல் கூகுள் தேடல்களில் ஆதிக்கம் செலுத்தி பட்டியலில் 8-வது இடத்தைப் பிடித்ததுள்ளது.
2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளில் ப்ரோ-கபடி லீக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக் 9-வது மற்றும் 10-வது இடத்தில் உள்ளன. ப்ரோ-கபடி லீக்கை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ப்ரோ-கபடி லீக் கூகுள் தோடலில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது.