வீட்டுத் தரையை மாற்றணுமா? பராமரிப்பு இல்லாத, பட்ஜெட்டுக்கு ஏற்ற இன்டர்லாக் டைல்ஸ் வகைகள்!

interlock-tiles
interlock-tiles
Updated on

ப்போ எல்லாரும் வீட்டை அழகாகவும், பராமரிப்பு குறைவாகவும் வைத்துக்கொள்ள நினைக்கிறாங்க. அதற்காக சுலபமாக install பண்ணக்கூடிய flooring options தேடுறாங்க. அப்படி பார்த்தா, இன்டர்லாக் டைல்ஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

இந்த டைல்ஸ் என்னனா, ஒன்று மற்றொன்டோட lock ஆக ஃபிட் ஆகற மாதிரி இருக்கும். அதனால full cement வேலை தேவையில்லை. அதனால் தேவையான இடங்களில் நாமளே வேகமா, சுலபமா ஃபிட் பண்ணலாம்.

மொட்டை மாடி, பால்கனி, வெளிப்புற இடங்கள் போன்றவற்றுக்கு இது மிகவும் பொருத்தமானது.

இந்த இன்டர்லாக் டைல்ஸின் சிறப்பு என்னவென்றால், டைல் சேதமடைந்தால் அந்த ஒரு பகுதியை மட்டும் மாற்றிக்கொள்ளலாம். மேலும், பல வடிவங்களில் கிடைக்கும். வீட்டிற்குள் மற்றும் வெளிப்புறம் இரண்டிற்கும் பயன்படுத்தலாம்.

இப்போது 10 வகையான இன்டர்லாக் டைல்ஸைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கான்கிரீட் இன்டர்லாக் டைல்ஸ்

(Concrete Interlock Tiles)

அதிக எடையை தாங்கும், மிகவும் வலுவானது.சிவப்பு, சாம்பல், கருப்பு போன்ற அடிப்படை நிறங்களில் கிடைக்கும்.மழை வந்தாலும் தண்ணீர் வெளியேறும்.தனி வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு ஏற்றது.

புல் பேவர் இன்டர்லாக் டைல்ஸ்

(Grass Paver Interlock Tiles)

பச்சை நிறத்தில் இயற்கை தோற்றம் தரும்.மழைநீர் மண்ணுக்குள் செல்ல உதவும்.தோட்டம் மற்றும் வெளிப்புற இடங்களுக்கு பொருத்தமானது. புல் அதிகமாக வளர்ந்தால் அவ்வப்போது வெட்ட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்! கோபத்தை நொடியில் கட்டுப்படுத்த இதோ 9 டிப்ஸ்!
interlock-tiles

மர இன்டர்லாக் டெக் டைல்ஸ்

(Wooden Deck Interlock Tiles)

பால்கனி மற்றும் சிறிய இடங்களுக்கு ஏற்றது.மரம் போல அழகான தோற்றம் தரும். நீரை எதிர்க்கும் தன்மை உள்ளது. எளிதாக அகற்றி, வேறு இடத்தில் பயன்படுத்தலாம்.

ரப்பர் இன்டர்லாக் டைல்ஸ்

(Rubber Interlock Tiles)

குழந்தைகள் விளையாடும் இடங்களுக்கு பாதுகாப்பானது. வழுக்காத மேற்பரப்பு. வீட்டில் உடற்பயிற்சி செய்யும் GYM போன்ற இடங்களுக்கும் பயன்படுத்தலாம்.

PVC இன்டர்லாக் டைல்ஸ்

(PVC Interlock Tiles)

இலகுவானது மற்றும் குறைந்த செலவில் கிடைக்கும். பல நிறங்களில் கிடைக்கும். தற்காலிக பயன்பாட்டிற்கு ஏற்றது.

கல் தோற்ற இன்டர்லாக் டைல்ஸ்

(Stone-Look Interlock Tiles)

இது இயற்கை கல் போல தோற்றம் தரும் டைல்; நடைபாதை மற்றும் தோட்டம் போன்ற வெளிப்புற இடங்களுக்கு மிகவும் பொருத்தமானது. இது நல்ல பிடிப்புடன் இருக்கும், மழை மற்றும் வெயில் போன்ற வானிலை மாற்றங்களையும் எளிதாக தாங்கும்.

செவ்ரான் பேட்டர்ன் டைல்ஸ்

(Chevron Pattern Tiles)

ஜிக்-ஜாக் வகை டைல்ஸ் ஒவ்வொரு இடத்தையும் ஸ்டைலானதாக காட்டும்.

மேட் பினிஷ் டைல்ஸ்

(Matte Finish Tiles)

surface.shine இல்லாமல் இருக்கும் அதனால் அதிக light-ல கூட glare இருக்காது. பராமரிக்க எளிதாக இருக்கும்

ஆன்டி-ஸ்லிப் டைல்ஸ்

(Anti-Slip Interlock Tiles)

ஈரமான இடங்களுக்கு பாதுகாப்பானது. குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்றது. பழைய தரையின் மேல் பொருத்தலாம்.

இதையும் படியுங்கள்:
எச்சரிக்கை! இந்த 4 இடங்களில் தெரியாமல் கூட ஃபோட்டோ எடுத்துவிடாதீர்கள்!
interlock-tiles

மொசைக் பாணி டைல்ஸ்

(Mosaic Style Interlock Tiles)

வண்ணமயமான மற்றும் அலங்காரமானது சிறிய இடங்களுக்கு சிறந்தது traditional feel தரும்.

மொத்தத்தில் பார்த்தால், இன்டர்லாக் டைல்ஸ் வீட்டிற்கு அழகும் வசதியும் தரும் ஒரு நல்ல தேர்வு. பராமரிக்க எளிது, அழகான தோற்றம் கிடைக்கும், தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. உங்கள் பட்ஜெட்டில் தேவைக்கு ஏற்றபடி தேர்வு செய்தால், உங்கள் வீடு இன்னும் சுத்தமாகவும் நவீனமாகவும் மாறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com