

குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவும், சுகாதாரமான சமையலும் ஆதாரமாக இருக்கிறது. அந்த சுகாதாரமான சமையலுக்கு ஆதாரமாக சுத்தமான பாத்திரங்கள் இருக்கின்றன. "சமையல் கூட செய்து விடலாம். பாத்திரம் கழுவுவது தான் பெரிய வேலை" என்று பலரும் கூறுவதை கேட்டிருக்கிறோம். அந்த பாத்திரம் கழுவும் முறையை எளிதாக்கி நேரத்தை பாதியாக குறைக்கும் இரண்டு வாளி முறை (Two-Basin Method) குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் இப்பதிவில் காண்போம்.
பொதுவாக பெரும்பாலான வீடுகளில் ஒரு பாத்திரம் கழுவும் தொட்டி மட்டுமே வைத்து பாத்திரம் கழுவுகின்றனர். இதனால் அந்த தொட்டியிலேயே பாத்திரத்தை தேய்ப்பது, கழுவுவது என இரண்டையும் ஒன்றாக செய்வதால் நேரம் அதிகமாகிறது. சற்று பாத்திரங்கள் அதிகமாக இருந்தால் இட நெருக்கடி ஏற்பட்டு முழுமையாக சுத்தம் செய்யாத நிலையும் சில நேரங்களில் ஏற்பட்டு சலிப்பு உண்டாகிறது. இரண்டு தொட்டி இருந்தால் பாத்திரம் கழுவும் நேரம் வெகுவாக குறைவதோடு தண்ணீரும் மிச்சமாகும்.
இரண்டு வாளி முறையில் பயன்கள்
1. தண்ணீர் சேமிப்பு
இரண்டு வாளி முறையை பயன்படுத்தி பாத்திரம் கழுவ ஒரு வாளியில் சோப்பு நீரும், மற்றொரு வாளியில் சுத்தமான நீரும் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகமான பாத்திரங்களாக இருந்தாலும் ஒரு தொட்டியில் பாத்திரங்களை தேய்த்து மற்றொரு தொட்டியில் சுத்தமான நீரால் கழுவும் போது அடிக்கடி குழாயை திறக்கும் வேலை இருக்காது. இதனால் குறிப்பிட்ட அளவு தண்ணீரை சேமிக்க முடியும். மேலும் பாத்திரம் கழுவும் குழாய் அடிக்கடி திறந்து மூடுவது குறைவதால் பழுதாவதும் தாமதப்படும்.
2. நேரம் மிச்சம்
ஒரு பாத்திரத்தை எடுத்து ஒரு தொட்டியில் சோப்பு நீரில் தேய்த்து உடனே மற்றொரு தொட்டியில் சுத்தமான நீரில் கழுவும் இரண்டு வாளி முறையில் பாத்திரம் கழுவுவதால் எவ்வளவு அதிகமான பாத்திரங்கள் இருந்தாலும் ஒரு தொட்டியில் கழுவுவதை விட விரைவாக பாத்திரங்களை சுத்தப்படுத்த முடியும். சாதாரணமாக ஒரு தொட்டியில் 15 நிமிடங்கள் பாத்திரம் கழுவினால் அதில் பாதியாக ஏழு நிமிடங்களிலேயே இரண்டு வாளி முறையில் பாத்திரங்களை கழுவி சுத்தப்படுத்தலாம்.
இதனால் நேரம் மிச்சமாவதோடு அலைச்சலும் இருக்காது. டென்ஷனும் இருக்காது. நேரம் மிச்சமாவதால் அந்த நேரத்தில் அடுத்த வேளையில் கவனம் செலுத்துவதோடு, பாத்திரம் கழுவ வேண்டுமே என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் எழாமல் சங்கடமில்லாமல் சமைக்கலாம்.
3. முழுமையான சுத்தம்
சோப்பு நீரில் தேய்த்த உடன் சுத்தமான நீரில் உடனுக்குடன் பாத்திரங்களை கழுவும் இரட்டை வாளி முறையால் சோப்பு நீரில் இருக்கும் ரசாயனங்கள் பாத்திரங்களில் ஒட்டி காய்ந்து போகாது.மேலும் விரைவாக சுத்தப்படுத்துவதோடு பாத்திரங்களை அழுத்தி தேய்த்து கழுவ வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் பாத்திரங்கள் பளிச்சென காட்சி தருவதோடு முழுமையாக பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு சுத்தமாகி விடும். இதனால் மனதிருப்தி ஏற்படுவதோடு வீட்டின் சுகாதாரம் பாதுகாக்கப்படும்.
இரட்டை வாளி முறையை பயன்படுத்தி பாத்திரங்கள் கழுவினால் வேலைக்கு ஆட்களை அமர்த்தி வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வராது. ஏனெனில் தண்ணீர் மிச்சமாவதோடு, நேரமும் குறைந்த அளவே தேவைப்பட்டு பாத்திரம் முழுமையாக சுத்தமாகி விடுவதால் இது ஒரு வேலையா? என்ற எண்ணம் மனதில் ஏற்படும். இதனால் குறிப்பிட்ட அளவு பணத்தை சேமித்து வீட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாம்.
இதனால் சமையல் செய்யும் வேலையும் எளிதாகி மன நிறைவுடனும்,மகிழ்ச்சியுடனும் சமைப்பதால் சமையலின் சுவை அதிகமாகி குடும்பத்தினர் அனைவரின் பாராட்டை பெறுவதோடு அவர்களின் ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுகாக்கலாம்.
இந்த எளிய முறையை உங்கள் தினசரி சமையலறை வழக்கத்தில் பின்பற்றுவதன் மூலம், பாத்திரம் கழுவும் அலைச்சலும் சலிப்பும் முற்றிலும் நீங்கும். மிகக் குறைந்த நேரத்தில் பாத்திரங்களை பளிச்சென்று சுத்தமாக்கி, மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் சுவையான உணவைச் சமைக்க முடியும்.