

சமீபத்தில் நான் கிராமத்தில் வசிக்கும் என் நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன். அவர், தன் வீட்டில் இரண்டு மூன்று நாய்கள் மற்றும் ஆடுகளை வளர்த்து பராமரித்து வருபவர். நான் போயிருந்த சமயம் அவர் பேர குழந்தைகள் மற்றும் அண்டை வீட்டு குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றார். இது நீங்கள் செல்லப்பிராணிகள், ஆடுகள் வளர்ப்பதன் மூலம் வந்த நோய். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று நோய். இதன் பெயர் Zoonotic Disease என்றேன்.
"இதற்கெல்லாம் உங்கள் அறியாமைதான் காரணம்... 92 சதவீதம் உரிமையாளர்கள் உயிரிலி பராசிட்டிக் (parasitic) நோய்களைப் பற்றி அறியவில்லை. 60%க்கும் அதிகமான செல்லப்பிராணிகள் பொது இடங்களில் கழிவை கழிக்கின்றன. 55 சதவீதம் செல்லப்பிராணி உரிமையாளர்கள் அவைகளுக்கு முறைப்படி மருந்து கொடுப்பதில்லை. 40 சதவீதம் உரிமையாளர்கள் செல்லப்பிராணி கழிவுகளை தவறாக தூக்கி வெளியில் வீசுகிறார்கள். 6% உரிமையாளர்கள் வேக வைக்காத இறைச்சி கொடுக்கிறார்கள்.
ஆட்டுக்கொட்டகை சுத்தமாக பரமாரிக்கப்படவில்லை. நாய்கள் மலம் கழித்த இடத்தில் உங்கள் பேர குழந்தைகளை விளையாட வைத்துள்ளீர்கள். இவை தான் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரக்காரணம்" என்று விளக்கினேன் .
செல்லப்பிராணிகளில் இருந்து தொற்றுகளைத் தவிர்க்க என்ன வழி?
ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை கால்நடை டாக்டர் கொடுக்கும் மருந்தினைக் கொடுக்கவும். செல்லப்பிராணி கழிவுகளை நன்கு எடுத்து அகற்றவும்.
செல்லப்பிராணிகள் பன்றி, எலி போன்றவற்றை வேட்டையாடும். இதை தவிர்க்கவும்.
குழந்தைகள் செல்லப்பிராணி கழிவுள்ள இடங்களில் விளையாடலைத் தவிர்க்கவும்.
செல்லப்பிராணி படுக்கை மற்றும் துணிகளை அடிக்கடி சுத்தமாக கழுவவும்.
செல்லப்பிராணிகளை தொட்ட பின்னர் கை, கால்களை சோப்பு மூலம் கழுவவும்.
இயல்பான சுகாதார வழிகாட்டுதல்களின்படி வைரஸ்கள் மற்றும் கிருமிகள் தடுப்பூசி செலுத்தவும்.
நாய்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்கள் :
Toxocariasis: மண் அல்லது நாய் மலம் மூலம் பரவும். இது கண்கள், கல்லீரல் அல்லது மூச்சுப்பாகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
Hookworm infection: இந்த நோய் தோலின் வழியாக நுழையும் கருவொளிகள் (larvae) காரணமாக ஏற்படுகிறது, இது தோலில் கசப்பான, அரிப்பான, சூடான தோல் புண்களை உருவாக்கும்.
Hydatid disease: நாய் மலம் போன்ற பராசைட் முட்டைகள் கலந்த உணவை சாப்பிடுவதால் பரவும். இதனால் உடலில் சிஸ்ட் (cysts) உருவாகும்.
Tapeworm infection: பாதிக்கப்பட்ட ஈசுகளைக் (fleas) உண்பதால் பரவும்.
Giardiasis: செல்லப்பிராணி மலம் கலந்த நீர் மூலம் பரவும். இதனால் குடல் வலி மற்றும் வாந்தி, வியர்வை போன்றவை ஏற்படும்.
Leptospirosis: பாதிக்கப்பட்ட நாய்கள் மூலம் பரவும்; இதனால் காய்ச்சல், மஞ்சள் காமாலை சிறுநீரக பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம்.
Rabies: கடித்து அல்லது தோல் உரிச்சல் மூலம் பரவும் உயிர்க்கொல்லியான வைரல் நோய்.
Ringworm: தோலில் தொற்றுநோய் ஏற்படுத்தும்.
எனவே செல்லப்பிராணிகள் வளர்க்க மேல சொன்ன வழிமுறைகளை முறையாக பின்பற்றினால் செல்லப்பிராணிகளுக்கும் அதனுடன் விளையாடும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு.