குழந்தைகள் படிப்பில் கவனம் குறைய காரணம் நம் வீடுதான்: வாஸ்துபடி அகற்றவேண்டிய - கடைபிடிக்க வேண்டிய விதிகள்!

படுக்கும் படுக்கை, பழுதான மின்னணு சாதனங்கள், செயல்படாத கடிகாரம் போன்றவை படிப்பறையில் இருந்தால் கவனச்சிதறல், சோம்பல், மன அழுத்தம் உருவாகும்; வாஸ்துப்படி இவற்றை நீக்கி, ஒழுங்கான அறை, நல்ல வெளிச்சம், ஊக்கமளிக்கும் படங்கள் மூலம் குழந்தைகளின் படிப்பு மேம்படும்.
vastu-tips
vastu-tips
Updated on

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கவனமாக படிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு குழந்தைகள் மேல் எழுவது பெரும்பாலானோர் வீடுகளில் வாடிக்கையாக உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி குழந்தைகள் படிக்கும் அறையில் எதிர்மறை ஆற்றலை வழங்கக்கூடிய பொருட்கள் இருந்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும்.

அந்த வகையில் வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறையில் கவனச்சிதறல், படிப்பில் ஆர்வமின்மை, மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய பொருட்களை இப்பதிவில் காண்போம்.

காயலான் கடைக்கு செல்லவேண்டிய உடைந்த படிப்பு மேசை மற்றும் நாற்காலி குழந்தைகள் படிக்கும் அறையில் படிப்பு மேசையும் நாற்காலியும் உடைந்து காணப்பட்டால் அதனை உடனடியாக மாற்றி விட வேண்டும். ஏனெனில் உடைந்த பொருட்கள் அனைத்துமே எதிர்மறை ஆற்றலின் ஆதாரமாக வாஸ்து சாஸ்திரத்தின்படி கருதப்படுகிறது.

குழந்தைகளின் ஒருமுகத் தன்மையை தடுக்கக்கூடிய உடைந்த பொருட்கள் படிக்கும் அறையில் இருந்தால் அவற்றை அகற்றிவிட்டு புதிய பொருட்களை வாங்கும்போது குழந்தைகளின் மகிழ்ச்சி அதிகரிப்பதோடு கவனமும் ஒன்று கூடி படிப்பில் வெற்றி அடைவார்கள்.

மூளையை மங்க வைக்கும் மங்கலான வெளிச்சமும் சிதறிய புத்தகங்களும் படிக்கும் அறையில் சிதறிய நிலையில் மேசை மீதிருக்கும் புத்தகங்களும், ஒழுங்கற்ற பொருட்களும், பழைய குறிப்புகள் அடங்கிய நோட்டுகளும் படிக்கும்போது குழந்தைகளின் கவனத்தை சிதறடிக்கும். மேலும் மங்கலான வெளிச்சம் குழந்தைகளின் கண்களுக்கு சோர்வை உண்டாக்கி சிரமத்தை ஏற்படுத்தும். ஆகவே படிக்கும் அறையை சுத்தமாகவும் ,ஒழுங்காகவும் பராமரிப்பதோடு நல்ல வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் உறுதி செய்தால் குழந்தைகள் படிப்பதில் ஈடுபாடு காட்டி முதல் மதிப்பெண்கள் பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படியுங்கள்:
பிறந்த குழந்தையை பார்க்கச் செல்லும் முன் கடைபிடிக்க வேண்டிய மரியாதை விதிகள்!
vastu-tips

தூரப் போடவேண்டிய குறைபாடுள்ள மின்னணு சாதனங்கள்

உபயோகமில்லாத மற்றும் உபயோகிக்கும் நிலையில் இல்லாத பழைய ஹெட் போன்கள், பழுதடைந்த மடிக்கணினிகள், உடைந்த சார்ஜர்கள் அல்லது பயனற்ற சாதனங்கள் படிக்கும் அறையில் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றிவிட வேண்டும். ஏனெனில் இவை படிக்கும் அறையை ஒழுங்கீனமாக்கி படிப்பதில் தொய்வு ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. மேலும் செயல்படாத கடிகாரம் அசுபமாக கருதப்படுவதால் அதனையும் படிக்கும் அறையிலிருந்து அகற்றி விடுவது நல்லது.

படுக்கையில் அமர்ந்து படித்தால் பலன் இல்லை

படிப்பதற்கென்று தனியாக ஒரு படிப்பு மேசையை பயன்படுத்தாமல் படுக்கையில் அமர்ந்து படிப்பது கவனச்சிதறலை ஏற்படுத்தி சோம்பலை அதிகரிக்கும். தூக்க தேவதையின் இருப்பிடமாக படுக்கை இருப்பதால் தூங்குவதற்கு மட்டும் படுக்கையை பயன்படுத்த வேண்டும். படிப்பதற்கு அல்ல.

படிக்கும் அறையில் வைக்கவேண்டிய புகைப்படங்கள்

நேர்மறை ஆற்றலை வழங்கக்கூடிய வெற்றியை உணர்த்தும் படங்களையும், பார்த்தவுடன் ஊக்கமளிக்கும் படங்களையும், கண்களுக்கு விருந்தாகும் இயற்கை காட்சிகள் உள்ள படங்களையும் குழந்தைகள் படிக்கும் அறையில் வைத்தால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரித்து படிப்பில் ஆர்வம் ஏற்படும். ஒரு போதும் எதிர்மறை உணர்வுகளை சித்தரிக்கும் சோகம் வன்முறை போன்ற படங்கள் வைப்பதை தவிர்க்கவேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com