கட்டிலுக்கு அடியில் இந்த 5 பொருட்களை வச்சா நிம்மதியான தூக்கம் ஓடிப்போயிடுமாம்!

வாஸ்து படி உங்கள் தூக்கத்தையும் பணத்தையும் கெடுக்கும் பொருட்கள் என்னென்ன தெரியுமா?
வாஸ்து பொருட்கள்
வாஸ்து பொருட்கள்Gemini image
Updated on

சிறிய வீடாக இருந்தாலும் பெரிய வீடாக இருந்தாலும் எளிதாக பொருட்களை எடுக்கவேண்டும் என்பதற்காக வீட்டின் லேப்ட், லோ ரூஃப் போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட பொருட்களை வைக்காமல் கட்டிலுக்கு அடியில் வைத்து பயன்படுத்துவதே பலரின் வாடிக்கையாக உள்ளது. பெரும்பாலான வீடுகளில் கட்டிலுக்கு அடியில் காலியாக இடம் இருப்பதையே காணமுடியாது.

ஆனால் படுக்கையறை வாஸ்துபடி சில பொருட்கள் வைத்தால் தூக்கமின்மை, பண இழப்பு குடும்ப பிரச்னை ஏற்படும். அந்த வகையில் கட்டிலுக்கு அடியில் வைக்க கூடாத பொருட்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

மனிதனை புத்துணர்ச்சியாக்கும் தூக்கத்தை கொடுக்கும் படுக்கும் இடமான மரப்பலகை என்பது வீட்டில் நேர்மறை ஆற்றலை தக்க வைத்து செழிப்பை உண்டாக்கும் முதன்மையான இடமாக உள்ளது. தூங்குமிடத்தை வெறுமனே கட்டில் எனக் கருதாமல் கட்டிலுக்கு அடியிலும் கட்டிலை சுற்றி உள்ள இடத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது வீட்டின் முன்னேற்றத்திற்கு வாஸ்து படி சிறந்ததாகும்.

வாஸ்து படி கட்டிலுக்கு அடியில் வைக்க கூடாத பொருட்கள்:

1. எளிதாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மொபைல் சார்ஜர்கள், எலக்ட்ரானிக் வயர்கள் அல்லது பழைய பேட்டரிகளை கட்டிலுக்கு அடியில் வைப்பது வாஸ்து குறைபாடாக கருதப்படுகிறது. ஏனெனில் தூங்கும் இடத்தில் ஒயர்கள் தொங்கி கொண்டிருப்பது மன அமைதியை குலைத்து தூக்கத்தை கெடுத்துவிடும். ஆகவே வாஸ்துபடி அசுபமானதாக கருதப்படும் மேற்கூறிய பொருட்கள் வைப்பதை தவிர்ப்பதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

வாஸ்து பொருட்கள்
வாஸ்து பொருட்கள்Gemini image

2. பழைய செய்தித்தாள்கள், பயனற்ற காகிதங்கள் தேவையற்ற ரசிதுகள் போன்றவற்றை கட்டிலுக்கு அடியில் வைத்தால் வாஸ்துபடி எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதோடு அதனுடைய பழைய நெடி சுவாச பிரச்னையை உண்டாக்கி உடலுக்கும் கேடு விளைவிக்கும். ஆகவே கட்டிலுக்கடியில் இவை இருந்தால் உடனே அப்புறப்படுத்தி கட்டிலை காலியாக வைப்பதன் மூலம் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

3. கட்டிலுக்கு அடியில் உடுத்திய பழைய துணிகள் சேர்த்து வைத்தால் வாஸ்துபடி தடைகள் ஏற்பட்டு குடும்பத்தில் பிரச்னையை அதிகரித்து முன்னேற்றம் தடைப்படும்.

இதையும் படியுங்கள்:
எறும்புகள் வீட்டை முற்றுகையிடுவது ஏன்? தடுக்கும் எளிய வழிகள்!
வாஸ்து பொருட்கள்

ஆகவே தேவையற்ற தடைகள் ஏற்படாமல் இருக்கவும், எந்த ஒரு செயலும் தங்கு தடையின்றி நடைபெறவும் பழைய மற்றும் கிழிந்த துணிகளை கட்டிலுக்கு அடியில் சேமித்து வைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

4. கூர்மையான பொருட்களான கத்தரிக்கோல், கத்தி,ஊசி, பின் போன்றவற்றை கட்டிலுக்கு அடியில் வைத்தால் சிறிய பிரச்னைகள் கூட குடும்பத்தில் பெரிதாக வெடிக்கும் என வாஸ்து சாஸ்திரத்தின்படி நம்பப்படுகிறது. ஆகவே குடும்பத்தின் ஒற்றுமைக்காக கூர்மையான பொருட்களை தூங்கும் கட்டிலுக்கு அடியில் வைப்பதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

5. அடிக்கடி தேவைப்படும் என்பதற்காக மருந்து பொருட்களை கட்டிலுக்கு அடியில் வைப்பது பலரின் செயலாக உள்ளது. ஆனால் இந்த பழக்கம் நாள்பட்ட நோய்களுக்கு வழி வகுப்பதோடு ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என வாஸ்து சாஸ்திரத்தின் படி நம்பப்படுகிறது. ஆகவே மறந்தும் மருந்துப் பொருட்களை கட்டிலுக்கு அடியில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது.

இதையும் படியுங்கள்:
வீட்டின் வாசலில் இந்த 5 பொருட்களை ஒருபோதும் வைக்காதீங்க!
வாஸ்து பொருட்கள்

கட்டிலுக்கு அடியில் இருக்கும் இடம் காலியாக இருந்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து அமைதியான தூக்கம் கிடைக்கும் என வாஸ்துபடி நம்பப்படுகிறது. இவை எல்லாவற்றையும்விட கட்டிலுக்கடியில் எந்த பொருள் இல்லாமல் இடம் காலியாக இருந்தால் சுத்தம் செய்வது எளிதாக இருப்பதோடு நிம்மதியான தூக்கம் கிடைத்து மன அழுத்தம் குறைந்து உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

இந்த வாஸ்து பொருட்கள் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் படுக்கையறையில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் விலகி, மன அழுத்தம் குறைந்த அமைதியான தூக்கத்தையும், குடும்பத்தில் நேர்மறை அதிர்வுகளையும் உடனடியாகப் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com