சிறிய பால்கனிகளில் கண்கவர் செங்குத்து தோட்டம் அமைக்க சில யோசனைகள்!

Some ideas for setting up a balcony garden
Balcony flower garden
Published on

சிறிய வீடோ, பெரிய வீடோ தற்போது அழகுக்காக பெரும்பாலும் பால்கனிகளில் தொங்கவிடப்படும் அல்லது வைக்கப்படும் பூந்தொட்டிகளும் அதில் மலர்ந்திருக்கும் வண்ணப் பூக்களுமே வீட்டின் வெளிப்புற அழகை மேம்படுத்த உதவுகிறது. இந்த பூந்தொட்டிகள் விதவிதமான வடிவங்கள் மற்றும் அளவுகளில் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதேசமயம் நாமும் நமது கற்பனை மூலம் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு இதை உருவாக்கலாம். பால்கனி தோட்டக்கலை குறித்தான சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் காணலாம்.

சிறிய வீடுகளில் இருக்கும் சிறிய பால்கனிகளுக்கு ஏற்ற சில அருமையான செங்குத்தான (Vertical) தோட்டக்கலை ஆலோசனைகளைப் பார்ப்போம்.

பழைய ஏணியைப் பயன்படுத்தி ஏணி செடி நிலையை (Ladder Plant Stand) உருவாக்கலாம். அலங்கார செடிகள், சதைப்பற்றுள்ள தாவரங்கள் அல்லது மூலிகை செடிகள் வளர்த்து அழகாகக் காட்சிப்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
முதுமையை இனிமையாக்க 7 ரகசியங்கள்!
Some ideas for setting up a balcony garden

தொட்டிகளில் வளர்க்கப்படும் செடிகளைக் காட்சிப்படுத்தவும், வடிகால் வசதியை மேம்படுத்தவும் திறந்த-பட்டை அலமாரிகளுடன் கூடிய உறுதியான அலமாரி அலகுகளை (Shelving Units) நிறுவலாம்.

ட்ரெல்லிஸ் (Trellis) எனப்படும் குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி என்பது  தாவரங்கள் செங்குத்தாக வளர உதவும் ஒரு எளிய தோட்ட அமைப்பாகும். இது பொதுவாக, ஒரு திறந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளதால் தாவரங்கள் எளிதாக மேல்நோக்கி வளர ஏதுவாகிறது.

அடுத்து, தொங்கும் செடிகள் குறித்து காணலாம். பால்கனி தண்டவாளங்கள் (railings) அல்லது கூரைகளில் இருந்து லகுரக தொங்கும் கூடைகளை (Hanging Baskets) தொங்கவிட்டு, பூக்கள் அல்லது கொத்தமல்லி கீரைகளை வளர்க்கலாம்.

துளசி, புதினா போன்ற மூலிகைகள் அல்லது தக்காளி, முள்ளங்கி போன்ற சிறிய காய்கறிகள் மற்றும் சாமந்தி உள்ளிட்ட மலர்களை வளர்க்க Railing Planters  எனப்படும் பால்கனி தண்டவாளங்களில் உறுதியான கார்டன் துணி அல்லது லகுவான அழகான பிளாஸ்டிக் டப்பாக்களை வைக்கலாம்.

Over-the-Door Hanging Planters முறையில் எந்த நிலையான உறுதியான கதவுக்கும் மேல் இணைக்கக்கூடிய பைகள் அல்லது அலமாரிகளுடன் தொங்கும் செடிகளைப் பயன்படுத்தி அழகாக்கலாம்.

இதையும் படியுங்கள்:
நாய்கள் உங்களைத் துரத்தினால் என்ன செய்ய வேண்டும்? உயிர் காக்கும் வழிமுறைகள்!
Some ideas for setting up a balcony garden

இவை தவிர, தரை இடத்தை அதிகமாக ஆக்கிரமிக்காமல் பல மூலிகைகள் மற்றும் கீரைகளை செங்குத்தாக வளர்க்க அடுக்கக்கூடிய செடிகளை Stackable Planters பயன்படுத்தவும். வெவ்வேறு உயரங்களில் வண்ணமயமான பூக்கள் அல்லது கீரைகளுடன் ஒரு மாறுதலான விளைவை உருவாக்க தொட்டிகளில் செடிகளை அடுக்கி வைக்கவும். மேலும், நீங்கள் அறிந்த DIY செங்குத்து தோட்டக்கலை யோசனைகளையும் பயன்படுத்தலாம்.

ஒரு மரத்தாலான தட்டுகளில் வளமான மண்ணை நிரப்பி, உங்களுக்குப் பிடித்தவற்றை நடுவதன் மூலம் செங்குத்து தோட்டமாக மாற்றும் பாலெட் தோட்ட சுவர் (Pallet Garden Wall) PVC குழாய்களை தாவரங்களுக்கு ஏற்ற வகையில் வெட்டி வைப்பதன் மூலம்  புதுமையான செங்குத்து தோட்டக்கலை கட்டமைப்புகளை உருவாக்கலாம்.

Hanging Shoe Organizer Garden முறையில் மூலிகைகள் அல்லது பூக்களுக்கான தனிப்பட்ட பைகளுடன் கூடிய செழிப்பான செங்குத்து தோட்டத்தை வடிவமைக்கலாம்.

இந்த முறைகளை நல்லதொரு தோட்டக்கலை நிபுணர் ஆலோசனை மற்றும் வீட்டின் வடிவமைப்புக்கு ஏற்ற நேர்த்தியுடன் பயன்படுத்தி காண்பவர் கண்களுக்கு அழகியலையும் நமது மனதில் புத்துணர்ச்சியும் பெறலாம். அத்துடன் முறையான பராமரிப்பும் இருந்தால் பால்கனி தோட்டம் பரவசம் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com