
வாஸ்து படி 'கடிகார திசை'யானது எது?
வாஸ்து படி கடிகார திசையானது வீடு ஈர்க்கும் ஆற்றலில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். வாஸ்து படி தவறான திசையில் கடிகாரத்தைத் தொங்க விடுவது தீங்கை விளைவிக்கும்.
பழங்கால பெண்டுலம் சுவர் கடிகாரங்கள் வாஸ்துப்படி நல்ல ஆற்றலை பிரதிபலிக்கின்றன.
மரச் சுவர் கடிகாரங்களை கிழக்குப் பக்கம் வைக்க வேண்டும்.
உலோக கடிகாரத்தைப் தொங்கவிட வடக்கு திசை சிறந்தது.
வாஸ்துப்படி வட்டவடிவ கடிகாரங்கள் சிறந்தது என்று நம்பப்படுகிறது. மேலும் இது நேர்மறை அதிர்வுகளை அதிகரிக்கும்.
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் பெண்டுலம் கடிகாரத்தை வைப்பது நேர்மறையான சூழ்நிலையை வளர்ப்பதற்கும், சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கும் சிறந்த அணுகுமுறையாகும்.
கடிகாரம் வடக்கு பக்க சுவரில் மாட்டுவது சிறந்தது. அதாவது அது தெற்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்படி இருந்தால் பணக்கஷ்டம் வராது. குபேரனுக்கு உகந்த திசையாக வடக்கு திசையில் வைப்பதால் என்றென்றும் செல்வ வளம் நிறைந்திருக்கும்.
குடும்பத்தில் ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தால் கிழக்கு பக்கமுள்ள சுவரில் கடிகாரம் மாட்ட வேண்டும். அப்போது கடிகாரம் மேற்கு திசையைக் பார்த்தவாறு இருக்கும். வடகிழக்கு திசையிலும் நேர்மறை ஆற்றல் நிலவுவதாக கூறப்படுகிறது.
எக்காரணம் கொண்டும் கடிகாரத்தைப் மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் மாட்டக்கூடாது. இதனால் எதிர்மறை ஆற்றல் வீட்டினுள் ஆக்ரமித்துவிடும். பால்கனி சுவர்களில் கடிகாரங்களை மாட்டிவைக்கக் கூடாது.
வாஸ்துப்படி நீலம், கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற கடிகாரங்கள் பயன்படுத்தாமல் வெளிர் நிறத்தில் கடிகாரத்தைப் பயன்படுத்துவது நல்லது
உடைந்த மற்றும் நின்று போன கடிகாரங்களை அகற்றிவிட வேண்டும். அவை எதிர்மறை ஆற்றலை வீட்டுக்குக் கொண்டுவரும்.
காலண்டரை எந்த திசையில் மாட்ட வேண்டும்?
காலண்டரை எந்த திசையில் மாட்ட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அது வாஸ்து சாஸ்திரப்படி மாட்டியிருந்தால் வீட்டிற்கு மகிழ்ச்சியும், செழிப்பும் தருகிறது. அது மட்டுமல்ல, பழைய காலண்டர்களை எடுக்காமல் அதே இடத்தில் வைத்திருந்தால், வீட்டின் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்குத் தடை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
எப்போதும் புதிய காலண்டரை பழைய காலண்டர் மீது மாட்டி வைக்கக் கூடாது. இவ்வாறு செய்வதால் வாஸ்து தோஷம் அதிகரித்து அந்த வீட்டில் வசிக்கும் உறுப்பினர்களின் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றமும் பாதிக்கப்படும். பழைய காலண்டரை குப்பையில் போடாமல் ஓடும் நீரில் போட வேண்டும்.
வாஸ்து சாஸ்திரப்படி மேற்கு திசையில் காலண்டரை வைப்பது மங்களகரமாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த திசை ஓட்டத்தின் திசையாகக் கருதப்படுகிறது. மேற்கு திசையைக் தவிர வடக்கு நோக்கியும் வைக்கலாம். ஏனெனில் குபேரர் இந்த திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார்.
வாஸ்து சாஸ்திரப்படி ஒரு போதும் காலண்டரை தெற்கு திசையில் வைக்கக்கூடாது. தெற்கு திசையில் காலண்டரை வைப்பது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரப்படி ஒரு போதும் கதவுக்குப் பின்னால் காலண்டரை வைக்கக் கூடாது. வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் காலண்டரை வைக்கக் கூடாது. இது குடும்ப உறுப்பினரின் முன்னேற்றத்தை பாதிக்கும். கதவுக்கு அருகில் காலண்டர் இருக்கும் போது காற்றில் காலண்டர் பறக்க வாய்ப்புண்டு. இவ்வாறு பறப்பது அபசகுனமாகும்.
காலண்டரில் தேதி பார்க்கும் போது உங்கள் முகம் வடக்கு கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி இருக்கு வேண்டும். காலண்டரில், அழுபவர்கள் மற்றும் சோகமானவர்கள் படங்கள் இருக்கக் கூடாது. அது எதிர்மறை சக்தியை ஏற்படுத்தும். காலண்டர் மேற்கு திசையில் தொங்க விட்டால் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும். கிழிந்த காலண்டரை வீட்டில் உபயோகிக்கவே கூடாது. இது வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும்.
சாமி படம் மற்றும் இயற்கை எழில் கொண்ட காலண்டர்களை கிழக்கு, வடக்கு திசைகளில் மாட்ட வேண்டும். பிள்ளைகள் படிக்கும் இடத்தில் கிழக்கு மேற்கு திசைகளில் மாட்டினால் அவர்களுக்கு புத்தி கூர்மை அதிகரிக்கும்.