Walnut solves many problems.
Walnut solves many problems.

பல பிரச்னைகளைத் தீர்க்கும் வால்நட்!

நாம் அதிகம் எடுத்துக்கொள்ளாத உணவுப் பொருட்களில் வால் நட்டும் ஒன்றாகும். இவற்றைச் சாப்பிடுவதற்கான சிறந்த வழி எதுவென்றால், இரவு நேரத்தில் அவற்றை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, காலையில் சாப்பிடுவதுதான். இந்த வால்நட்டை சாப்பிடுவதால் நமக்கு பல பிரச்னைகள் தீரும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்:

சரும பளபளப்புக்கு வால்நட் சிறந்த தேர்வாகச் சொல்லப்படுகிறது. வால்நட்டில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மை சருமத்தை எப்போதும் ஹைட்ரேட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். மேலு,ம் அதில் உள்ள விட்டமின்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. இதனால் சருமம் எப்போதும் பளபளவென இருக்கும்.

அதிகமாக ஸ்மார்ட்போன், கணினி உள்ளிட்ட சாதனங்களைப் பார்ப்பதால், கண்ணுக்குக் கீழே கருவளையம் ஏற்படுகிறது. ஊற வைத்த வால்நட்டை தினசரி எடுத்துக்கொள்வதனால், இத்தகைய கருவளையங்கள் நீங்கும்.

வால்நட்டில் விட்டமின் பி5 மற்றும் விட்டமின் ஈ அதிகமாக இருப்பதால், சருமத்தில் உள்ள துளைகள் அடைபட்டு பளபளப்பாக இருக்க உதவும்.

இதன் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை சம நிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனால் முகப்பரு போன்ற தோல் பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

பல ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்து இருப்பதால் நமது மூளை ஆரோக்கியத்துக்கு வால்நட்ஸ் ஏற்றதாகும்.

வால்நட்டில், ‘மெலடோனின்’ என்ற ரசாயனம் இருப்பதால், இது நமக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது. அதேபோல, தூக்கத்தை ஊக்குவிக்கும் மக்னீசியம் மற்றும் செரடோனின் கலவைகளும் இதில் உள்ளன.

உடல் எடையைப் பராமரித்து, உடல் எடை இழப்புக்கு அதிகம் உதவி புரிகிறது வால்நட்ஸ். மேலும், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.

இவற்றில் இருக்கும், ‘பாலிஃபினால்ஸ்’ எனப்படும் கலவை வீக்கம், அழற்சி போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது.

வால்நட்டை தினசரி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டு, பலவிதமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வால்நட் சாப்பிடுவதால் பலவிதமான நன்மைகள் நம் உடலுக்குக் கிடைக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com