
அன்றாடம் ஓடி உழைத்து களைத்துப்போகும் மனிதனுக்கு புத்துணர்வு தருவது ஆழ்ந்த தூக்கம்தான். சிலர் கட்டாந்தரையில் படுத்தால் கூட சுகமாய் தூங்கிவிடுவார்கள். இன்னும் சிலர் பஞ்சு மெத்தையில் படுத்தாலும் தூக்கம் வராமல் தவிப்பார்கள். வாஸ்து சாஸ்திரப்படி படுக்கையறை அமைந்தால் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.
நமது பூமி மிகப்பெரிய காந்தக்கல் போன்றது. பூமியின் வடதுருவம் காந்த அதிர்வுகளை எழுப்பி அனுப்புகிறது. தென் துருவம் அந்த அதிர்வுகளை பெறுகிறது. இந்த அதிர்வுகளின் ஓட்டம் தொடர்ந்து இரவிலும் பகலிலும் இடைவிடாது நடந்துகொண்டே இருக்கிறது.
நமது உடலில் பல்வேறு அமைப்பில் இரும்புச் சத்து உள்ளது மூனையில் உள்ள திசுக்களில் இருந்து பல்வேறு அதிர்வுகள் உற்பத்தியாகி உடல் முழுவதும் பரவி பாதங்கள் வரை சென்றடைகின்றன. அதனால் நமது உடலும் ஒரு காந்த சக்திபோல் செயல்படுகிறது. இதனால்தான் தலைப்பாகம் வட துருவமாகவும் பாதங்கள் தென் துருவமாகவும் செயல்படுகிறது என்கிறது அறிவியல் தெற்கில் தலை வைத்துபடுப்பது நல்லது என்கிறது வாஸ்து சாஸ்திரம். அந்த திசையில் தலை வைத்து படுத்தால் தான் ஆழ்ந்த தூக்கம் வரும்.
தென்திசையில் தலை வைத்துப்படுப்பதால் தலையில் வடதுருவ சக்தியும் பூமியின் தென்துருவ சக்தியும் ஒன்றை ஒன்று ஈர்த்து நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும்.
எந்த பெட்ரூமில் பெட் அமைத்தாலும் தெற்கு திசையில் உள்ள சுவரை ஒட்டியே தலைவைத்து படுக்கும் வகையில் அமைக்க வேண்டும். வடக்கு திசையில் தலை வைத்து கண்டிப்பாக படுக்க கூடாது. கிழக்கு மேற்கு திசைகளில் தலை வைத்து படுக்கலாம் அதில் தவறில்லை.
பெட்ரூம் கதவு, பாத்ரூம் கதவு எதிரே படுக்கக்கூடாது. முகம் பார்க்கும் கண்ணாடி எதிரே இருக்குமாறு படுக்கக்கூடாது.
பெட்ரூமின் வடக்கு கிழக்குச் சுவர்களில் அதிகமாக எடை உள்ள பொருட்களை வைக்கக்கூடாது கோணமாக படுக்கை போடக்கூடாது.
கிழக்கு திசையானது சூரியனின் சக்திகளை நன்றாக ஈர்த்து பரப்புவதால் கிழக்கில் தலை வைத்து படுப்பதன் மூலம் நல்ல சக்தி நமக்கு கிடைக்கும் மூளை சுறுசுறுப்புடன் செயல்பட்டு படிப்பிலும் செயலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
குழந்தைகள் கிழக்கு திசையில் தலை வைத்துப்படுத்தால் அவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மேற்கில் தலை வைத்து படுப்பதால் கனவு தொல்லை ஏற்படலாம்.
வடக்கில் தலை வைத்துப்படுப்பதால் உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்படும். தெற்கில் தலை வைத்துப் படுப்பதுதான் சந்தோஷத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் தரும்.