
கோடையில் தினம் தினம் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. வெளியில் இருந்து வீட்டுக்கு வந்தாலே சோர்வு அதிகமாகிறது. வீட்டிலும் ஓய்வெடுக்க முடியாத அளவு வெப்பம் கடினமாக இருந்தாலும் உங்கள் வீடு உங்களை ரிலாக்ஸ் செய்யவேண்டும்தானே ? அதற்கேற்ப சிறிய மாற்றங்களை செய்தால் நம் வீட்டின் தோற்றத்தை ஏசி போல கூலாக மெருகூட்டலாம். வீட்டில் வெப்பநிலையை குறைக்கலாம்.
டிக்ளட்டரிங் செய்யுங்கள்.
கோடை வெயில் வாட்டுகிறது. வெளியே அனல் பறக்கிறது. வீட்டின் உள்ளேயும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதற்கு செய்ய வேண்டியது. தேவையில்லாத பொருட்களை தவிர்த்துவிடுங்கள். அதற்கு பெயர்தான் டிக்ளட்டரிங் . குளிர்காலத்தில் மட்டுமே உபயோகப்படுத்த தேவையான ஜாக்கெட், ஸ்வெட்டர் / போர்வைகள், தரை விரிப்புகள் போன்றவற்றை வெளியே எடுக்காதீர்கள்.
ஜன்னலில் பருத்தி துணிகளை போடுங்கள்.
அதிகபட்ச சூரிய ஒளியை தடுக்கும் வகையில் அடர் வண்ணங்களில் திரைச்சீலைகளை ஜன்னலில் தொங்கவிடவும். பருத்தி மற்றும் கைத்தறி போன்ற கோடைகாலத்துக்கு உகந்த துணிகளை பொருத்தலாம்.
மொட்டை மாடியில் சுண்ணாம்பு அடிப்பது.
வீடு வெப்பமாக இருப்பதற்கு முதல் காரணம் மின்விசிறி. மின்விசிறியில் இருந்து காற்று வந்தாலும், அது வெப்ப காற்றுதான். பகல் முழுவதும் மாடியில் உள்ள வெப்பம் மிக விரைவாக தரை இறங்கும். இதனால் இரவு நேரத்தில் மொட்டை மாடி குளிராக இருந்தாலும் வீட்டு அறையில் சூடாக உள்ளது. முதலில் மொட்டை மாடியில் தற்காலிகமாக வெள்ளை சுண்ணாம்பு அடிப்பது, ஒரு சிறந்த வழியாகும். குறைந்த விலையில் வெப்பத்தை கட்டுப்படுத்த பிரத்யோகமாக பெயிண்ட் கிடைக்கிறது . அதனால் வெப்பம் தரையிறங்காமல் கட்டுப்படுத்தப்படும்.
மின் விசிறிக்கு அடியில் ஐஸ் கட்டிகள்.
முடிந்த அளவு சீலிங் மின் விசிறிக்குப் பதிலாக டேபிள் மின்விசிறியை பயன்படுத்தலாம். இதனால் ஜன்னலில் இருந்து வரும் இயற்கையான காற்றை நமது பக்கம் திருப்ப முடியும். டேபிள் ஃபேன் பின்புறத்தில் சற்று தொலைவில் பக்கெட்டில் நீரை வைத்தால் இன்னும் குளிர் காற்று கிடைக்கும்.
சீலிங் மின்விசிறி பயன் படுத்தும்போது, அதன் கீழே சிறிய அளவில் தட்டில் ஐஸ் கட்டிகள் வைக்கும்போது அதன் மேல் காற்றுப்பட்டு குளிர்காற்று கிடைக்கும். இரவில் உறங்கும் முன்பு தரையில் சிறிது நீர் தெளித்து அதன் பின் காய்ந்த பின் படுத்தால் தரை குளிர்ச்சியாக இருக்கும்.
ஜன்னலில் ஈரத்துணி.
வீட்டில் பழைய போர்வை. இருந்தால், அதை தண்ணீரில் நனைத்து ஜன்னலில் தொங்கவிடலாம். இதனால் ஜன்னலில் வெளிப்புறத்தில் ஆவியாதல் நடக்கும். இயற்பியல் விதிப்படி ஒருபுறம் ஆவியாதல் நடந்தால் மறுபுறம் குளிராவுதல் நடக்கும். எனவே ஜன்னலில் ஈரமான போர்வை, துண்டுகளை தொங்கவிட்டால் அறை முழுவதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும் ஆணிகள் இருந்தால் அதிலும் ஈரத்துணிகளை தொங்கவிடலாம்.
காட்டன் படுக்கைகள்.
செயற்கை நார்களை பயன்படுத்தி உருவான படுக்கைகளில் படுப்பதை மற்றும் சீட்டுகளில், சோபாவில் உட்காருவதை தவிர்க்கவும் . கோடை காலத்தில் முடிந்தவரை காட்டன் உடைகளை அணிய வேண்டும். மாடி வீட்டில் கூரையில் இரவில் நீரை தெளித்து குளிர்ச்சி படுத்தலாம்.
பூச்செடிகள் பால் கனியில்.
வீட்டில் பால்கனி இருந்தால் சின்ன சின்ன பூச்செடிகள், குரோட்டன்ஸ் செடிகளை தொட்டியில் வைக்கலாம். கொடி வகைகளை வளர்ப்பதால் அனல்காற்று தவிர்க்கப்படும்.
மேலும் வீட்டிற்குள் வளர்க்கப்படும் இண்டோர் பிளான்ட்களை வளர்ப்பதால் குளிர்ச்சியான காற்று உள்ளே வரும்.
நீச்சத்து நிறைந்த பழங்கள்.
கோடைகாலத்தில் உடல் வெப்பத்தை தணிப்பது முக்கியம். அடிக்கடி நீர் அருந்துவதால் வெப்பம் தணியும் ஈரப்பதம் தக்க வைக்கப்படும் அதேபோல் தர்பூசணி முலாம்பழம் வெள்ளரி போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களையும் ஜுஸ்கள், காய்கறிகளையும் உட்கொள்வது சூட்டை தணிக்கும்
மேலும் ஜன்னலில் உள்ள திரைசீலைகள் மீதுஸ்ப்ரே பாட்டில் வைத்து தண்ணீரை தெளித்து பயன்படுத்தலாம். அதனால் வெளியில் இருந்து வரும் வெப்பக்காற்று அறைக்குள் வரும்போது நமக்குக் குளிர்ச்சியாக இருக்கும் இதனால் அறையும் குளிர்ச்சி அடையும்.
இதனை கோடைக்காலத்தில் செய்து வீட்டை குளு குளுவென மாற்றி குளிர்ச்சி பெறலாம்.