எதற்கும் பயப்படுபவரா நீங்கள்? அதற்கான காரணங்கள் தெரிஞ்சுக்கணுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

woman screaming in fear
Phobic anxiety disorders
Published on

பயம் தேவையற்றது என்று பொதுவாகச் சொன்னாலும், எல்லோருக்கும் அவ்வப்போது ஏதாவதொரு பயம் வந்து செல்வதுண்டு. சிலருக்குச் சின்னச்சின்ன செயல்களுக்கெல்லாம் (தகவல்களுக்கெல்லாம்) பயம் வருகிறது. இந்தப் பயத்தால் அவர்கள் அடையும் துன்பம் அதிகமானது. சிலருக்குக் கரப்பான் பூச்சியைக் கண்டால் பயம், சிலருக்குத் தண்ணீரைக் கண்டால் பயம், சிலருக்குப் பூனையைக் கண்டால் பயம், சிலருக்கு இரத்தத்தைக் கண்டால் பயம், சிலருக்குப் பயணம் செய்யப் பயம், சிலருக்குப் படிப்பை நினைத்தால் பயம்… என்று ஏதாவதொரு பொருளைப் பார்த்தோ அல்லது செயலை நினைத்தோப் பயம் கொண்டு துன்பப்படுவதை அச்சக்கோளாறு (Phobia) என்று சொல்கின்றனர்.

குடும்பத்தில் அல்லது சுற்றுப்புறத்தில் ஏற்படுகின்ற நிகழ்வுகள், மனதிற்குள் ஏற்படுத்தும் குழப்பமான எண்ணங்கள் போன்றவற்றாலும், வளரும் பருவத்தில் மனதில் ஆழமாகப் பதிந்த அல்லது பாதித்தவைகளால் ஏற்படுத்தும் விளைவுகளாலும் இந்த அச்சக்கோளாறுகள் ஏற்படுகின்றன. இத்தகைய அச்சக்கோளாறுகளைப் பட்டியலிட்டு ஒரு இணையதளம் செயல்பட்டு வருகிறது.

இந்த இணையதளத்தில் அகர வரிசையிலான அறிவியல் - அச்சக்கோளாறு (Alphabetized Scientific – Phobia), அகவரிசைப்படுத்தப்பட்ட அச்சக்கோளாறு – அறிவியல் (Indexed Phobia – Scientific) எனும் இரு வகையான பட்டியல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

அகர வரிசையிலான அறிவியல் – அச்சக்கோளாறு எனும் தலைப்பில் சொடுக்கினால், திறக்கும் பக்கத்தில் ஆங்கில எழுத்துக்களின் அகர வரிசையில் பல அச்சக்கோளாறுகளின் அறிவியல் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ஆங்கிலத்திலான அப்பெயர்கள் தொடங்கும் ஆங்கில எழுத்தின் வழியாக வரிசைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு அச்சக்கோளாறுக்கும் அடிப்படையான காரணங்கள் குறித்த சிறு குறிப்பும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
சிக்மா வகைப் பெண்களின் சிறப்பியல்புகள் தெரியுமா?
woman screaming in fear

அகரவரிசைப்படுத்தப்பட்ட அச்சக்கோளாறு – அறிவியல் எனும் தலைப்பில் சொடுக்கினால் திறக்கும் பக்கத்தில், அச்சக்கோளாறுக்கான அடிப்படைக் காரணம், ஆங்கில எழுத்துக்களின் அகர வரிசையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்த அடிப்படைக் காரணத்தைக் கொண்டு, அந்த அச்சக்கோளாறின் அறிவியல் பெயரை அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த இணையதளம் அச்சக்கோளாறு குறித்த முழுமையான செய்திகளைக் கொண்டிருக்காவிட்டாலும், எத்தனை விதமான அச்சக்கோளாறுகள் இருக்கின்றன? அவற்றுக்கான அடிப்படைக்காரணங்கள் என்ன? என்பதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள உதவுவதாக இருக்கின்றது.

இந்த இணையதளத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் http://phobialist.com/எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com