உங்கள் வாழ்க்கை நீங்கள் நினைத்தது போல் அமைய வேண்டுமா?

Want your life to turn out the way you envisioned it?
Want your life to turn out the way you envisioned it?https://ta.quora.com
Published on

ம் வாழ்வில் சிறிய செயல்கள் முதல், பெரிய செயல்கள் வரை ஒரு நாளில் பல முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கும். அதில் நாம் எடுக்கும் சில முடிவுகளால், ‘நாம் ஏதேனும் தவறான முடிவைத் தேர்ந்தெடுத்து விட்டோமோ’ என்று எண்ணுபவரா நீங்கள்? தவறான முடிவுகள் எடுக்காமல் இருப்பதற்கான ஐந்து வழிகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. ஒருவரை விரும்புவது: அன்பு, பாசம், ஈர்ப்பு என்று ஏதோ ஒன்றினால் ஒருவர் மீது ஈர்க்கப்பட்டு அவர்களுடன் உறவில் இருப்போம். அப்படி உறவில் இருக்கும் சில காலங்கள் கழித்து இவர்களைத் தவறாகத் தேர்ந்தெடுத்து விட்டோமோ என்று எண்ணுவது மிகப்பெரிய தவறாகும்.

2. தோல்வி: நமக்குப் பிடித்த ஒன்றை வருமோ, வராதோ என்று தெரிந்து கொள்வதற்காக நாம் முயற்சி செய்திருப்போம். ஒருசில சமயம் அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருப்போம். சில சமயம் தோல்வியும் கண்டிருப்போம். அப்படி தோல்வியைக் கண்டிருந்தால் நாம் எடுத்த முடிவு பெரும் தவறு என எண்ண வேண்டாம். ஏனென்றால், நாம் முயற்சித்துப் பார்த்து நமக்கு வரவில்லை என்று தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அதனைக் கருதிக் கொள்ளலாம்.

3. உண்மை பேசுவது: சிலரிடம் நாம் உரையாடும்போது தற்செயலாக நம் உள்ளத்தில் உள்ளதை அப்படியே அவர்களிடம் சொல்லி விடுவோம். இதனால் பெரும்பாலானோருக்கு நம்மைப் பிடிக்காமல் போகும். ஏனெனில், மனிதர்கள் உண்மையைக் காட்டிலும் பொய்யையே அதிகம் விரும்புபவர்களாக இருப்பார்கள். அதனால் சிலரிடம் நீங்கள் உண்மையைச் சொன்னால் காயப்படுவார்களோ என்று எண்ணி உண்மை பேசுவதைத் தவிர்த்து விடாதீர்கள். அது ஒன்றும் தவறான செயல் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
வாய்ப்புண் ஏற்படுவது எந்த சத்து குறைபாட்டினால் தெரியுமா?
Want your life to turn out the way you envisioned it?

4. உங்கள் இலக்கை தொடருதல்: உங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து அதில் ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்காக நீங்கள் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கலாம். அப்படி கடினமாக உழைக்கும் நபர்களுக்கு சில சமயம் வெற்றி விரைவில் கிடைக்கும். சிலருக்குக் காலதாமதம் ஆகும். அதனால் நீங்கள் தவறான இலக்கை நிர்ணயித்து விட்டோமோ என்று எண்ண வேண்டாம். உங்கள் உழைப்புக்கான பதில் கண்டிப்பாக ஒருநாள் உங்களை வந்து சேரும்.

5. உங்களுக்கான இடத்தை உருவாக்குதல்: உங்கள் உறவுகளிலோ, நீங்கள் பணி செய்யும் இடங்களிலோ உங்களுக்கான ஒரு முக்கியத்துவமான இடத்தை உருவாக்க வேண்டும். அதற்காக உங்களிடம் மற்றவர்களுக்காக வாழ வேண்டியதில்லை. இப்படிப்பட்ட முடிவுகளையும் நீங்கள் எடுக்க வேண்டியதில்லை. நீங்கள் நீங்களாக இருந்து உங்கள் பணியை சரியாக மேற்கொண்டாலே அவ்விடத்தை நீங்கள் உருவாக்கலாம்.

இந்த ஐந்து முடிவுகளை நீங்கள் சரியாக எடுத்தாலே, நீங்கள் அடைய வேண்டிய இலக்கைச் சரியாக அடையலாம். உங்கள் வாழ்க்கை நீங்கள் நினைத்தது போல் அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com