

நம் அனைவரது வீட்டிலும் வாஷிங்மெஷின் இருப்பது சகஜமாகிவிட்டது. ஆட்டோமெடிக், செமி ஆட்டோமெட்டிக் என எதுவாக இருந்தாலும் சில தொழில்நுட்ப விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது. மெஷினில் நிறைய பட்டன்கள், அதன் செயல்பாடுகள் இருக்கும்.
நாம் நமக்கு சுலபமானதை மட்டும் தெரிந்துகொண்டு மற்ற ஆப்ஷனைக் கற்றுக்கொள்ள மாட்டோம். சில பட்டன்கள் அதன் செயல்பாடுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
சைல்ட் லாக்
இந்த வசதி இருக்கும் போது ஒருமுறை செட் செய்துவிட்டால் குழந்தைகள் மெஷின் ஓடும்போது நடுவில் திருகிவிட்டாலும் பங்ஷன் மாறாது.மெஷின் அப்படியே ஓடிக்கொண்டிருக்கும்.
வாஷ் லோட் சென்சார்
அதிகப்படியான துணிகள் போட்டால் ஓடாது. பிழையை சுட்டிக் காட்டும் நவீன மெஷின்களில் இந்த வசதி இருக்கும்.
குயிக் வாஷ்
கொஞ்சமாக துணி போடும்போது வேகமாக முப்பது நிமிடங்களில் துணி துவைத்து முடிந்துவிடும். கொஞ்சமாக துணி போடும்போது இந்த பட்டன் ஆப்ஷனை உபயோகிக்கலாம்.
ஃபஸ்ஸி லாஜிக்
துணியின் அளவை வைத்து தானே கணக்கிட்டு கொள்ளும் வசதி. எவ்வளவு சோப், எவ்வளவு நேரம், நீர் தேவை என்று முடிவு செய்து கொள்ளும்.
டிலே ஸ்டார்ட் டைமர்
நாம் வெளியே சென்று விட்டு திரும்பும் நேரத்திற்கு ஏற்ப செட் செய்ய முடியும். இரவு அலுவலகம் விட்டு வரும்போது எடுத்து உலர்த்த தயாராக இருக்கும். காலையில் போட்டாலும் ஈர வாசம் வராமல் நேரத்திற்கு துவைத்து தயாராக இருக்கும்.
ரேட் மெஷ்
எலிகள், பூச்சிகள் எதுவும் மெஷினில் உள்ளே போகாமல் தடுக்க இருக்கும் அமைப்பு.
டிஜிட்டல் டிஸ்பிளே
அநேகமாக எல்லா மெஷின்களிலும் இருக்கும். எத்தனை நேரம் வாஷ், ஸ்பின் போன்ற விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.
பிரி வாஷ் (Pre wash)
அதிக அழுக்குள்ள துணிகளை தனியாக சோப்பு எடுத்துக் கொண்டு ஒருமுறை துவைக்கும் அமைப்பு.
RPM (Rotation per minute)
எடுத்துக்காட்டாக மிக மென்மையான துணிகளுக்கு 500க்குள் அளவு வைப்பதும், அழுத்தமான ஜீன்ஸ்,பேண்ட் போன்றவற்றிக்கு 1000க்கு மேல் அளவு வைப்பதும் நல்லது. இதன் அடிப்படையில் கண்ட்ரோல் அமைத்துக்கொண்டு இயங்கும்.
இதேபோல் ஜெண்டில் வாஷ், ஒன்லி டிரையர் போன்ற பட்டங்களும் இருக்கும். துணி துவைப்பது முடிந்தவுடன் அலாரம் அடிக்கும் அமைப்பும் இருக்கும். அதைக் கொண்டு மெஷினை ஆஃப் செய்து விட்டு துணிகளை எடுத்துவிடலாம்.
மெஷினை வாங்கியதும் தாமே மேரனுவலை படித்து தெரிந்து மெஷினை இயக்கலாம். அல்லது மெஷின் ஷோ ரூமிலிருந்து வரும் நபரிடம் எல்லா பங்ஷன்களையும் கேட்டு தெரிந்துகொண்டு இயக்கலாம். ஒவ்வொரு மெஷினுக்கென்றே இருக்கும் அதிகம் நுரை வராத லிக்விட், செண்டட் மணம் கொண்ட லிக்விட் என பலவகைகள் உள்ளன. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு இயக்க மெஷினின் வாழ்நாள் பல வருடங்கள் நீடிக்கும்.