வாஷிங் மெஷினில் துணிகளை தவிர இந்த 5 பொருட்களையும் துவைக்கலாம்... தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

washing-machine-hacks
washing-machine-hacks
Updated on

நமது வீடுகளில் அன்றாட வேலைகளை சுலபமாக்கும் மிக முக்கியமான ஒரு எலக்ட்ரானிக் பொருள் வாஷிங் மெஷின். வார இறுதி நாட்களில் மலை போல குவியும் அழுக்கு துணிகளை சில நிமிடங்களில் சுத்தம் செய்ய இது பெரிதும் உதவுகிறது. இதுவரை நாம் அதில் சட்டை, பேண்ட், போர்வை போன்ற துணி வகைகளை மட்டுமே துவைத்து பழகிவிட்டோம். 

ஆனால், துணிகளைத் தாண்டி வேறு சில முக்கியமான வீட்டு உபயோகப் பொருட்களையும் இதில் எளிதாக சுத்தம் செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. கைகளை வலிக்க வலிக்க பிரஷ் போட்டு தேய்த்து துவைக்கும் அந்த பெரும் சிரமத்தைக் குறைத்து, நமது நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்தும் அப்படிப்பட்ட 5 அட்டகாசமான வாஷிங் மெஷின் ட்ரிக்ஸ் பற்றி இப்போது பார்க்கலாம்.

1. குழந்தைகளின் சாஃப்ட் டாய்ஸ்!

வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் நிச்சயம் விதவிதமான பஞ்சு பொம்மைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கும். அந்த சாஃப்ட் டாய்ஸில் தூசிகள் மற்றும் அழுக்குகள் சுலபமாக ஒட்டிக்கொள்ளும். இதை கைகளால் பிழிந்து துவைப்பது ரொம்பவே கஷ்டமான வேலை. 

இனிமேல் அப்படி சிரமப்பட வேண்டாம். அந்த பஞ்சு பொம்மைகளை ஒரு பழைய தலையணை உறைக்குள் வைத்து ஒரு கயிறு போட்டு கட்டி, நேரடியாக வாஷிங் மெஷினில் போட்டு ஜென்டில் மோடில் துவைத்து எடுக்கலாம். பொம்மைகள் எந்த ஒரு சேதமும் இல்லாமல் கடையில் வாங்கிய புதுசு போல பளபளப்பாக மாறிவிடும்.

2. அழுக்கடைந்த கேன்வாஸ் ஷூக்கள்!

வெள்ளை நிற கேன்வாஸ் ஷூக்களை அணிந்து செல்வது ஸ்டைலாக இருக்கும். ஆனால் அதில் ஒட்டும் சகதி மற்றும் அழுக்கை பிரஷ் போட்டு தேய்ப்பது மிகப்பெரிய தலைவலியாக மாறும். இனிமேல் உங்கள் ஷூக்களின் லேஸ்களை கழற்றிவிட்டு, ஷூக்களை ஒரு வலை போன்ற துணிப்பையில் போட்டு மெஷினில் போடுங்கள். 

இதனுடன் இரண்டு பழைய டவல்களையும் சேர்த்து போட்டால், ஷூக்கள் வாஷிங் மெஷினின் ஓரங்களில் இடித்து சத்தம் வராமல் பாதுகாப்பாக இருக்கும். துணி பவுடருக்கு பதிலாக லிக்விட் பயன்படுத்தினால் ஷூக்களில் வெள்ளை திட்டுக்கள் படியாமல் இருக்கும்.

3. காய்கறி வாங்கும் துணிப் பைகள்!

காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்க நாம் மார்க்கெட்டிற்கு எடுத்துச் செல்லும் துணிப்பைகளில் கண்ணுக்கு தெரியாத ஏராளமான கிருமிகளும் அழுக்குகளும் சேர்ந்திருக்கும். ஒவ்வொரு முறையும் அதை தனியாக சோப்பு போட்டு கையால் துவைக்க நமக்கு பொறுமை இருக்காது. 

இதையும் படியுங்கள்:
நீங்கள் வலிமையானவரா? இந்தப் பழக்கங்கள் உங்களிடம் இருக்கிறதா பாருங்கள்! 
washing-machine-hacks

எனவே, நீங்கள் சாதாரண துணிகளை மெஷினில் துவைக்கும் போது இந்த பைகளையும் அதோடு சேர்த்து உள்ளே போட்டு விடுங்கள். இதனால் பைகள் எப்போதுமே சுத்தமாகவும் எவ்வித துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.

4. யோகா மேட் மற்றும் மிதியடிகள்!

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்ய நாம் பயன்படுத்தும் யோகா மேட்டுகளில் நமது வியர்வை மற்றும் தூசிகள் அதிக அளவில் படிந்திருக்கும். அதேபோல வீட்டின் வாசலில் போடும் சிறிய மிதியடிகளையும் நாம் வாஷிங் மெஷினில் சுலபமாக துவைக்கலாம். 

ஆனால், தடிமனான ரப்பர் இல்லாத மேட்களை மட்டுமே மெஷினில் போட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குளிர்ந்த நீரை பயன்படுத்தி மைல்டு வாஷ் செய்வது இவற்றின் ஆயுளை அதிகரிக்கும்.

5. செல்லப்பிராணிகளின் படுக்கைகள்!

நாய்க்குட்டி அல்லது பூனைகளை செல்லமாக வளர்ப்பவர்களுக்கு அவற்றின் படுக்கைகளை சுத்தம் செய்வது ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். அதில் உதிர்ந்து கிடக்கும் முடிகளை ஒரு பிரஷ் மூலம் முதலில் லேசாக தட்டி எடுத்துவிட வேண்டும். 

இதையும் படியுங்கள்:
வெளுத்துக் கட்டும் 'வெள்ளை நாவல்'! அதன் 'WOW' ரகசியங்கள்!
washing-machine-hacks

அதன் பிறகு அந்த படுக்கைகளை உறை பிரிக்காமல் அப்படியே வாஷிங் மெஷினில் போட்டு துவைக்கலாம். சிறிது கிருமி நாசினி மற்றும் வாசனையான லிக்விட் சேர்த்து துவைக்கும் போது, அதிலிருக்கும் கெட்ட வாடை முழுமையாக நீங்கி புதிது போல மாறிவிடும்.

logo
Kalki Online
kalkionline.com