நெய்யில் உள்ள கலப்படத்தைக் கண்டுபிடிக்கும் வழிகள்! 

ghee
Ways to detect adulteration in ghee!
Published on

நெய்யில் பொதுவாகவே வனஸ்பதி, தேங்காய், எண்ணெய், மாவுப் பொருட்கள் போன்றவற்றை கலந்து கலப்படம் செய்கின்றனர். அதுவும் சமீபத்தில் நடந்த திருப்பதி லட்டு பிரச்சனையிலிருந்து நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்படுவது உண்மையிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தப் பொருட்கள் நெய்யின் சுவை மற்றும் மணத்தை மாற்றி அதன் ஊட்டச்சத்து மதிப்பை முற்றிலுமாகக் குறைக்கின்றன. எனவே, நாம் வாங்கும் நெய் தூய்மையானதா என்பதைக் கண்டறிவது மிகவும் முக்கியம். இந்தப் பதிவில் நெய்யில் உள்ள கலப்படத்தைக் கண்டறியும் எளிய முறைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.‌ 

நெய்யில் உள்ள கலப்படத்தைக் கண்டறியும் வழிகள்: 

தூய்மையான நெய் பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட வாசனை இருக்கும். நெய்யின் நிறம் மஞ்சள் நிறமாகவோ அல்லது மிகவும் வெள்ளையாகவோ இருந்தால், அதில் கலப்படம் இருக்க வாய்ப்புள்ளது. வாசனை செயற்கையாக இருந்தாலும், கலப்படம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். 

தூய்மையான நெய் தெளிவாக இருக்கும் அதில் துகள்கள் அல்லது திட்டுகள் இருந்தால், அதில் கலப்படம் இருக்கிறது என அர்த்தம். சுத்தமான நெய்யின் உருகுநிலை அதிகமாக இருக்கும். அதாவது, அதை உருக்க வைக்க அதிக வெப்பம் தேவைப்படும். கலப்படம் செய்யப்பட்ட நெய் லேசான வெப்பத்திலேயே உருகிவிடும். 

தூய்மையான நெய்யை தண்ணீரில் போட்டால் அது மேலே மிதக்கும். கலப்படம் செய்யப்பட்ட நெய் தண்ணீரில் கரைந்து விடும். உங்களுக்கு அதிக சந்தேகம் இருந்தால் நீங்கள் பயன்படுத்தும் நெய்யை அயோடின் பரிசோதனை செய்யலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் நெய் எடுத்து அதில் அயோடின் சில துளிகள் விடவும். நெய் நீல நிறமாக மாறினால், அதில் மாவுப்பொருள் கலக்கப்பட்டுள்ளது என அர்த்தம். 

அதேபோல, சர்க்கரை பரிசோதனை செய்தும் நெய்யில் உள்ள கலப்படத்தைக் கண்டுபிடிக்கலாம். நெய்யில் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கலக்கினால் அது சிவப்பு நிறமாக மாறினால் அதில் வனஸ்பதி கலக்கப்பட்டுள்ளது. அல்லது நீங்கள் பயன்படுத்தும் நெய்யை பிரிட்ஜில் வைத்துப் பார்க்கவும். தூய்மையான நெய் திடமாக இருக்கும். இதுவே தேங்காய் எண்ணெய் கலந்த நெய், திரவ நிலையிலேயே இருக்கும். 

இதையும் படியுங்கள்:
பசு நெய் Vs எருமை நெய்: எது சிறந்தது தெரியுமா?
ghee

நெய்யில் கலப்படத்தைத் தவிர்க்க வீட்டிலேயே நெய்யை தயாரிப்பது நல்லது. பால், வெண்ணை ஆகியவற்றைக் கொண்டு எளிதாக வீட்டிலேயே நெய் தயாரிக்கலாம். இதன் மூலம் நாம் பயன்படுத்தும் நெய் தூய்மையானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். கலப்படம் செய்யப்பட்ட நெய் நம் உடலுக்கு பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, நாம் வாங்கும் நெய் தூய்மையானதா என்பதைக் கண்டறியும் முறைகளை நாம் தெரிந்து கொள்வது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com