கோடை வெப்பத்திலிருந்து காத்து உங்களைக் கூல் செய்யும் ஏசியை பராமரிக்கும் வழிகள்!

Ways to maintain AC
Air conditioner with Girl
Published on

கோடை வெப்பத்தை சமாளிக்க ஏசி வாங்கும்போது கூடவே இலவசமாக ஸ்டெபிலைசரையும் சேர்த்துக் கொடுப்பார்கள். அது ஒரிஜினல் பிராண்டா என்பதை பார்த்து வாங்குங்கள். சில கடைகளில் விலை மலிவான சீன தயாரிப்புகளைக் கொடுத்து விடுவார்கள். அலுமினிய ஸ்டெபிலைசர் ஏசியை விரைவில் பழுதாக்கி விடும். நல்ல தரமான ஸ்டெபிலைசரில் தாமிரம் இருக்கும். அதுதான் நீடித்து உழைக்கும். அவர்கள் ஸ்டெபிலைசர் கொடுக்கவில்லை என்றாலும் நீங்கள் பணம் கொடுத்து ஸ்டெபிலைசர் கட்டாயம் வாங்கி ஏசிக்கு பொருத்த வேண்டியது அவசியம்.

ஏசியை மாட்டும்போது அதன் ஒயர்கள் நன்றாகப் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்பதை மெக்கானிக்கின் உதவியோடு சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ஏசியின் குளிர் முகத்தில் பட வேண்டும் என்பதற்காக உங்களுக்குப் பிடித்த இடத்தில் ஏசியை வைக்கக் கூடாது. குறைந்தது ஆறு அடிக்கு உயரமான இடத்தில்தான் ஏசி இருக்க வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து வெளியாகும் குளிர்ச்சி அறை முழுவதும் நிரம்பும்.

ஏசி ஆனில் இருக்கும்போது பெர்ஃப்யூம், ரூம் ஸ்ப்ரே போன்றவற்றை ஏசியின் மீது அடித்தால் ஏசியின் உள்ளே இயங்கும் காயில் பழுதாகிவிடும்.

இதையும் படியுங்கள்:
செல்போனை தலைமாட்டில் வைத்துத் தூங்குபவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!
Ways to maintain AC

நல்ல குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமான டிகிரியில் டெம்பரேச்சர் வைக்கக் கூடாது. 23 டிகிரிக்குக் குறைவாக செல்லும்போது ஏசியில் அதிக பிரஷர் ஏற்படும். அதனால் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்படும். எனவே, 23 அல்லது 24 டிகிரி என அளவான டெம்பரேச்சருக்குப் பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.

ஏசி அறையில் சூரிய ஒளிபடாதவாறு ஸ்க்ரீன் போட்டுக்கொண்டால் நல்லது. இல்லை என்றால் வெப்பம் உள்ளே வந்து சீக்கிரம் குளிர்ச்சியாகாமல் மின்சாரம் வீணாகும்.

ஏசியை சரியாக துளையிட்டுப் பொருத்தாவிட்டால் அதிக சப்தம் எழுப்பும் ஏசி வாங்கும் கடையில் பிராண்டுக்கு ஏற்றபடி ஏசி பொருத்திக் கொடுக்க ஆள் இருப்பார்கள். அவர்களை அழைத்து வந்து பொருத்துவது நல்லது.

சர்வீஸ் செய்யும்போது காயில் கிளீன் செய்யப்படுகிறதா? ஃபேன் மோட்டார்களுக்கு ஆயில் பெல்ட் அட்ஜஸ்ட்மென்ட் கம்பரசர் கிளீனிங் எல்லாம் செய்கிறார்களா என்பதை அருகில் இருந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஏசி பொருத்தப்பட்ட அறையில் அதிக பொருட்களை வைக்கக்கூடாது. அப்படி இருந்தால் அறை குளிர்ச்சியாவதற்கு நேரம் அதிகமாகும். மின்சாரமும் அதிகம் செலவாகும்.

ஏசியை மாதம் ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும். அதிகமான புகை, புழுதி உள்ள இடங்களில் வசிப்பவர்கள் குறைந்தது மாதத்துக்கு இரண்டு முறை சர்வீஸ் செய்ய வேண்டும். அதிகமான தூசி ஏசியில் சேர்ந்தால் பாதிப்பு நமக்குதான். எனவே, ஏசியில் உள்ள பில்டரை சுத்தப்படுத்த அடிக்கடி சர்வீஸ் செய்வது அவசியம். அதிகம் பயன்படுத்தாத நாட்களில் கூட சர்வீஸ் செய்து வைப்பது ஏசியின் வாழ்நாளை கூட்டும்.

ஏசி செய்யப்பட்ட அறையில் குளிர் வெளியே செல்லாதவாறு கதவுகள் இடைவெளி இல்லாமல் மூடப்பட்டிருந்தால் மின்சாரம் சிக்கனமாக செலவழியும், குளிரும் அறை முழுவதும் நெடுநேரம் இருக்கும்.

நீண்ட நேரம் ஏசியை பயன்படுத்தினால் ஒவ்வொரு மணிக்கும் குறைந்தது ஐந்து முதல் ஏழு நிமிடத்திற்கு நிறுத்தி வைத்து பின்னர் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பயன்படுத்தினால் ஏசியின் தரம் நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

ஏசியை ஆன் செய்ய முதலில் ஸ்டெபிலைசர் ஸ்விட்சை ஆன் செய்ய வேண்டும். பிறகு பச்சை நிற விளக்கிற்கு ஸ்டெபிலைசர் மாறியவுடன் ஏசி ரிமோட் மூலம் ஏசியை ஆன் செய்ய வேண்டும். இதுவே ஏசியை ஆன் செய்யும் சரியான முறையாகும்.

ஏசியை ஆன் செய்யும் முன்பாக ரூம் கதவை மூட வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் ஜன்னல்களும் இறுக்கமாக மூடி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சூரிய வெளிச்சம் உள்ளே இல்லை என்றால் ரூமில் வெகு விரைவாக கூலிங் கிடைக்கும்.

ஏசி பொருத்தும் அறையில் ஸ்டீல் பாத்திரம் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏசி இருக்கும் அறை தூய்மையாக இருப்பது அவசியம். பொருட்கள் அதிகமாக வைத்திருந்தால் கூலிங் கிடைக்காது.

ஏசி ஓடும்போது மின்விசிறி பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல, சாம்பிராணி புகை போடுவது, ஊதுபத்தி காட்டுவது போன்ற தவறுகளையும் செய்யக் கூடாது.

இதையும் படியுங்கள்:
கோடையில் பாம்புகள் வீட்டுக்குள் நுழையாமல் தடுக்க எளிய வழிகள்!
Ways to maintain AC

ஏசியை முறையாகப் பயன்படுத்தினால் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் அந்த அறை முழுமையாக கூலிங் ஆகிவிடும்.

தற்போது விற்பனை செய்யப்படும் ஏசிக்கள் பெரும்பாலும் இன்வெர்ட்டர் டிசைனில் உள்ளன. அவை அரை கூலிங் ஆனவுடன் குறைந்த மின்சாரத்திலேயே இயங்கும்.

எனவே, இதுபோன்ற சில  அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொண்டு ஏசியை பயன்படுத்தினாலே மின்சாரமும் அதிகம் செலவு ஆகாது, கோடையில் ஜில்லென அறையும் குளிர்ச்சியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com