வாரம் ஒரு முறை வீட்டில் செய்ய வேண்டிய பராமரிப்புகளும் அவற்றின் பயன்களும்!

Housekeeping work
Housekeeping work
Published on

வீடு என்பது வெறும் கட்டடம் அல்ல; நம்முடைய பாதுகாப்பான வாழ்விடமாகும். அதை சுத்தமாகவும், சீராகவும் வைத்திருப்பது, நம்முடைய உடல் மற்றும் மன நலத்திற்கும், வீட்டின் ஆயுளுக்கும் முக்கியம். வாராந்த பராமரிப்புப் பணிகள் வீட்டில் ஏற்படக்கூடிய பெரிய பழுதுகள் மற்றும் சுகாதார சிக்கல்களைத் தடுக்க உதவுகின்றன.

வீடு முழுவதும் தூய்மை செய்வது: மாடி, தரை, அலமாரி போன்ற பகுதிகளில் தூசி துடைத்தல். தரையை தேய்த்து அழுக்குகளை அகற்றல். தரை வழி நடக்கும் மாடிப்படி பகுதிகளில் சிரமமான பழைய அழுக்குகள் இருந்தால் அகற்றுதல்.

பயன்: தூசியை அகற்றுதல் allergy உள்ளவர்களுக்கு பாதுகாப்பு. பூச்சிகள், கொசுக்கள் அதிகரிக்காமல் தடுக்கும்.

சமையலறை பராமரிப்பு: அடுப்பை, சமையல் மேடையை, சிம்மியை சுத்தம் செய்தல். பழைய உணவுப் பொதிகள், தேங்கிய கழிவுகள் அகற்றல். குப்பை மூட்டைகளை காலியாக செய்தல்.

பயன்: ஈ, எறும்பு, சிலந்தி வராமல் தடுக்கும். தீ விபத்து வாய்ப்புகளைக் குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்க... கதைகள் சொல்லுங்க சார்!
Housekeeping work

குளியலறை மற்றும் கழிப்பறை சுத்தம்: கழிப்பறை, வாஸ் பேஸின், பைபிங் ஓட்டைகள், ஷவர்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தல். டைல்ஸ்களில் பச்சை பூஞ்சை இருந்தால் அதை அகற்றுதல்.

பயன்: கிருமிகள் தொற்றும் அபாயத்தைத் தடுக்க முடியும். தண்ணீர் ஓட்டம் தடையின்றி நடைபெறும்.

குப்பைகளை காலியாக செய்தல்: அனைத்து அறைகளிலும் உள்ள குப்பைத் தொட்டிகளை வாரத்திற்கு ஒருமுறை கழித்து சுத்தம் செய்தல்.

பயன்: தொற்று ஏற்படாமல் தடுக்கும். வீட்டு வாசனை சுத்தமாக இருக்கும்.

மின் உபகரணங்கள் பராமரிப்பு: மின் விளக்குகள், சுவிட்ச் போர்டுகள் சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்கவும். தேவையற்ற மின் சாதனங்களை அகற்றவும். மின் விசிறிகளை தூசிகள் இன்றி சுத்தப்படுத்தவும்.

பயன்: மின் சேமிப்பு, தீ விபத்து அபாயங்களைத் தவிர்க்க முடியும், மின் விசிறிகளில் இருந்து தூசிகள் அகற்றப்படுவதால் அலர்ஜி தொந்தரவுகளின்றி விடுதலை பெறலாம்.

இதையும் படியுங்கள்:
பெரியோர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறுவதன் தாத்பரியம் அறிவோம்!
Housekeeping work

ஜன்னல்கள், கதவுகள் பரிசோதனை: கதவுகள் மற்றும் ஜன்னல்களில் சுழலும் பாகங்கள் சீராக இருக்கிறதா என்பதை சோதனை செய்தல். பூட்டு, தாழ்ப்பாள் சீராக செயல்படுகிறதா என பார்க்கவும்.

பயன்: பாதுகாப்பு அதிகரிக்கும், பழுது ஏற்பட்டால் உடனே சரி செய்யலாம்.

தோட்டப் பராமரிப்பு (இருந்தால்):

செய்ய வேண்டியது: செடிகளுக்கு நீர் பாய்ச்சி பராமரித்தல். எறும்பு குழிகள், பூச்சி தொல்லை இருந்தால் வேரில் மருந்து ஊற்றுதல். களை செடிகளை அகற்றி விடலாம்.

பயன்: வீட்டைச் சுற்றி இயற்கை அழகு, பசுமை பராமரிப்பு மன நிம்மதிக்கு உதவும்.

நாள் பணிகள் குறிப்பு:

திங்கள்: சமையலறை சுத்தம். அடுப்பு, சிம்மியை சுத்தம் செய்தல்.

புதன்: குளியலறை + கழிப்பறைக்கு கிருமிநாசினி பயன்படுத்துதல்.

வெள்ளி: ஜன்னல், கதவு பராமரிப்பு. பூச்சிகளுக்கு மருந்து தெளிக்கலாம்.

ஞாயிறு: வீடு முழு தூய்மை. தரை, மேசைகள், கம்பளி, மரம் முதலியன.

வாராந்தர பராமரிப்பு பணிகள் மூலம் வீடே சீராகவும், பாதுகாப்பாகவும், நீடித்த ஆயுள் கொண்டதாகவும் இருக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த பழக்கம் வளர்ந்தால், செலவுகள் குறையும், வாழ்க்கைத் தரம் உயரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com