குட்டித் தூக்கம் கேள்விப்பட்டிருக்கிறோம்; அதென்னங்க ராணுவத் தூக்கம்?!

Do you know what military sleep is?
Military sleep
Published on

ற்போது தூக்கமின்மை பிரச்னை மக்களிடையே பெரிதாக உருவெடுத்துள்ளது. பலரும் பல்வேறு காரணங்களால் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இரண்டு நிமிடங்களில் தூங்கும் ராணுவத் தூக்கம் முறை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ராணுவத் தூக்க முறை: மன அழுத்தம், தூக்கமின்மை பிரச்னை மிகப்பெரிய அளவில் உருவெடுத்துள்ள நிலையில், சீக்கிரம் தூங்குவதற்கான ஒரு முறையாக இருக்கும்  'ராணுவத் தூக்க முறையை' (military sleep method) பின்பற்றினால் வெறும் இரண்டு நிமிடங்களுக்குள் தூங்கலாம். ஏனெனில், அறிவியல் ரீதியாகவே ராணுவத் தூக்க முறையை பின்பற்றி தூங்கினால் சீக்கிரம் தூங்க முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.

ராணுவ வீரர்களுக்கு மன அழுத்தமான சூழலிலும் விரைவாகத் தூங்க  உருவாக்கப்பட்ட இந்த முறை 1981ல் வெளியான 'ரிலாக்ஸ் அண்ட் வின்: சாம்பியன்ஷிப் பெர்ஃபார்மன்ஸ்' (Relax and Win: Championship Performance) என்ற புத்தகத்தில் முதலில் விளக்கப்பட்டு இருந்தது.

இதையும் படியுங்கள்:
மனதை உறுதியாக மாற்றும் தனிப்பட்ட சகிப்புத்தன்மையின் ரகசியம்!
Do you know what military sleep is?

ராணுவத் தூக்கம் முறைக்கு செய்ய வேண்டியது:

* ஒரு இடத்தில் முதலில் சௌகரியமாக படுத்துக்கொண்டு கண்களை மூடி வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆழ்ந்த சுவாசத்தில் கவனம் செலுத்தி சுவாசிக்க வேண்டும்.

* அடுத்ததாக, நெற்றியில் இருந்து தொடங்கி கன்னங்கள், தாடை என வரிசையாக முகத்தில் உள்ள ஒவ்வொரு தசைகளையும் தளர்த்த வேண்டும்.

* பின்பு தோள்களை தளர்வாக்கிக் கொண்டு கைகள், உள்ளங்கைகள், விரல்கள் என படிப்படியாக ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.

* மேலும், கவனத்தை மெதுவாக மார்பு, வயிற்றுப் பகுதிக்குக் கொண்டு செல்வதோடு, மெல்ல அதையும் சுழற்றி தொடைகள் முதல் கால் விரல்கள் வரை ஒவ்வொரு தசை மட்டும் மூட்டையும் தளர்த்த வேண்டும்.

* உடல் தளர்ந்த பிறகு அமைதியாக ஏரியில் படகில் பயணம் செய்வது போலவும் அல்லது அவரவர்களுக்கு எது ரிலாக்ஸ் ஏற்படுத்துமோ அதைப் பற்றிய காட்சியை மனதில் நினைக்க வேண்டும். இந்த நேரத்தில் வேறு எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாது.

இதையும் படியுங்கள்:
அர்த்தம் பொதிந்த அக்கால பழமொழிகளும்; தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட இக்கால புதுமொழிகளும்!
Do you know what military sleep is?

ராணுவத் தூக்கம் முறைக்கான பலன்கள்: ராணுவத் தூக்கம் முறை நரம்பியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி நரம்பு மண்டலத்தை ஓய்வு நிலைக்கு மாற்ற உதவுகிறது. இந்த முறை சாதாரணமாக தோன்றினாலும் நல்ல பலனைக் கொடுக்கும் என்பது நிரூபணமான ஒன்றாகும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த முறை தற்போதுதான் அதிக அளவில் பயன் கொடுப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில், தற்போதைய காலகட்டத்தில் பலருக்கும் பகல் நேரத்தில் மன அழுத்தம், செல்போன், கணினி, டிவி அதிகம் பார்ப்பது மற்றும் அழுத்தம் நிறைந்த வேலை காரணமாக நரம்பு மண்டலம் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இயங்குகிறது. இதனால் இரவு நேரத்தில் மூளை அமைதி அடைவதற்கு பதிலாக சுறுசுறுப்பாக இருக்கிறது. ஆகவே, ராணுவ முறை தூக்கம் தற்போது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகவே, மேற்கூறிய ராணுவத் தூக்கம் முறையை கையாண்டு தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுபவர்கள் தூங்க முயற்சி செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com