"ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ்" (Rumble strips) என்பது வாகனங்கள் செல்லும் சாலைகளில், பாதுகாப்பைக் கருதி போடப்பட்டிருக்கும் கவசமெனலாம். இதன் தமிழ்ப் பொருள் "அதிர்வு பட்டைகள்" (கீற்றுகள்) அல்லது "சப்த பட்டைகளாகும்".
ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ்ஸின் பயன்கள்:-
ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ்ஸின் முக்கிய பயன், வாகனம் ஓட்டுபவர்களுக்கு முன்னால் ஆபத்தான பகுதிகள் இருப்பதை எச்சரித்து, அவர்களின் கவனத்தைத் தூண்டுவது, சாலையின் கட்டுப்பாட்டை மீட்டெடுப்பது போன்றவைகளாகும். மேலும், சாலையின் எல்லையை தெளிவாக உணர்த்த உதவுகிறது.
சாலைகளில் போடப்பட்டுள்ள ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ்ஸின் மீது வாகனங்கள் செல்கையில், சத்தம் மற்றும் தொட்டுணர்வு அதிர்வுகளை உருவாக்கும். இதன் மூலம் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை கிடைக்கும். வளைவுகள், குறுக்கு வழிகள், ஆபத்தான பகுதிகள் ஆகியவைகளை நெருங்குவதற்கு முன்பே ஓட்டுனர்களின் கவனம் கூடுதலாக இருக்கும்.
ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ், கவனக்குறைவான ஓட்டுநர்களுக்கு சாத்தியமான ஆபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ஒரு அம்சமாகும். மேலும், ஒரு வாகனத்தின் சக்கரங்கள் வழியாக அதன் உட்புறத்தில் பரவும் தொட்டுணரக்கூடிய அதிர்வு மற்றும் கேட்கக்கூடிய சத்தத்தை ஏற்படுத்துகிறது. ஓட்டுநர்கள் தங்கள் பாதையில் இருந்து விலகிச் செல்லும்போது எச்சரிக்க, ஒரு விளிம்புக் கோடு அல்லது மையக் கோட்டைத் தொடர்ந்து பயணத்தின் திசையில் ஒரு ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ் பயன்படுத்தப்படுகிறது. ரம்பிள் ஸ்ட்ரிப்கள் பயணத்தின் திசையில் தொடர்ச்சியாக நிறுவப்படலாம்.
ஓட்டுநர்களுக்கு முன்னால் நிறுத்தம் அல்லது வேகத்தைக் குறைத்தல் அல்லது நெருங்கி வரும் ஆபத்து இடத்தைப் பற்றி எச்சரிக்கை செய்யும்.
ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ்கள் சாதகமான சூழ்நிலைகளில், கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். ஷோல்டர் ரம்பிள் ஸ்ட்ரிப்களின் செயல்திறன் மீட்டெடுப்பதற்கான அகலமான மற்றும் நிலையான சாலை தோள்பட்டையைப் பொறுத்தது.
1952 ஆம் ஆண்டு நியூஜெர்சியிலுள்ள கார்டன் ஸ்டேட் பார்க்வேயில், முதன்முதலில் ரம்பிள் ஸ்ட்ரிப்கள் செயல்படுத்தப்பட்டன.
ஆரம்பத்தில், ஷோல்டர் ரம்பிள் ஸ்ட்ரிப் நிறுவல், நடைபாதை உருட்டல் இயந்திரங்களில் மாற்றியமைக்கப்பட்ட ரோலரைப் பயன்படுத்தி வெவ்வேறு வடிவமைப்புகளின் உருட்டப்பட்ட ரம்பிள் ஸ்ட்ரிப்களைப் பயன்படுத்தி தனிவழிப்பாதைகளில் கவனம் செலுத்தியது. பின்னர், நடைபாதை ஒப்பந்ததாரர்கள் நடைபாதை உருட்டல் இயந்திரங்களை மாற்றியமைத்து, ரம்பிள் ஸ்ட்ரிப்களை ஏற்கனவே உள்ள கடினப்படுத்தப்பட்ட நடைபாதையில் அமைத்தனர்.
அதைத் தொடர்ந்து குறிப்பாக வடிவமைக்கப்பட்ட வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய இயந்திரங்கள், பீங்கான் மற்றும் பிளாஸ்டிக் உயர்த்தப்பட்ட அமைப்புகளின் வளர்ச்சி கான்கிரீட் நடைபாதை நெடுஞ்சாலைகளில் நிறுவலை சாத்தியமாக்கியது. மேலும் சிறிய தடம் கோடுள்ள மையக் கோட்டிற்கு மிகவும் பொருத்தமானது. "மெய்நிகர்" ரம்பிள் ஸ்ட்ரிப்கள் தொடர்ந்து வந்தன.
பள்ளங்களின் இடைவெளி மற்றும் வாகனத்தின் வேகத்தைப் பொறுத்து குறிப்பிட்ட ஆடியோ அதிர்வெண்களில் ரம்பிள் கீற்றுகள் கேட்கக்கூடிய ரம்பிள்களை உருவாக்குவதால், அவை புதுமையான இசைச் சாலைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவை "பாடும் தோள்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.
உபரி தகவல்கள்:-
ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ் இரு வகைப்படும். Grooved cut in place மற்றும் Rolled in place. இரண்டும் சாலைப் பாதுகாப்புக்கு மிகவும் பயனுள்ளவைகள்.
சாலைகளின் மையக்கோடு மற்றும் ஓரங்களில் கீறல்கள் செய்யப்படுவது Grooved cut ஆகும்.
தார்ச்சாலைகள் அமைக்கையில், சக்கரங்களைப் பயன்படுத்தி மேடுகளை உருவாக்குவது Rolled in place ஆகும்.
ரம்பிள் ஸ்ட்ரிப் பொருத்துதல் பரவலாக இருப்பினும், நகர்ப்புற நெடுஞ்சாலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள், இரவில் வாகனங்கள் பாதைகளை மாற்றுகிற நேரங்களில், அதன் ஓசையால் அவதிப்படுகிறார்கள் எனக் கூறப்படுகிறது.
மொத்தத்தில் ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ், வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலை மற்றும் விரைவு சாலைப் பாதுகாப்பிற்கு உகந்ததாக விளங்குவது பாராட்டுக்குரிய விஷயம்.