
வீட்டில் ஹோமங்கள் செய்யும்போது ஒரு டேபிள் ஃபேனை ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே சுற்றாது.
கையில் தீப்புண் பட்டுவிட்டால் உடனே ஒரு கிண்ணத்தில் பாலைஊற்றி அதில் கையைக் கொஞ்ச நேரம் நனைத்துக்கொண்டால் போதும். தீப்புண் ஆறிவிடும்.
தண்ணீரைக் கொதிக்க வைத்துச் சில ஸ்டீல் பாத்திரங்களில் வெள்ளையாக கறை படிந்திருக்கும். அதை எளிதில் போக்க, அந்தப் பாத்திரத்தில் இரண்டு நாட்களுக்கு அரிசியை ஊறவைத்திருந்தால் கறை போய்விடும்.
குழாயில் தண்ணீர் வருவதற்கு 1, 2. 3 என்று எவ்வளவு திருப்புகள் வேண்டுமானாலும் திருப்பலாம். ஆனால் மூடும்போது ஒரே ஒரு திருப்பில் தான் மூடவேண்டும். அப்பொழுதுதான் குழாயின் ஆயுள் நீடித்து அடிக்கடி வாஷர் போட வேண்டிய அவசியம் ஏற்படாது.
வீடு, வாசல் கூட்டும் துடைப்பம் கைகளில் குத்தாமல் இருக்க பழைய சாக்ஸ்களை அதில் மாட்டி ஒரு ரப்பர் பேண்டை போட்டு வைத்துவிடவும்.
பழைய நாலு முழ வேஷ்டியில், நாலு பைகள் தைத்து வைத்துக்கொள்ளுங்கள். தானியங்கள் முளைகட்ட, திரித்த பாலை வடிய வைத்து பனீர் செய்ய பயன்படும்.
கொத்துமல்லி, கறிவேப்பிலை போன்றவைகளை ஒரு எவர் சில்வர் டப்பாவில் போட்டு ஃ ப்ரிட்ஜில் வைத்தால் பல நாட்களுக்கு புதிதாகவே இருக்கும்.
பழைய டைரியின் மேலட்டையை வட்ட வடிவத்தில் கத்தரித்து சூடான பாத்திரங்கள் வைக்க டேபிள் மேட்டாக பயன்படுத்தலாம்.
வாக்கிங் போகும்போது இரண்டு தொடைகளும் உராய்ந்து புண்ணாகிவிடும். இதைத் தவிர்க்க, இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெயுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் கலந்து தடவிக்கொண்டு போனால் சிரமமில்லாமல் இருக்கும்.
கோடையில் தாகம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும், அவ்வப்போது சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம், மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
ஃ ப்ரிட்ஜில் காய்களை பருத்தித் துணிகளில் சுற்றி வைத்தால் கறிகாய்கள் சீக்கிரமாக வாடிப்போகாது.
வீட்டுக்கு புதிதாக பெயிண்ட் அடித்து இருந்தால் பெயிண்ட் வாடை இருந்துகொண்டே இருக்கும். ஒரு வெங்காயத்தை நறுக்கி அறையின் மத்தியில் வைத்துவிட்டால் பெயிண்ட் வாடை வீசாது.