உடல் எடையை சீராக்கும் டீடாக்ஸ் எனும் டயட் உணவு முறை பற்றி அறிந்திருப்போம். ஆனால் டிஜிட்டல் டீடாக்ஸ் எனப்படும் டிஜிட்டல் போதை நீக்கம் பற்றித் தெரியுமா ? வாருங்கள் பார்ப்போம்.
ஸ்மார்ட்போன்கள், கணினிகளின் திரைகளைத் தொடர்ந்து பார்ப்பது, அதிலிருந்து பெறப்படும் தகவல் சுமை அதிகரித்த மன அழுத்த நிலைகளுக்கு வழிவகுக்கும். தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இன்றைய உலகில், டிஜிட்டல் மீதான அதீத போதையை நீக்கும் முறைகளை கடைபிடிக்க சுகாதாரம் மற்றும் மனோவியல் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும் வேகமான தொழில்நுட்பத்துடன் ஆரோக்கியமான உறவை வளர்ப்பதற்கும் நமது சுய பாதுகாப்பை பராமரிக்கவும் இது அவசியம் ஆகிறது.
டிஜிட்டல் டீடாக்ஸ் என்றால் என்ன?
டிஜிட்டல் போதை நீக்கம் என்பது, டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் தளங்களில் இருந்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, நம் விருப்பத்திற்கு உட்பட்டு வேண்டுமென்றே விலகுவதை உள்ளடக்கியது. இந்த இடைவெளி தனிநபர்கள் உற்சாகத்தை புதுப்பிக்கவும் , தற்போதைய தருணத்துடன் மீண்டும் இணைவதற்கும், அன்றாட வாழ்க்கையில் மிகவும் கவனமுள்ள அணுகுமுறையை வளர்க்கவும் உதவுகிறது. "பணி குறித்த கவனம் மற்றும் செயல்திறன் அதிகரிக்க சிறிது நாட்கள் இத்தளத்தை விட்டு விலகுகிறேன்." எனும் சிலரின் தகவல்கள் இதில் சேர்த்தி.
டிஜிட்டல் டீடாக்ஸ் செயல்பாடு தரும் நலம்:
நமது சமூக ஊடக பயன்பாட்டை ஒரு நாளைக்கு சுமார் 30 நிமிடங்களுக்குக் கட்டுப்படுத்துவதால் நல்வாழ்வை கணிசமாக மேம்படுத்தலாம். எப்படி ? சமூக ஊடகங்கள், செய்திகள் மற்றும் அறிவிப்புகளைத் தொடர்ந்து பார்ப்பது பதட்டம், தூக்கக் கலக்கம் மற்றும் இயலாமை உணர்வுகளுக்கு பங்களிக்கும். டீடாக்ஸ் கடைபிடித்து இவற்றைத் தவிர்த்து தனிமை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
மேலும் திரைகள் இல்லாத செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் சமநிலையான மற்றும் மகிழ்வான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது. டிஜிட்டல் உலகில் இருந்து எடுக்கும் இந்த இடைவெளி, தனிநபர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்கவும் மற்றவர்களுடன் ஆழமான தொடர்புகளை வளர்ப்பதற்கும், தொடர்ச்சியான டிஜிட்டல் ஈடுபாட்டால் மறைக்கப்பட்ட பொழுதுபோக்குகளை மீண்டும் அனுபவிப்பதற்கும் அனுமதிக்கிறது.
திரைகள் இல்லாத டீடாக்ஸ் வழிமுறைக்கு உதவும் 5 குறிப்புகள்..
1. திரைப்படங்களிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி உங்களுக்கு விருப்பமான நல்ல புத்தகத்தில் மூழ்கிவிடுங்கள். வாசிப்பு ஓய்வெடுக்க மட்டுமல்ல சிறந்த மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகும், ஏனெனில் அது தொடர்ச்சியான பதட்டமான எண்ணங்களிலிருந்து நம்மை விலக்கி வைக்கிறது.
2. இயற்கை நடை அல்லது நடைபயணம் செய்து நேரத்தை செலவிடுங்கள். , இயற்கையில் இருப்பது கார்டிசோலை அதிகரிப்பதன் மூலமும், நமது இதயத் துடிப்பைக் குறைப்பதன் மூலமும் மனதையும் உடலையும் அமைதிப்படுத்தும்.
3. மனநிறைவு தியானத்தைப் பயிற்சி செய்யலாம். தியானத்தில் அமரும் போது அலைபேசியை துண்டித்து அமைதியான இடத்தில் உங்கள் மூச்சில் கவனம் செலுத்துங்கள்.
4. ஓவியம் வரைதல், கைவினை செய்தல் அல்லது இசைக்கருவியை வாசிப்பது போன்ற படைப்புச் செயல்பாட்டில் ஈடுபடுங்கள். கலை மூலம் உங்களை வெளிப்படுத்துவது சிகிச்சை மற்றும் சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்.
5. உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் அனுபவங்களை ஒரு குறிப்பேட்டில் கையால் எழுத நேரம் ஒதுக்குங்கள். இந்த செயல்முறை உங்களுக்கு தெளிவு பெறவும், எண்ணங்களை செயலாக்கவும், தனிப்பட்ட வளர்ச்சிக்கான இலக்குகளை அமைக்கவும் உதவும்.
டிஜிட்டல் டீடாக்ஸ் கடைப்பிடித்து உடல் மற்றும் மன ஆரோக்கிய மகிழ்வு பெறுவோம்.