'நட்புன்னா என்னன்னு தெரியுமா?'

friendship
friendship
Updated on

நட்பு என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது

"உடுக்கை இழந்தவன் கை போல அங்கே இடுக்கண் களைவதாம் நட்பு"

"முகம் நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகம்நக நட்பதே நட்பு"

என்ற திருவள்ளுவரின் திருக்குறள்களும்,

"கூடா நட்பு கேடாய் முடியும்" என்ற ஔவையின் வாய்மொழியும்தான்.

நட்பு பற்றிய மற்ற சிந்தனையாளர்களின் பொன்மொழிகளைப் பார்ப்போம்.

  • உதவி என்று போகும் போது தான் உண்மையான நண்பன் யார் என்று தெரியும் -சாணக்கியன்

  • உலகில் அதிபதியாக இருப்பினும் ஒரு நண்பன் கூட இல்லாவிட்டால் அவன் ஏழைதான் -யங்

  • நட்பு என்பது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்துவிடும் வரை நாம் அதன் உண்மையான மதிப்பை உணர்வது இல்லை -நபிகள் நாயகம்

  • மனித உணர்ச்சிகளில் புரிந்து கொள்ள இயலாத ஒரு சிறப்பு உண்டு. அது நட்பு என்ற பண்பு -ஆஸ்கார் ஒயில்டு

  • நட்பு இன்பத்தைப் பெருக்கி துன்பத்தைக் குறைக்கிறது. இன்பத்தை இரட்டிப்பாக்குகிறது; துன்பத்தைப் பகிர்ந்து கொள்கிறது -எடிசன்

  • நட்புக் கொள்வதில் நிதானமாக செல்லவும். ஆனால் நட்பு கொண்ட பின் உறுதியாகவும் நிலையாகவும் நிற்கவும் -சாக்ரடீஸ்

  • நண்பர்கள் இல்லாதவர் வாழ்ந்து என்ன? வீழ்ந்து என்ன? ஒன்றுமே இல்லை -ரூதர் போர்டு

  • நட்டாற்றில் நழுவி விடும் நட்பு நமக்கு இருப்பதை விட உயர்ந்த மனப்பான்மை உடைய நல்லவர்களின் விரோதம் மேலானது -மோலியர்

  • உண்மையான நட்பை உடல் நலத்திற்கு உவமையாக கூற முடியும். அதை இழந்து விடும் வரை நாம் உண்மையான மதிப்பை அறிந்து கொள்வதே இல்லை. -கோல் பெர்ட்

  • உறுதியான நட்பு என்பது இன்பத்திற்கு எல்லாம் அப்பாற்பட்ட அருமையான இன்பமாகும். அது நம் கவலைகளை அகற்றும். துன்பங்களைக் குறைக்கும்.

    -செனேகா

  • நட்பின் சிறப்பை அனைவரும் உணர்ந்து விட்டால், உலகத்தின் பாதி பிரச்னை தீர்ந்துவிட்ட மாதிரி தான் -நெப்போலியன்

  • கதிரவன் காற்றை வெப்பப்படுத்துகிறான். ஆனால் நட்புறவோ இதயத்தை கதகதப்பாக்குகிறது -குருசேவ்

  • நண்பனைப் பெறுவதற்கு நீ ஒரு நண்பனாக இருப்பது ஒன்றே வழி -எமர்சன்

  • நண்பர்கள் இல்லாவிட்டால் பெரும்பாலோர் துன்பத்தின் தூணாகவே நின்று இருப்பர் -ஜெம்மி டெய்லர்

இதையும் படியுங்கள்:
காலையில் கண் விழித்ததும் செய்யக் கூடாத 5 செயல்கள் என்னென்ன தெரியுமா?
friendship
logo
Kalki Online
kalkionline.com