ஏ சி சர்வீஸ் செய்யும்போது நீங்கள் செய்யும் 'இந்த' தவறை தவிர்த்திடுங்கள்!

When servicing the AC
When servicing the AC
Published on

ன்றைய காலகட்டத்தில் ஏசி என்பது அனைவரது வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய பொருளாக மாறிவிட்டது. அதுவும் கோடை காலத்தில் பலரது வீடுகளில் ஏசி இல்லாமல் ஒரு வேலையும் ஓடாது. கோடை காலத்தில் ஏசியை பயன்படுத்தும் முன் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஏசியை அவ்வப்போது சர்வீஸ் செய்யாவிட்டால் அதில் தூசி, அழுக்கு, துரு போன்ற பிரச்னைகள் ஏற்படத் தொடங்கும். அது மட்டுமல்லாமல் எரிவாயு கசிவு போன்ற பிரச்னைகளும் எழுகின்றன. இதனால் எசியின் குளிரூட்டும் திறன் படிப்படியாக குறைகிறது.

ஒவ்வொரு 15 நாட்களுக்கும் அல்லது மாதத்திற்கு ஒருமுறை ஃபில்டர்களை எடுத்து, சோப்பு நீர் அல்லது தண்ணீரில் கழுவி, உலர்த்தி மீண்டும் பொருத்தவும். இது காற்றோட்டத்தை மேம்படுத்தி, குளிர்ச்சியை அதிகரிக்கும்.

ஏசியின் வெளிப்புற யூனிட்டில் தூசி, இலைகள் படிந்திருந்தால் அவற்றை அகற்றவும். இது வெப்பத்தை வெளியேற்ற உதவுகிறது. ஏசி தண்ணீர் வெளியேறும் குழாயில் அடைப்பு இருந்தால், தண்ணீர் உள்ளே கசியும். எனவே, அந்த குழாயை அவ்வப்போது சுத்தம் செய்யவும்.

கோடை காலத்தில் ஏசியை 24-26 வெப்பநிலையில் இயக்குவது, குறைந்த மின்சாரத்தை உட்கொள்ளும். வருடத்திற்கு ஒருமுறை, கோடை காலத்திற்கு முன், தகுதியான நிபுணர்களைக்கொண்டு சர்வீஸ் செய்வது அவசியம். இது கம்ப்ரசர் (Compressor) பழுதாவது மற்றும் கேஸ் கசிவு போன்ற பிரச்னைகளைத் தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்!
When servicing the AC

ஆனால் பழைய ஏசி யில் சில பிரச்னைகள் உள்ளன. வீட்டில் பயன்படுத்தும் ஏசி10 ஆண்டுகள் பழமையானது என்றால் கட்டாயம் சில விசயங்களை செய்யவேண்டும்.

முக்கியமாக பழைய ஏசிக்கள் குளிர்பதனத்தை (Refrigent) கசியவிட வாய்ப்புள்ளது. கணினியை இது பாதிக்கும். அதாவது அழுத்தத்தை அதிகரிப்பதுடன் மின் நுகர்வையும் அதிகரிக்கிறது. எனவே தகுதியான சர்வீஸ் நிபுணர்கள் ஆலோசனை பெற்று தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்

ஒரே ஏசி யை 10 ஆண்டுகள் பயன்படுத்திய பின்னர் அதனை மாற்றுவது நல்லது. ஒரு ஏசியின் ஆயுட்காலம் 10 முதல் 15 ஆண்டுகள்தான். என்றாலும் ஏசி பழையதாகும்போது அதில் உள்ள Compressor, மோட்டார் மற்றும் காயில் போன்ற கூறுகளின் வேலையும், வேகமும் குறையத் தொடங்குகிறது. இதன் காரணமாக, வீட்டை குளிர்விக்க பழைய ஏசி கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது.

மேலும், காலப்போக்கில் ஏசியின் அழுத்தமும் அதிகரிக்கிறது. ஏசியின் முக்கிய பாகங்கள் மோசமடையத் துவங்குவதுடன் மின்சாரம் வீணாவதும் அதிகரிக்கிறது. அத்துடன் செயல்திறனும் குறைகிறது. பழைய ஏசிக்களில் Inverter தொழில்நுட்பம் இல்லை என்பதால், வெப்பநிலைக்கு ஏற்ப கம்ப்ரசர் வேகத்தை சரி செய்யாது.

பழைய ஏசிக்கள் பெரும்பாலும் குறைந்த நட்சத்திர மதிப்பீடுகளைக் கொண்டுள்ளன. அதாவது இந்த பழைய ஏசிகள் உண்மையில் குறைந்த ஆற்றல் திறன் கொண்டவை. இதன் விளைவாக, அவை அதிக சக்தியை பயன்படுத்துகின்றன. அதாவது மின்சார விரயம் அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் பிள்ளைகள் தவறான படிப்பை தேர்ந்தெடுக்க இதுதான் முக்கிய காரணம்… உடனே உஷாராகிக் கொள்ளுங்கள்!
When servicing the AC

இவையனைத்திற்கும் தீர்வு என்னவென்றால் புதிய ஏசி யை வாங்குவதுதான். 10 ஆண்டுகள் ஆன பின்னர் புது ஏசி யை மாற்றலாம். சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட புதிய ஏசிகள் மின்சார விரயத்தைக் குறைகின்றன. அத்துடன் சிறந்த குளிரூட்டும் வசதிகளை வழங்குவதுடன் மின்சார பயன்பாட்டை 30-40 சதவீதம் வரை பெருமளவில் குறைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com