vegetables cutting
While chopping vegetables

அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்..!

Published on

காய்கறிகள் நறுக்கும்போது விரலை நறுக்கிக்கொண்டு விட்டீர்களா? காயம்பட்ட இடத்தை துடைத்து விட்டு தேனைத் தடவுங்கள். ஒரே நாளில் காயம் ஆறிவிடும்.

ஆஸ்துமா நோயாளிகள் பூவன் வாழைப்பழம் உண்ணக்கூடாது. பூவன்  வாழைப்பழத்தில்   ஹிஸ்டமின்  எனப்படும் அலர்ஜி உண்டாக்கும் பொருள் உள்ளதால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்றதல்ல.

'கேன்டிடா' என்ற நுண் கிருமிகள் தொண்டைப்புண் ஏற்படுத்தக் கூடியவை.  இவை உற்பத்தியாகும் இடம் பல் துலக்கும் பிரஷ்கள்தான். மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, பல் துலக்கும் பிரஷ்ஷை மாற்றுவதாலும், ஈ ரமாக இல்லாமல் பிரஷ்ஷை  உலர்த்தி வைப்பதாலும் இந்தக் கிருமித்தொற்றை தவிர்க்கலாம்.

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் குளிர்ந்த நீர் பருக வேண்டும். இது சுறு சுறுப்பையும், உற்சாகத்தையும் தரும். வயிறும் சுத்தமாகும்.

வயிற்றில் சங்கடமா? உடனே அரை டம்ளர் மோரில் சிறிது ஜலம் விட்டு துளி உப்பும், கொஞ்சம் பெருங்காயப் பொடியும், அரை ஸ்பூன் சர்க்கரையும் போட்டுக் கலக்கி குடியுங்கள். சற்று நேரத்தில் நிவாரணம் கிடைக்கும்.

முதுகுவலி ஏற்பட பல காரணங்கள் உண்டு. பெரும்பாலும் இந்தக்காலத்தில் முதுகு வலி ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது குண்டும், குழியும் நிறைந்த  சாலையில் இருசக்கர வாகனப் பயணம், அதிக பாரங்களை தூக்குவது, குதிகால் பகுதியில் உயரமான காலணிகளை அணிவது, தவறான முறையில் உட்காருவது என்ற செயல்களினால்தான்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கட்டியவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு பல வீடு!
vegetables cutting

காலில் உளைச்சல் இருக்கும்போது தைலங்களை காலில் தடவாமல்,  உள்ளங்காலில், அதாவது பாதத்தின் அடியில் அழுத்தித் தேய்த்தால் விர்ரென்று ஏறி வலி உடனே குறைந்துவிடும்.

மூட்டுவலிக்கும், குளிர்ச்சிக்கும் ஆகவே ஆகாது. குளிர்ச்சி அதிகம் சேர்ந்தால் மூட்டுவலி அதிகரிக்கும். அதனால் மூட்டுவலி உள்ளவர்கள் ஈரத்தரையில் வெறும் காலால் நடப்பதை தவிர்க்க வேண்டும்.

அஜீரணம் ஏற்பட்டால்  இரண்டு கரண்டி கருவேப்பிலைச் சாறை ஒரு கிளாஸ் மோரில் கலந்து குடித்தால் போதும்.

எல்லாவித வேலைகளுக்கும் ஒரே மாதிரியாக சக்தியை நாம் செலவழிப்பதில்லை. மாடிப்படிகளில் ஏறி இறங்குவதற்குத்தான்  மிக அதிகமான சக்தி செலவழிகிறது, 800 கலோரிகள்.  தரையை பெருக்கித் துடைப்பது, துணிமணிகள் இஸ்திரி போடுதல், இவை இரண்டிற்கும் 100 கலோரி சக்தி செலவழிகிறது.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் வெண்டைக்காய், புடலங்காய், பூசணி போன்ற காய்கறிகளை உண்ண வேண்டும்.   கிழங்கு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com