
பலருக்கும் சில நேரங்களில் கண்கள் படபடவெனத் துடிப்பது நடக்கும். கண்கள் மட்டுமின்றி, கண்களை ஒட்டி அமைந்துள்ள புருவம், புருவ மத்தி மற்றும் இமைப் பகுதிகளிலும் இந்தத் துடிப்பு நிகழும். கண்கள் துடிப்பது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு என்று மருத்துவத் துறை சார்பாகக் கூறப்பட்டாலும், கண்கள் துடிப்பது சிலரது வாழ்க்கையில் நடைபெறப்போகும் சம்பவங்களின் முன்கூட்டிய அறிகுறி என்றும் பலராலும் நம்பப்படுகிறது. இந்தக் கண் துடிப்பு குறித்தான நம்பிக்கைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஒருவரின் வலது கண் துடித்தால் அவரது வாழ்வில் கெட்டது நடைபெறும் என்றும், இடது கண் துடித்தால் நல்லது நடக்கும் எனவும் நாமாகவே கண்களையும் விட்டு வைக்காமல் நாமே ஜோசியம் பார்த்துவிடுகிறோம். இந்த நம்பிக்கை நல்லது என்று பெரிதாகச் சொல்ல முடியாது. வேண்டுமானால் கெட்டது எனக் கூறலாம்.
ஏனெனில், ஒருவரின் கண்கள் துடிப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக, தூக்கமின்மையில் தொடங்கி, மூளை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரை ஒருவரின் கண்கள் துடிப்பதற்கு பின்னால் நிறைய காரணங்கள் உள்ளன.
கண் துடிப்பது எதனால் ஏற்படுகிறது?
உடலில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில நேரங்களில் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிப்பது இயல்பு. இனி, கண்கள் துடிப்பதற்கான சில பலன்கள் குறித்து பார்க்கலாம்.
ஒருவர் கண்ணின் வலது புருவம் துடித்தால் பண வரவு ஏற்படும். இடது புருவம் துடித்தால் குழந்தை பிறப்பு மற்றும் கவலை உண்டாகும். புருவ மத்தியில் துடித்தால் உங்களுக்குப் பிரியமானவருடன் இருக்க நேரிடும்.
ஒருவரின் கண்களின் நடுபாகம் துடித்தால், திருமணமாகி இருந்தால் அவர் தமது மனைவியைப் பிரிய நேரிடும். ஒருவரது வலது கண் துடித்தால் அவர் நினைத்தது நடக்கும். இடது கண் முடித்தால் அவர் மனைவியை பிரிதல் மற்றும் கவலை உண்டாகும்.
ஒருவர் வலது கண்ணின் இமை துடித்தால் அவருக்கு சந்தோஷமான செய்தி வரும். இடது கண்ணின் இமை துடித்தால் கவலை உண்டாகும். வலது கண்ணின் கீழ் பாகம் துடித்தால் அவர் வீண் பழியை சுமக்க நேரிடும். அதேபோல், இடது கண்ணின் கீழ் பாகம் துடித்தால் வாழ்வில் செலவு ஏற்படும்.