‘அதிகாலை சுபவேளை’ என ஆய்வுகள் ஏன் கூறுகின்றன?

அதிகாலை சுபவேளை
அதிகாலை சுபவேளை
Published on

ரு நாள் நல்லபடியாகக் கழிய வேண்டுமா? காலையில் எழுந்ததும் முதல் 60 நிமிடங்களை உங்களுக்காக செலவிடுங்கள் என்கிறார் டிம் டெர்ரிஸ். இவர், ‘தி 4 அவர் ஒர்க் வீக்’ என்ற புகழ் பெற்ற புத்தகத்தை எழுதியவர். காலையில் எழுந்ததும் முதல் 20 நிமிடங்கள்  தியானம் செய்ய ஒதுக்குங்கள். அடுத்த 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய ஒதுக்குங்கள். அடுத்த 20 நிமிடங்களை அன்றைய நாளுக்கு செய்ய வேண்டிய திட்டங்களைத் தீட்ட ஒதுக்குங்கள்.

காலையில் தியானம் செய்வதால் மனித மூளையில் வன்முறையை தூண்டும் காரணிகள் குறைந்து, நன்முறை காரணிகள் ஊக்குவிக்கப்படுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்கிறார்கள் விஸ்கான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

தினமும் அதிகாலையில் குளிர்ந்த காற்று வீசும் போது 30 நிமிடங்கள் சத்தமில்லாத இடமாகப் பார்த்து விரைவாக நடந்து அல்லது உடற்பயிற்சி செய்து வாருங்கள். அது உங்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தும். அத்துடன் உங்களுக்கு துடிப்பான தோற்றத்தையும் தரும் என்கிறார்கள் லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்!

அதிகாலை வேளையில் எழும்போது நம்முடைய மூளை சுறுசுறுப்பாக இயங்கும். எனவே, உங்களுடைய வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை எடுக்க அதிகாலை நேரத்தைப் பயன்படுத்துங்கள். காலையில் எழுந்து ஒருவர் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தால் அன்றைய தினம் உங்கள் வேலை சிறப்பாக, பயனுள்ளதாக நிறைவடையும் என்றும் அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் இலக்கினை அடைய முடியும் என்கிறார்கள் அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

காலையில் எழுந்ததும் எதிர்காலத்திற்கான திட்டங்களை சிந்திப்பவர்கள் வேலையில் அதிக  ஈடுபாடு காட்டியதும், துல்லியமாக வேலையை முடித்ததும், எதிர்காலத்தில் சிறந்து விளக்குவதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வாழ்க்கையில் வெற்றி பெற அதிகாலையில் எழும் பழக்க த்துடன் அந்த நேரத்தில் எதிர்கால திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த உங்கள் வெற்றி நிச்சயம் என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்திருக்கும் 10 வகை காய்கறிகள்!
அதிகாலை சுபவேளை

சர்வே ஒன்றில் அதிகாலையில் எழுபவர்களின் மூளை, மற்றவர்களை விட நன்கு செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. அதிகாலையில் எழும் குழந்தைகளின் கண் பார்வைத் திறன், மூளைத் திறன் மற்றும் இதய ஆரோக்கியம் சிறந்து விளங்கும் என்கிறார்கள். உங்கள் உடல் ஸ்லிமாக வேண்டுமா? அதிகாலையில் விழித்து பழகுங்கள். அப்படி அதிகாலையில் விழித்து விடுபவர்கள் ஸ்லிம் ஆவதுடன் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல் நலத்துடன்  இருப்பார்கள் என்று லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும், அதிகாலையில் நல்ல சுத்தமாக காற்றை சுவாசிக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் உடலில் ஆற்றல் அதிகரித்து, வேலையில் உங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். நம்முடைய ஆளுமை திறமைக்கும்  நம்முடைய தூக்க முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதிகாலை எழும் பழக்கமுடையவர்கள் அதிக ஒழுக்கமுடையவர்களாக விளங்குவதை வார்விக் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

மிகப் பிரபலமானவர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என்று உலக அளவில் எடுத்துக் கொண்டால், இவர்கள் அனைவரும் அதிகாலையில்  எழும் பழக்கத்தை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இதில் அவர்கள் அனைவரிடத்திலும் ஒற்றுமையை பார்க்க முடிகிறது. ஒரு வேளை இந்த நல்ல பழக்கமே அவர்களின் வெற்றிக்கு ஒருவகையில் காரணமாக இருக்கலாம். அதிகாலையில் விழிப்பவர்களிடம் நேர்மறை எண்ணங்கள், எளிதாக திருப்தி அடையும் மனப்பான்மை , வாழ்க்கை மீது அதிக நம்பிக்கை போன்ற நற்குணங்கள் கூடுதலாக  இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com