Rapid Eye movement எனப்படும் REM நிகழ்வில், மூளையிலிருந்து பெரியதும் சிறியதுமான மின்னலைகள் உருவாகின்றன.
வயதானவர்கள் இரவில் ஐந்து அல்லது ஆறு முறை கனவு காண்கிறார்கள். ஒவ்வொரு தொண்ணூறு நிமிடத்துக்கும் நாம் கனவு காண வாய்ப்பு உண்டு.
ஒவ்வொரு தடவையும் கனவு காணும் போது, அது அஞ்சிலிருந்து பத்து நிமிடம் வரை நீடித்து இருக்கலாம்
D State (தடையற்ற தூக்கம்) எனப்படும் REM மற்றும் EEG இன் ஒருங்கிணைந்த செயல், இரவு முழுவதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் இத்தகைய நிலை முன் ஏற்பட்ட நிலையை விடக் கால அவகாசம் கூடுதல் கொண்டதாக நிகழ்கிறது.
மூளை நரம்பின் அதிர்வுகள் உறங்கும் மனிதனுடைய மற்ற உறுப்புகளைச் சென்றடைவதில்லை; இதனால் உறங்கும் போது மனிதன் கனவு காணும் போது எழுந்து ஓடுவதில்லை, நடப்பதில்லை, கனவில் கூட ஓட இயலாத அல்லது வேகமாக நடக்காத நிலையை உணரலாம்.
ஒருவருடைய வாழ்க்கையோடு தொடர்பில்லாத ஏதோ ஒரு நிகழ்ச்சியைக் கனவில் ஒருவன் காண்பதற்குக் காரணம் D State தன்மையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளாகும்.
தன் வாழ்நாளில் அடைய நினைத்த அல்லது நிறைவேறாத ஆசைகளின் விளைவால் அந்த ஆசைகள் நிறைவேறுவதாகக் கனவு காண்கிறான்.
இவ்வாறு நடக்க வேண்டும் என்று நினைவின் முதிர்வே கனவாகும் . கனவு காண்பவன் நிஜ வாழ்க்கையில் அடைய முடியாததை அல்லது செய்ய முடியாததைச் செய்து விட்டதாக ஒரு நிலையை அடைகிறான்.
சுமார் 55% மக்கள் ஒரு கனவின் நடுவில் கனவு காண்பதை உணர்ந்திருக்கிறார்கள்.
ஒரு கணத்தில் நீங்கள் கனவு காண்கிறீர்கள் என்பதை உணரும் அனுபவம் தெளிவான கனவு என்று அழைக்கப்படுகிறது.
மக்கள் தெளிவான கனவு காணும்போது, அடுத்து என்ன நடக்கும் என்பதை அவர்களால் சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியும், எனவே அவர்கள் நிஜ வாழ்க்கையில் செய்ய விரும்பும் விஷயங்களைச் செய்கிறார்கள், எடுத்துக்காட்டாக ஒரு சூப்பர் ஹீரோவைப் போல காற்றில் பறப்பது, இறந்த அன்புக்குரியவருடன் நேரத்தை செலவிடுவது அல்லது உலகம் முழுவதும் பயணம் செய்வது. இப்படி கனவுகளில் நிறைய வேறுபாடுகள்.
உபரித் தகவல்: உத்திரத்தின் கீழே உறங்குவதற்கும் கனவு காண்பதற்கும் என்ன தொடர்பு?
கிராமங்களில் பெரும்பாலான வீடுகள் ஓட்டு வீடுகளாய் அமைக்கப்பட்டிருக்கும். இவை பலமான உத்திரங்களின் (மரக்கட்டை) மேல் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த உத்திரங்களில் விஷ ஜந்துக்கள் தங்கியிருந்து இரவில் அவை அதன் கீழே உறங்குபவர் மேல் விழுந்து ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும்.
மேலும் ஏதோ ஒரு காரணத்தால் அசைவுகள் ஏற்பட்டால் முதலில் நொடித்து விழுவது உத்திரம் தான் .
Prevention is better than Cure என்கிற வார்த்தைக்குப் பொருள் படியாக உத்திரத்தின் கீழே உறங்காதே என்று பெரியவர்கள் சொல்லி வந்தனர். ஆனால் உத்திரத்தின் கீழே உறங்குவதற்கும் கனவு காண்பதற்கும் எந்த வித நேரடி தொடர்பும் கிடையாது.