

புதிய வீடோ பழைய வீடோ வீட்டில் இருக்கும் உபகரணங்கள் ஏதேனும் பழுது என்றால் உடனடியாக பதட்டம்தான் வரும். அதிலும் மின்சாதனங்கள் என்றால் எலக்ட்ரிஷியனை அழைப்போம். தண்ணீர் வரவில்லை என்றால் உடனே பிளம்பரை அழைப்போம். ஆனால் ஒரு விஷயம். இந்த பைப்புகளில் ஏதேனும் பிரச்னை என்றால் அவ்வளவு சீக்கிரம் பிளம்பர் கிடைக்க மாட்டார்கள். ஏன் நாமே செய்தால் என்ன என்று ஒரு சிலர் நினைப்போம். அது அத்தனை சுலபமான வேலை இல்லை எனினும் சில எளிதான முறைகளில் முயற்சி செய்யலாம்.
உதாரணமாக பைப்புகளில் உப்பு படிந்து அதனால் தண்ணீர் மிக மெதுவாக வரும்போது நமக்கு நேரம் விரயமாகி எரிச்சல்தான் வரும். இதோ நாமே சில எளிய வழிகளில் பைப்புகளில் படியும் உப்பை அகற்றலாம். வாருங்கள் பார்ப்போம்.
எதனால் குழாய்களில் உப்பு படிகிறது?
தண்ணீர் குழாய்களில் உப்பு அல்லது கனிமப் படிவு (salt / mineral scaling) உருவாவதற்கான முக்கிய காரணங்கள் பல உண்டு. ஆனால் பொதுவாக கடினமான நீர் (Hard Water), கால்சியம் (Ca), மக்னீசியம் (Mg) போன்ற கனிமங்கள் அதிகமாகி அவைகள் குழாய்களின் உள்பகுதியில் ஒட்டிக்கொள்ளும் படிகமாகிறது. இந்த கனிமப் படிகத்தையே பொதுவாக “உப்பு” என கூறுவோம்.
மேலும் கீசர் அல்லது ஹீட்டரில் வெந்நீரை பயன்படுத்தும் நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும்போது கனிமங்கள் தண்ணீரிலிருந்து பிரிந்து குழாயின் சுவற்றில் படிகமாக ஒட்டுவது, சில பகுதிகளில் நிலத்தடி நீரில் சோடியம் குளோரைடு (NaCl) அளவு அதிகமாக இருக்கும்போது, அந்த நீர் நேரடியாக நீண்ட காலம் பைப்பில் ஓடுவதால் உப்பு படிகமாக ஒட்டுவது, நீரின் pH சமநிலை இல்லாமை, குழாய்களின் தரம், உப்பு, கால்சியம் போன்றவை deposit ஆக அதிக வாய்ப்பு உள்ள மிக மெதுவான நீரோட்டம் போன்ற பல காரணங்களால் குழாய்களில் உப்பு படிகிறது.
எந்த முறைகளில் குழாய்களிலுள்ள உப்பை அகற்றலாம்?
உங்கள் அலுவலகங்கள் மற்றும் மிகப்பெரிய தொழிற்சாலைகளில் தண்ணீர் டேங்க் மிகப்பெரியதாக இருக்கும் அதன் வழியே பல இணைப்புகளை பைப்புகள் நீர் வர நீர் வரும். இதுபோன்ற சமயங்களில் தொழிலாளர்களே டாங்கில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு எல்லா அனைத்து பைப்புகளையும் அடைத்து விட்டு அவுட்செட் வால்வையும் க்ளோஸ் செய்து ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஊற்றி சில மணி நேரங்கள் அல்லது 8 முதல் 12 நேரங்கள் விட்டு பின் தேங்காய் சுத்தம் செய்து கழுவி விடுவார்கள் இந்த முறையால் டேங்கில் படிந்துள்ள உப்பு படிவங்களும் பைப்புகளில் அடைத்துள்ள உப்பும் வெளியேறி தடையற்ற தூய்மையான நீர் கிடைக்கும்.
இதில் ஆபத்துகளும் உண்டு ஹைட்ரோகுளோரிக் ஆசிட் மிகவும் வீரியமிக்கது என்பதால் அதை பயன் படுத்தும்போது கைகளில் உரையுடனும் முகத்தில் மாஸ்க் அணிந்தும் செயல்பட வேண்டும். ஆசிட் கைகளில் பட்டால் அரிப்பு எரிச்சல் ஏற்படும். அத்துடன் அதன் புகை கண்களில் பட்டால் மிகவும் பாதிப்பு என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இம்முறையை சிலர் வீடுகளிலும் செய்வார்கள். ஆனால் அது அத்தனை பாதுகாப்பானது என்பதாக சொல்லமுடியாது. அத்துடன் வேலையும் அதிகம். அதே நேரம் இதில் தேர்ந்த பிளம்பர்கள் மூலமாக இதை செய்தால் மட்டுமே பாதுகாப்பு.
வீடுகளில் உள்ள குழாய்களில் உப்பு படிந்தால் முதலில் ஹீட்டரில் வெதுவெதுப்பான (கொதிக்காத) நீரை எடுத்து அந்த குழாய் பகுதியில் 5–10 நிமிடங்கள் ஓடவிடவும். இம்முறை சிறிய உப்பு படிவங்களை கரைக்க உதவும்.
எலுமிச்சை / வெள்ளை வெினிகர் பயன்படுத்தும் முறை மிகவும் பாதுகாப்பான முறையாக சொல்லப்படுகிறது. இம்முறையில் குழாயைத் திறந்து, 1:1 அளவில் வெள்ளை வினிகர் மற்றும் வெந்நீர் கலவையை ஊற்றி பரவவிடவும். 2 மணிநேரம் ஊறவிடவும். பின்னர் அதிக அழுத்தத்தில் நீரை திறந்துவிட்டு ஓடவிடவும். இதில் படிந்த உப்பு கரைந்து வருவதை காணலாம்.
இதேபோல மிதமான அடைப்புக்கு பேக்கிங் சோடா + வினிகர் (Foaming method) உதவும். முதலில் குழாயில் 2–3 ஸ்பூன் பேக்கிங் சோடாவைப் போட்டு அதன் பின் ஒரு கப் வினிகர் ஊற்றவும். 30–45 நிமிடங்கள் காத்திருந்து பின்னர் வெந்நீரால் flush செய்தால் போதும்.
குழாயின் உள்ளே அதிகமான (Deep blockage) உப்பு படிகங்கள் இருந்தால் Pipe snake / flexible cleaning spring கொண்டு உள்ளே நுழைத்து சுத்தம் செய்யலாம். PVC லைனில் scale அதிகமாக இருந்தால் சில பகுதிகளை மாற்றவேண்டும்.
மீண்டும் நினைவில் வையுங்கள். வீட்டில் இருக்கும் பைப்பில் உப்பை அகற்ற டேங்குகளில் தகுந்த பாதுகாப்பு இன்றி அமிலம் (strong acid, HCl போன்றவை) பயன்படுத்த வேண்டாம். இது குழாய்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தும்.