மிளகு புராதன காலமாக இந்தியாவில் உபயோகிக்கப்பட்டு வருகிறது. ‘பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் விருந்து உண்ணலாம்’ என்பது பழமொழி. நம் வீட்டில் அஞ்சறை பெட்டியில் தவறாத இடம் பிடித்திருக்கும் மிளகின் பயன்பாடு பற்றியும், அதை ஏன் சிராத்தம் போன்றவற்றிற்கு பயன்படுத்துவதில்லை என்பதற்கான காரணத்தையும் இந்தப் பதிவில் காண்போம்.
உங்க வீட்டு அஞ்சறைப் பெட்டியில் மிளகு உள்ளதா? இல்லை என்றல் இப்போதே வாங்குங்கள்.
உலகில் இந்தியாதான் கருமிளகை ஏராளமாக உற்பத்தி செய்யும் நாடு. ஆனால், மிளகு உற்பத்தி விஷயமாக அதிகம் கவனம் செலுத்தப்படாவிடில் முதலிடத்தை இந்தோனேஷியா கைப்பற்ற நேரும். இந்தியாவில் வருஷத்தில் ஆயிரம் டன் முதல் 10 ஆயிரம் டன் வரை மிளகு உற்பத்தியாகிறது. அமெரிக்கா ஏராளமாக மிளகை வாங்குவதால் டாலர்கள் சம்பாதிக்க மிகவும் உதவுகின்றன. வெளிநாடுகளில் இந்தியப் பொருட்களின் மார்க்கெட்களை ஏற்படுத்த இரண்டாவது உலக யுத்தம் மிகவும் உதவியாக இருந்தது. அதில் மிளகு உற்பத்தி செய்யும் இதர நாடுகளான இந்தோனேஷியா, மலேசியா, ஸரவாக் ஆகிய நாடுகள் ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்ததால் உலகின் மிளகு தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பு இந்தியாவுக்கு மட்டுமே இருந்தது.
சீனா கூட இந்தியாவிடமிருந்து ஏராளமான மிளகை வரவழைக்க ஆரம்பித்தது. அதற்கு முன்பே அமெரிக்கா வெகு காலமாக இந்தியாவிடம் இருந்து மிளகை வாங்கி வந்திருக்கிறது. இந்திய மிளகு குறைவுதான் என்றாலும், இதர நாடுகளில் மிளகு குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் அவற்றையும் அவர்கள் வாங்க ஆரம்பித்தார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மிளகு உற்பத்தி இரண்டாம்பட்ச பயிராகவே விவசாயிகளால் மதிக்கப்பட்டு வருகிறது. முதல்பட்சமாக இருந்தால் நல்ல லாபம் பெறலாம்.
இந்தியாவில் வருஷத்தில் ஆயிரம் டன் முதல் பத்தாயிரம் டன் வரை மிளகு உற்பத்தி ஆகிறது. சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விஸ்தீரணங்களில் மிளகு உற்பத்தி செய்யப்பட்டாலும், நிலங்கள் துண்டு துண்டாகவும், சிதறியும் கிடப்பதால் வருஷத்தில் 20 டன் கூட விளைச்சல் கிடைக்காத அளவுக்கு சிறு சிறு நிலங்களில் மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தோனேஷியா தனது பொருளாதார சுபிட்சத்திற்கு மிளகையே நம்பியிருக்கிறது.
மிளகை சிலி என்ற தென்னமெரிக்க நாட்டிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டதால் கடல் கடந்து வந்த இந்த மிளகை சிராத்தம் போன்ற காரியங்களுக்கு வைதீக இந்துக்கள் சேர்த்துக்கொள்வதில்லை. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் கைகண்ட மருத்துவப் பொருட்கள். இந்த திரிகடுகத்தில் மிளகு நடுநாயகமாக விளங்குகின்றது. பச்சை மிளகு காரம் மிகுந்தது. கேரள பிரதேசத்தில் மிளகு அதிகம் உற்பத்தி ஆகிறது.
அஜீரணம் மற்றும் வாயு சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு மிளகு கஷாயம் மிகவும் நல்லது. மிளகு காபியுடன் சிலர் பால் சேர்த்து அருந்துவர். மிளகையும் கற்கண்டையும் சேர்த்து பாடகர்கள் வாயில் போட்டுக்கொள்வதை பார்த்திருக்கலாம். அதற்குக் காரணம் தொண்டை கட்டிக் கொள்ளாமல் சாரீரம் நன்கு அமைய இது பெரிதும் உதவுகிறது என்பதால்தான்.
அயல்நாட்டு வியாபாரிகள் இந்தியாவில் காலடி வைத்தபோது அவர்களை முதலில் கவர்ந்தது மிளகுதான். மிளகை இன்று இந்தியாவின் பொருளாதார சட்டத்திற்கான அஸ்திவாரம் என்று கூட சொல்லலாம். மிளகு மற்றும் இதைப் போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதன் அவசியத்தை உணர்ந்து அதன் மீது விதித்த வரிகளை ஓரளவுக்குக் குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்தோனேஷியா 15 சதவிகித அளவுக்குத்தான் வரி விதிக்கிறது. இந்த அளவுக்காவது இந்தியாவில் மிளகு ஏற்றுமதிக்கான வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை இருந்து வந்தது.
இப்படி வீட்டில் அன்றாடத் தேவைக்கு பயன்பட்ட மிளகு பொருளாதாரத்தில் மிகப்பெரும் பங்களிப்பை கொண்டிருந்தது. அதன் அவசியத்தை உணர்ந்து மிளகை அவரவரும் தமது வீட்டில் இருக்கும் இடத்தில் சிறிதளவேனும் வளர்த்து விட முனைகிறார்கள். இப்பொழுது பல வீடுகளில் மிளகு வளர்ப்பு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. காரணம், மார்க்கெட்டில் அதிக விலைக்கு மிளகை வாங்க வேண்டி இருப்பதால் மக்கள் அதை வீட்டில் வளர்க்க விரும்புகிறார்கள்.
உங்க வீட்டு அஞ்சறைப் பெட்டியில் மிளகு உள்ளதா? இல்லை என்றல் இப்போதே வாங்குங்கள்.