வீட்டைப் பார்த்தே உங்கள் பண்புகளை அறியலாம்..!

Necessary items
Home Lifestyle articles
Published on

ருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரது பல விஷயங்களை பார்த்து அறியலாம். அதைப் போலவே ஒருவர் தன் வீட்டை எப்படி வைத்திருக்கிறார் என்பதை வைத்தும் அவரின் பண்புகளை அறியலாம்.

நிம்மதி, பாதுகாப்பு.

ஏனெனில் பலரும் தங்கள் உள்ளத்தை எப்படி வைத்திருக்கிறார்களோ? அப்படித்தான் வீட்டையும் வைத்திருக்கிறார்கள். தங்கள் ரசனைகள் என்னென்னவோ அவற்றையே வீட்டில் வெளிப்படுத்துகிறார்கள் ஏனெனில் எல்லோருமே தங்கள் வாழ்நாள்களின் பெரும்பகுதியை வீட்டிலேயே செலவழிக்கிறார்கள். வாழ்க்கை ஒருவரை எங்கேயோ கூட்டி சென்றாலும் அவர் எப்போதும் நிம்மதியும், நம்பிக்கையும் பாதுகாப்பும் தேடி திரும்பவும் வரும் இடமாக வீடுதான் இருக்கிறது.

வீட்டில் எல்லா பொருட்களையும் நேர்த்தியாக அடுக்கி வைத்திருக்கும் ஒருவர் தன் வாழ்க்கையையும் நேர்த்தியாக வரையறுத்து வைத்திருப்பார். எந்த வேலையையும் சொன்ன நேரத்துக்குள் சொன்னபடி முடிக்கும் நேர்த்தி அவரிடம் இருக்கும்.

வீட்டை குப்பையாக கலைத்துப்போட்டு வைத்திருக்கும் ஒருவரிடம் தெளிவான சிந்தனைகள் இருக்காது. தேவையற்ற பொருட்களை வாங்கி வீடு முழுக்க குவித்து வைத்திருக்கும் அவர்களிடம் பண நிர்வாகம் என்பது சுத்தமாக இருக்காது.

தேவையற்ற மிஞ்சிய ஆடம்பரம் காட்டுபவர்கள் ஒவ்வொருவரும் தற்பரமே பேசும் நபர்களாக இருப்பார்கள்.

சின்ன இடத்திலும் எல்லாவற்றையும் அடக்கி சுத்தமாக வைத்து நிறைவு காட்டும் மனிதர்கள், குறைந்த வருவாயிலும் நிறைவாக வாழத் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
பைசா செலவில்லை... வீட்டில் உள்ள பொருளை வைத்தே கெமிக்கல் இல்லா பூச்சிகொல்லி ஸ்ப்ரே! செய்யலாமே!
Necessary items

பெரும்பாலான நேரங்களில் ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்கும் வீடுகளில், இருக்கும் மனிதர்கள் அக்கம்பக்கத்தினருடன்  நெருங்கி பழகுவார்கள். அந்த வீடுகளில் எப்போதும் சிரிப்பு சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்.

சிலர் எல்லா கதவுகளையும் இறுக்கப்  பூட்டியிருப்பின் இவர்கள் தங்கள் மனக்கதவுகளையும் பூட்டியே வைத்திருப்பார்கள்.

கலை ரசிகர்களின் வீடுகளில் ஓவியங்களும், சிலைகளும் ஆங்காங்கே பளிச்சிடும். எவருடைய மனதையும் படிக்கிற கண்ணாடி யார் அகயிலும் கிடையாது நம் வீடுகளை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டியது.

அதற்கு சில டிப்ஸ்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க சில வழிகள்.

வீடு முழுக்க பொருட்களை அடைத்து வைக்காதீர்கள். உங்களுக்கு பிடித்தமான அவசியமான பொருட்கள் மட்டுமே இருக்கட்டும்.

 ஃபர்னிச்சர்களை தேவையில்லாமல் வாங்காதீர்கள்.ஒரு சோபா நன்றாக இருக்கும்போது தள்ளுபடியில் கிடைக்கிறது என இன்னொன்று வாங்குவது அபத்தம்.

ஜன்னல்களில் அகன்ற திரைச்சீலை மாட்டி வைப்பது அறையையும், நேர்த்தியாக காட்டும். வீட்டுக்குள் தூசி படிவதை தடுக்கும்.

ஹால்மற்றும் படுக்கை அறைகளில் அறுபது சதவீதத்துக்கு மேற்பட்ட தரைப்பரப்பை பர்னிச்சர்கள் ஆக்கிரமிக்ககூடாது.

நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் இருக்கும் பொருட்களை பார்த்து அதேபோல வேண்டும் என வாங்கி வைக்காதீர்கள். உங்கள் வீட்டிற்கு எது பொருத்தம் எது தேவை என்பதை பார்த்து வாங்க வேண்டும் .எது வசதி என்பதையும் உணர்ந்து முடிவெடுங்கள்.

சுவர்களில் தேவையில்லாத படங்களை மாட்டி வைக்காதீர்கள் சின்ன சின்னதாக நிறைய படங்களை மாட்டி வைத்தால் பார்க்க நன்றாக இருக்காது.

இதையும் படியுங்கள்:
கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்க வாஸ்து சொல்லும் வழிகள்!
Necessary items

சுவர்கள் பளிச்ச நிற்பது போலவே கதவுகளும் பொலிவுடன் இருக்க வேண்டும் அது உங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்களை ஒட்டி வைக்காதீர்கள்.

சுவர்களில் பொருத்தமான இடங்களில் சரியான அளவில் கண்ணாடிகள் வைக்க வேண்டும். சிறிய அறையில் பிரம்மாண்ட கண்ணாடி பொருத்தமாக இருக்காது. பெரிய ஹால் சுவரில் சின்னதாக கண்ணாடி மாட்டி இருந்தாலும் அழகாக இருக்காது.

வாழ்க்கை ஒவ்வொருவரையும் எங்கோ கூட்டிச் சென்றாலும் அவர்களுக்கு நிம்மதி தருவது வீடாக இருக்கிறது. அதனால் வீட்டை  சுற்றியும், சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com