

வயதானவர்களை இளமையாகவே வைத்திருக்கும் 10 பழக்கங்கள் (Healthy Habits):
1. இவர்கள் ஒரு இடத்திலேயே இருக்கமாட்டார்கள். இவர்கள் எலிவேட்டரைத் தவிர்த்து படியை பயன்படுத்துவார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதை NEAT. (Non Excercise Activity Thermogenesis) என்று கூறுவார்கள். இது ஜிம்முக்கு செல்வதை விட அதிக கலோரிகளை குறைக்கச் செய்யும். தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பதும் ஒருவித தியான நிலைதான்.
2. தினமும் இவர்கள் ஒரே நேரத்தில் உறங்குவார்கள். நல்ல உறக்கம் பசி, ஹார்மோன்கள், மெடபாலிசம் மற்றும் தசைகளை நல்ல நிலையில் வைக்கும். இவர்கள் உறங்குவதற்கு முன் அறை இருட்டாக இருப்பதை உறுதி செய்வார்கள். இதனால் உடலில் இயற்கையான ஒரு ரிதம் ஏற்படும்.
3. ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் உள்ள வயதானவர்கள் பதப்படுத்திய உணவுகளைத் தவிர்த்து பழங்கள், புரதம் மற்றும் முழு தானியங்களையே உண்ணும் பழக்கத்தில் இருப்பார்கள். உதாரணமாக, வாசனையுள்ள எந்த பொருளையும் சாப்பிடுவதை விட ஆப்பிளையே சாப்பிடுவார்கள்.
4. வயதானாலே நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், நல்ல ஆரோக்கிய பழக்கம் உள்ள வயதானவர்கள் எங்கு சென்றாலும் கையில் தண்ணீர் பாட்டிலையும் எடுத்துச் செல்வார்கள். சாப்பிட்ட பிறகு மற்றும் சாப்பிடுமுன் மற்றும் வேண்டிய அளவு நீரேற்றத்தோடு இருப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். இதனால் மூட்டு ஆரோக்கியம், நல்ல செரிமானம் மற்றும் உடல் செயல்பாடுகள் நல்ல நிலையில் இருக்கும்.
5. சோர்வு, பதட்டம் இவர்களை வந்து சேருவதற்கு முன்பாகவே அவற்றை முறியடிப்பார்கள். சிலர் தியானத்தில் ஈடுபடுவார்கள். சிலர் தோட்ட வேலையில் ஈடுபடுவார்கள். இன்னும் சிலர் நீண்டதூரம் நடைப்பயிற்சி செல்வார்கள். இப்படி ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவார்கள்.
6. தனிமை என்பது கொடுமை என்பதை உணர்ந்த இவர்கள் எப்போதும் சமூகத் தொடர்பிலேயே இருப்பார்கள். இவர்கள் நண்பர்கள், உறவினர்களைப் தேடிச் செல்வார்கள். சமூக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். இந்த தொடர்புகளால் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
8. ஒரே இடத்தில் மணிக்கணக்காக உட்கார்ந்திருப விட இவர்கள் அதிக நேரம் நிற்பார்கள். சமயலறையில் சென்று மேடையை ஒழுங்குபடுத்துவார்கள். ஒரு இடத்தில் மணிக்கணக்காக உட்கார்ந்து டிவி பார்ப்பதை விட இவர்கள் இங்கு அங்கும் அலைந்து கொண்டு பார்ப்பார்கள். நீங்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் உங்கள் உடம்பு அதற்குப் பழக்கப்பட்டு விடும். உங்கள் நடை பாவனை பாதிக்கப்படும். எப்போதும் நகர்ந்து கொண்டே கைகால்களை நீட்டி பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். இப்படி இருப்பதுதான் ஆரோக்கியமானதாகும்.
8. தங்கள் உடல் சமச்சீராக இருப்பதில் இவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். யோகா போன்ற ஆரோக்கியமான பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். இது மனது, உடல் இரண்டையும் நல்ல நிலையில் வைக்கிறது.
9. இவர்கள் சூரிய வெளிச்சத்தின் அருமையை உணர்ந்தவர்கள். காஃபியை எடுத்துக் கொண்டு வீட்டின் வெளியே சூரிய வெளிச்சம் இருக்கும் பக்கத்தில் சென்று அருந்துவார்கள். காலை சூரிய வெளிச்சத்தில் தோட்ட வேலையில் ஈடுபடுவார்கள். இது இவர்களுக்கு சர்காடியன் ரிதத்தை ஒழுங்குபடுத்தும். இது ஒரு இயற்கை மருந்தாகும்.
10. இவர்கள் தங்கள் உடல் சொல்வதைக் கேட்பார்கள். இவர்கள் சோர்வு மற்றும் உடல் ஓய்ச்சல் இரண்டிற்கும் நல்ல வித்தியாசத்தை அறிந்திருப்பார்கள். பசி மற்றும் போரடித்தல் இரண்டின் வித்தியாசத்தை அறிந்திருப்பார்கள். ஓய்வு எடுக்க வேண்டிய நேரத்தில் ஓய்வு எடுப்பார்கள். பசி நேரத்தில் உண்பார்கள். இதுவே இவர்களை ஆரோக்கியமாக வைக்கிறது.
மேற்கூறிய பத்து வழக்கங்கள் உள்ள வயதானவர்களுக்கு என்றுமே இளமைதான்.