உங்களுக்கு பல விஷயங்களில் ஆர்வம் உள்ளதா.. உங்களுக்கான சூப்பர் கேரியர் சீக்ரெட் இதோ!

பல துறைகளில் அதீத ஆர்வம் கொண்டவர்கள் தங்களது திறமைகளை எப்படி வெற்றிகரமான கேரியராக மாற்றுவது என்பதற்கான உளவியல் மற்றும் ஸ்மார்ட்டான வழிகாட்டுதல்.
Multipotentialite career
Multipotentialite career
Updated on

Career advice multiple interests: பலருக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரே ஒரு லட்சியம் மட்டுமே இருக்கும். ஆனால், உங்களைப் போன்ற சிலருக்கு ஏகப்பட்ட விஷயங்களில் ஆர்வம் இருக்கலாம். புகைப்படம் எடுப்பது, கோடிங் செய்வது, பயணம் செய்வது, புத்தகம் எழுதுவது எனப் பல துறைகளில் நாட்டம் இருக்கும். 

இப்படிப்பட்டவர்களை சமூகம் பெரும்பாலும் குழப்பவாதிகள் அல்லது எதிலும் நிலைத்து நிற்காதவர்கள் என்று தவறாக முத்திரை குத்திவிடும். ஆனால், உண்மையில் நீங்கள் ஒரு தனித்துவமான திறமையாளர். இப்படிப் பல ஆசைகள் கொண்டவர்கள் தங்களது கேரியரை எப்படி வெற்றிகரமாக அமைத்துக்கொள்வது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Multipotentialite என்னும் பலம்!

ஒரே ஒரு வேலையை மட்டும் வாழ்நாள் முழுவதும் செய்வது அனைவருக்கும் எப்போதுமே செட்டாகாது. பல வித்தியாசமான துறைகளில் ஆர்வம் இருப்பவர்களை உளவியலாளர்கள் மல்டிபொட்டன்ஷியலைட் (Multipotentialite) என்று அழைக்கிறார்கள். பிரபல பேச்சாளர் மற்றும் எழுத்தாளரான எமிலி வாப்னிக் (Emilie Wapnick) இது ஒரு மிகப்பெரிய பலம் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். 

பல வித்தியாசமான விஷயங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றை ஒன்றிணைத்துப் புதிய ஐடியாக்களை உருவாக்குவதில் இவர்கள் மிகப்பெரிய கில்லாடிகளாக இருப்பார்கள். எனவே, உங்களிடம் உள்ள இந்தத் தன்மையை நினைத்து நீங்கள் முதலில் பெருமைப்பட வேண்டும்.

 குடை வேலை!

உங்களுக்கான முதல் சிறப்பான உத்தி அம்ப்ரெல்லா கேரியர் (Umbrella Career) எனப்படும் குடை போன்ற ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பதாகும். இது பல திறமைகளை உள்ளடக்கிய ஒரு பரந்த துறையாகும். உதாரணமாக, நீங்கள் ஒரு திரைப்பட இயக்குநர் அல்லது டிஜிட்டல் மார்க்கெட்டர் ஆக மாறலாம். 

ஒரு திரைப்பட இயக்குநருக்கு இசை, எழுத்து, கேமரா, நிர்வாகம், எடிட்டிங் எனப் பல விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். உங்களின் பல திறமைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர இது ஒரு சூப்பரான வழியாகும்.

இதையும் படியுங்கள்:
ஏஐ-யிடம் வேலையை இழக்காமல் தப்பிக்க சாணக்கியர் கூறும் 6 சீக்ரெட் டிப்ஸ் இதோ!
Multipotentialite career

ஸ்லாஷ் கேரியர் முறை!

அடுத்தது ஸ்லாஷ் கேரியர் (Slash Career) எனப்படும் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் முறை. இன்று பல இளைஞர்கள் இந்த சுதந்திரமான முறையைத்தான் அதிகம் பின்பற்றுகிறார்கள். அதாவது, வாரத்தில் மூன்று நாட்கள் ஐடி கம்பெனியில் வேலை செய்வது, மற்ற நாட்களில் யூடியூப் வீடியோக்கள் உருவாக்குவது அல்லது போட்டோகிராபி செய்வது எனப் பல வேலைகளைப் பிரித்துச் செய்வார்கள். இதன் மூலம் உங்களின் அனைத்து ஆசைகளுக்கும் தீனி போட முடியும், அதே சமயம் வருமானமும் பல வழிகளில் பாதுகாப்பாக வந்து சேரும்.

ஐன்ஸ்டீன் அணுகுமுறை!

ஐன்ஸ்டீன் அணுகுமுறை (Einstein Approach) என்பது உங்களை ஆச்சரியப்படுத்தும் மற்றொரு அருமையான உத்தி. மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு காப்புரிமை அலுவலகத்தில் நிலையான வேலையைச் செய்துகொண்டே தனது அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதேபோல, உங்கள் வாழ்க்கையை வசதியாக நடத்த ஒரு நிலையான முழுநேர வேலையைத் நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 

இதையும் படியுங்கள்:
இவ்வளவு வெப்பத்திலும்கூட எப்படி இந்தத் தாவரங்கள் செழித்து வளர்கின்றன?
Multipotentialite career

அந்த வேலை உங்களுக்குப் போதுமான நேரத்தையும் சக்தியையும் மீட்டுக் கொடுப்பதாக இருக்க வேண்டும். அந்தப் பாதுகாப்பான சூழலில் உங்களின் மற்ற பல கலை சார்ந்த ஆசைகளை நீங்கள் எவ்வித நிதி நெருக்கடியும் இல்லாமல் மிகச் சுதந்திரமாகச் செயல்பட்டு ரசிக்கலாம்.

உங்களுக்குப் பல விஷயங்களில் அதீத ஆர்வம் இருப்பது ஒருபோதும் குறையாகாது. அந்த ஆர்வங்களை எப்படி ஒன்றிணைத்து லாபகரமாக மாற்றுவது என்பதில் தான் உங்களின் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது. இனிமேல் உங்களை நீங்களே குழப்பவாதி என்று நினைப்பதைத் தவிர்த்துவிட்டு, உங்களின் பல திறமைகளை வைத்து ஒரு புதிய பாதையை உருவாக்குங்கள். 

உலகம் இப்போது பல திறமைகளை உள்ளடக்கிய மல்டி-டாஸ்கிங் ஆல்ரவுண்டர்களைத்தான் அதிகம் தேடிக்கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com