உங்கள் வாழ்க்கையை மாற்றும் 10 மந்திரங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதுதான்!

Motivational articles
The secret of winners
Published on

வாழ்வில் முன்னேற விரும்பும் நபர்கள் சாதாரண மக்களிடமிருந்து வேறுபட்டு வித்தியாசமாக சிந்திக்கவும் செயல்படவும் விரும்புவார்கள். இந்தப் பதிவில் சொல்லப்பட்டுள்ள 10 பழக்க வழக்கங்களை தினமும் பின்பற்றினால் வெகு வேகமாக ஒருவர் முன்னேறலாம்.

1. காலையில் சீக்கிரமாக எழுதல்:

அதிகாலையில் எழுந்திருப்பது வெற்றிக்கு அடித்தளமாக அமையும் ஒரு அருமையான பழக்கமாகும். தனிப்பட்ட இலக்குகளில் கவனம் செலுத்த, அந்த நாளின் பணிகளைத் தொடங்க அமைதியான ஒரு சூழலை அதிகாலை உருவாக்குகிறது. மன அழுத்தத்தைக் குறைத்து அமைதியாக சிந்திக்க உதவுகிறது.

2. திட்டமிடுதல்:

அன்று என்னென்ன வேலைகள் செய்யவேண்டும் என்பதை ஒரு டைரி அல்லது நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொள்ள வேண்டும். இந்த திட்டமிடல் நேரத்தை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. முக்கியமான பணிகளை முதலில் செய்வதை உறுதிசெய்கிறது.

3. தியானம்:

சில நிமிடங்கள் தியானம் செய்வது மனத்தெளிவைத் தருகிறது. உணர்ச்சி ஒழுங்கு முறையை கூர்மைப் படுத்துகிறது. மன அழுத்தத்தைத் குறைத்து கவன மேம்பாட்டை அதிகரிக்கிறது. சிறந்த முடிவுகள் எடுப்பதற்கு உதவுகிறது. இவை அனைத்தும் முன்னேற விரும்பும் ஒரு மனிதருக்கு மிக முக்கியமான திறன்களாகும்.

4. உடற்பயிற்சி:

மன அமைதிக்கு தியானம் எவ்வளவு முக்கியமோ உடலுக்கு ஆற்றலைத் தருவதற்கு உடற்பயிற்சி மிக முக்கியம். சோர்வைக் குறைத்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. நீண்ட காலத்திற்கு உடல் செயல் திறனை தக்க வைக்க உடற்பயிற்சி அவசியமாகிறது.

5. புத்தகம் வாசித்தல்:

புத்தகம் வாசிக்கும் பழக்கம் புதிய அறிவுக் கண்ணோட்டங்கள் மற்றும் யுக்திகளுக்கு வித்திடுகிறது தொடர்ச்சியான கற்றல் மற்றும் அறிவு சார்ந்த ஆர்வத்தை வளர்க்கிறது.

6. புதிய யோசனைகளைக் கேட்பது:

கற்றறிந்தவர்கள் மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்குபவர்களிடம் யோசனை கேட்பது ஒருவரது தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் அவரை திறந்த மனதுடனும் தகவமைப்புத் திறனுடனும் வைத்திருக்கிறது. மேலும் ஒருவர் தன்னை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க உதவுகிறது. புதுமையான தீர்வுகளை கருத்தில் கொள்ள உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்கும் இந்த ஒரு விஷயம்! உடனே இதை நிறுத்துங்கள்!
Motivational articles

7. சிக்கனமான வாழ்க்கை:

சிக்கனமான வாழ்க்கை என்பது செலவினங்களை கவனத்தில் கொண்டு தேவையானதற்கு மட்டும் செலவழிப்பதைக் குறிக்கிறது. பணத்தை சேமிப்பது வலுவான நிதி அடித்தளத்தை உருவாக்குகிறது. இதனால் மன அழுத்தம் இல்லாமல் நான் எடுத்துக்கொண்ட இலக்கை விரைவில் முடிக்கவும் புதிய முயற்சிகளில் முதலீடு செய்யும் சுதந்திரத்தையும் வழங்குகிறது

8. சேமிப்பு:

வருமானத்தின் முதல் செலவாக சேமிப்பு இருக்க வேண்டும். நன்றாக சேமிக்கும் பழக்கம் இருக்கும் மனிதர்களுக்கு பணப்பிரச்சனைகள் இருக்காது. எந்தவிதமான கவலையும் இல்லாமல் அவர்கள் தனது இலக்கை நோக்கி பயணம் செய்ய ஏதுவாக இருக்கும்.

9. இலக்குகளை திட்டமிடுதல்:

தெளிவான இலக்குகளை நிர்ணயிப்பது ஒருவரது நோக்கத்தை மேம்படுத்துகிறது. குறுகிய கால இலக்குகளைத் தேர்வு செய்வது பெரிய குறிக்கோள்களை நிர்வகிக்கக் கூடிய ஆற்றலையும், வலிமையையும் தருகின்றன. இவை நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்த உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
பேராசைக்கும் - ஆசைக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
Motivational articles

10. எதிர்மறை நபர்களிடமிருந்து விலகி இருத்தல்:

நாம் பழகும் நபர்கள் நமது மனநிலையிலும் ஆற்றலிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். எதிர்மறையான நபர்கள் ஒருவரின் உந்துதலைக் குறைத்து சுய சந்தேகத்தை ஏற்படுத்துவார்கள். எனவே நேர்மறையான லட்சியவாதிகளுடன் பழகுவதன் மூலம் ஒருவர் தன்னை நன்றாக வளர்த்துக்கொள்ள முடியும். பின்னடைவுகளை எதிர்கொள்வதற்கும் நேர்மறையான கண்ணோட்டத்தை பேணுவதற்கும் இது உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com