லைஃப்ல நீங்க ஜெயிச்சிட்டு இருக்கீங்கனு காட்டுற 10 சீக்ரெட் அறிகுறிகள்.. உடனே செக் பண்ணுங்க!

life-motivation
life-motivation
Published on

நம்மில் பலருக்கும் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் ஒரே இடத்தில் முடங்கி நிற்பது போன்ற ஒரு ஃபீலிங் அடிக்கடி வரும். சோஷியல் மீடியாவில் மற்றவர்களைப் பார்த்து நாம் இன்னும் எதையும் சாதிக்கவில்லை என ரொம்பவே கவலைப்படுவோம். ஆனால் நிஜத்தில் நாம் நேற்றைய நம்மை விட இன்று ரொம்பவே சிறப்பாக மாறிக்கொண்டு இருப்போம். அந்த மாற்றங்கள் நமக்கு உடனே பெரிதாகத் தெரியாது. 

நீங்கள் வாழ்க்கையில் நிஜமாகவே முன்னேறிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் 10 சூப்பரான அறிகுறிகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

முன்னேற்றத்தை குறிக்கும் 10 அறிகுறிகள்!

  1. யாராவது உங்களை கோபப்படுத்த நினைத்தாலும், தேவையில்லாத விவாதங்களை தவிர்த்துவிட்டு உங்களின் மன அமைதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கி இருப்பீர்கள்.

  2. அடுத்தவர்கள் தப்பாக நினைத்துக்கொள்வார்களோ என பயந்து கட்டாயத்திற்காக எதற்கும் தலையாட்டாமல், குற்ற உணர்ச்சி இல்லாமல் மிக தைரியமாக 'நோ' சொல்லப் பழகி இருப்பீர்கள்.

  3. பல லட்சங்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற பெரிய இலக்குகள் இருந்தாலும், அன்றாடம் நடக்கும் சின்ன சின்ன நல்ல விஷயங்களையும் முழுமையாக ரசிக்கத் தொடங்கி இருப்பீர்கள்.

  4. நண்பர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, உங்களின் வளர்ச்சிக்கு உதவும் உண்மையான அன்பான நாலு பேர் மட்டும் உங்களைச் சுற்றி இருப்பார்கள்.

  5. அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள், அவர்கள் என்ன சொல்வார்கள் என்ற கவலை இப்போது உங்களுக்கு துளி கூட இருக்காது.

  6. உங்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலத்தின் மீது முன்பை விட இப்போது அதிக அக்கறை காட்டத் தொடங்கி இருப்பீர்கள்.

  7. முன்பு போல் தோல்விகளைப் பார்த்து துவண்டு போகாமல், அதில் உள்ள பாடங்களை மட்டும் எடுத்துக்கொண்டு தைரியமாக முன்னேறுவீர்கள்.

  8. நடந்து முடிந்த கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்தாமல், நிகழ்காலத்தில் வாழப் பழகி இருப்பீர்கள்.

  9. மற்றவர்களின் வெற்றியைக் கண்டு துளி கூட பொறாமைப்படாமல், அவர்களை மனதாரப் பாராட்டத் தொடங்கி இருப்பீர்கள்.

  10. எப்போதும் யாராவது கூடவே இருக்க வேண்டும் என நினைக்காமல், உங்களின் தனிமையான நேரத்தை ரொம்பவே சந்தோஷமாக ரசிப்பீர்கள்.

இதையும் படியுங்கள்:
சொல்லும் சொல்லில் இவ்வளவு லாபமா? உங்கள் பேச்சை மாற்றினால் வாழ்க்கை மாறும்!
life-motivation

வாழ்க்கையில் வெற்றி பெறுவது, வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை வைத்து மட்டும் தீர்மானிக்கப்படுவது கிடையாது. உங்களின் மனநிலை எவ்வளவு அமைதியாகவும் பாசிட்டிவாகவும் மாறியிருக்கிறது என்பதே உண்மையான வளர்ச்சி. மேலே சொன்ன பத்து விஷயங்களில் பெரும்பாலான அறிகுறிகள் உங்களிடம் இருந்தாலும் நீங்கள் மிகச் சரியான பாதையில் தான் போய்க்கொண்டு இருக்கிறீர்கள் என்று ரொம்பவே கெத்தாக காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.

இனிமேல் அடுத்தவர்களோடு உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்திவிட்டு உங்களின் இந்த அமைதியான பயணத்தை ரொம்பவே சந்தோஷமாகத் தொடருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com