ஏன்? எதற்கு? எதனால்? – சாக்ரடீஸ் கேட்ட இந்த 3 கேள்விகள் உங்கள் வாழ்க்கையையே மாற்றப்போகுது!

சாக்ரடீஸின் ஆழமான கேள்விகள், மூடநம்பிக்கைகளை சிதைத்து, சிந்தனையைத் தூண்டும் 15 வாழ்க்கைத் தத்துவங்கள்
Socrates quotes in Tamil
Socrates quotes in TamilAI Image
Updated on

மேற்கத்திய தத்துவத்தின் தந்தை என அறியப்படும் ஒரு கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் ஆவார். இவர் அறிவியல் துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக புகழ்பெற்றார். தனது தத்துவங்களால் மக்களின் மூட நம்பிக்கைகளை வேருடன் அகற்ற முயன்றார். இவர் தனது கேள்விகளால் அனைவரையும் சிந்திக்க வைத்தார்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள், இளைஞர்கள் இவரின் தத்துவங்களையும் படித்து சிறந்த சிந்தனையாளர்களாக மாறியுள்ளார்கள். அவ்வாறு அவரின் சீடர்களில் ஒருவர் தான் உலக புகழ் பெற்ற தத்துவ ஞானி பிளேட்டோ!

  • வீழ்வது தோல்வி அல்ல, வீழ்ந்த இடத்திலேயே நீங்கள் கிடக்கும்போது தான் தோல்வி வரும்!

  • தன்னிடம் இருப்பதில் திருப்தி அடையாதவன் அவன் வைத்திருக்க விரும்புவதிலும் திருப்தி அடைய மாட்டான்!

  • அமைதி என்பது ஒரு ஆழமான மெல்லிசை. எல்லாச் சத்தங்களையும் தாண்டி அதை கேட்கக் கூடியவர்களுக்கு அது உதவும்!

  • உங்களுக்கு காற்று தேவைப்படும் அளவுக்கு, வெற்றி தேவைப்படும் போது நீங்கள் அதை அடைவீர்கள் வெற்றிக்கு வேறு எந்த ரகசியமும் இல்லை!

  • நான் ஒரு முட்டாள். ஆனால் நான் ஒரு முட்டாள் என்று எனக்குத் தெரியும். மேலும் அது என்னை உங்களை விட புத்திசாலி ஆக்குகிறது!

  • திடீரென்று மாறும் ஒருவருக்காக கவலைப்படாதீர்கள். அவர் தனது நடிப்பை கைவிட்டு தன் உண்மையான சுயத்திற்கு திரும்பி இருக்கலாம்!

  • ஒரு நல்ல மற்றும் உண்மையுள்ள நண்பரை விட மதிப்புமிக்க சொத்து எதுவும் இல்லை!

  • வாழ்க்கையில் உண்மையான ஆபத்து மரணம் அல்ல, ஒரு தீய வாழ்க்கையை வாழ்வேதே!

  • ஒரு கோடு வளைந்து இருப்பதை அதன் அருகில் நேரான ஒரு கோடு இடப்படும் வரையில் நீங்கள் ஒருபோதும் இதை அறிய மாட்டீர்கள்!

  • உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும் உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும்!

  • மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வமாகும். ஆடம்பரம் என்பது நாமே தேடிக் கொள்ளும் வறுமையாகும்!

  • எதையும் உன் சொந்த அறிவு கொண்டு சிந்தி. எதையும் அப்படியே நம்பி விடாதே, ஏன்? எதற்கு? எதனால்? என்று கேள்விகளைக் கேள்!

  • காலம் நீ பயந்தாலும் ஓடும் பணிந்தாலும் ஓடும். துணிந்தால் மட்டுமே உன் பின்னால் ஓடிவரும்!

  • உங்கள் பேச்சை கொண்டுதான் அன்பு மதிக்கப்படும். உங்கள் அன்பை போல தான் நடத்தை இருக்கும். உங்கள் நடத்தை போல தான் வாழ்க்கை இருக்கும்!

இதையும் படியுங்கள்:
உங்கள் தாயை இன்னும் நேசிக்க வைக்கும் 12 அற்புத வரிகள்!
Socrates quotes in Tamil
logo
Kalki Online
kalkionline.com