ஒரு பையனை ஆணாக மாற்றும் 4 விஷயங்கள்!

Man and Boy
Man and Boy
Published on

ஒரு பையன் ஆணாக மாறுவது என்பது உடல் ரீதியான வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியின் கலவையாகும். இதில் உடல் மாற்றங்கள், பொறுப்புணர்வு, சமூக ஈடுபாடு போன்றவை அடங்கும். உடல் ரீதியான முதிர்ச்சி என்பது பருவமடைதல். இது ஒரு பையனின் உடலில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களாகும். குரலில் மாற்றம் ஏற்படுவது, உடலில் முடி வளர்ச்சி மற்றும் மற்ற வளர்ச்சி மாற்றங்கள் அடைவதை குறிக்கும்.

மனரீதியான வளர்ச்சி என்பது ஒரு தனிநபரை பொறுப்பான, தன்னம்பிக்கையான மற்றும் முதிர்ச்சி அடைந்த நபராக செயல்பட தொடங்குவதை குறிக்கும். இதில் கடமைகளை நிறைவேற்றுவது, மற்றவர்களுக்கு உதவுவது, தனது வாழ்க்கையை தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வாழ்வது போன்றவை அவனது மனரீதியான முதிர்ச்சியின் அடையாளங்களாகும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது, குறிப்பாக தன்னுடைய குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்கள் மீது அக்கறை காட்டுவது.

வாழ்க்கையில் ஒவ்வொரு ஆணுக்கும் அத்தியாவசியமான சில திறன்கள் அவசியம். ஒரு தனிநபரை பொறுப்புடனும், தன்னம்பிக்கையுடனும், வெற்றிகரமான வாழ்க்கை வாழவும் சில நடைமுறை திறன்கள் தேவை.

1) சுய கட்டுப்பாடு, சுய வளர்ச்சி மற்றும் மேம்பாடு (Self Control, Self Growth and Sevelopment):

உணர்ச்சிகளையும், செயல்களையும் கட்டுப்படுத்தி இலக்குகளை அடைவதற்கும், சோம்பேறித்தனத்தை வெல்வதற்கும் சுய கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம். மன ஆற்றலை அதிகரிக்கவும், கற்றலை மேம்படுத்தவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் பொறுப்பான மனிதராக செயல்படவும், வாழ்வில் எந்த பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை எதிர்நோக்கவும் மனதளவில் திடமாக இருக்க வேண்டியது அவசியம்.

2) விமர்சன சிந்தனை மற்றும் உணர்ச்சி நுண்ணறிவு (Critical Thinking and Emotional Intelligence):

சூழ்நிலைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயலாற்றும் திறனும், பிரச்சனைகளை எதிர்க்கொள்ளும் பொழுது சிறந்த முடிவுகளை எடுக்கும் திறனும் அவசியம். தன்னுடைய மற்றும் பிறருடைய உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அவற்றை சரியாக நிர்வகிக்கும் திறன் வெற்றிகரமான உறவுகளை உருவாக்குவதற்கு மிகவும் தேவையானது.

இதையும் படியுங்கள்:
ரிஸ்க் எடுக்க பயமா இருக்கா? இந்த 5 விஷயத்தை செஞ்சு பாருங்க... உங்க வாழ்க்கை ராக்கெட் மாதிரி மேல போகும்!
Man and Boy

3) மன உறுதி மற்றும் மனத்திறன்களை அதிகரித்தல் (Developing Mental Toughness and Increasing Brain Power):

மனதின் வலிமையைக் கட்டி எழுப்புவதன் மூலம் கோபத்தைத் தவிர்த்து, மன அமைதியையும் ஆற்றலையும் வளர்க்க முடியும். மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி வெற்றிகரமாக செயல்படும் திறனை வளர்த்துக் கொள்வதும் அவசியம். எந்த பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர்கொள்ளும் பொழுது மன உறுதியுடன் (Mentally Strong) இருக்கப் பழக வேண்டும். உடல் பலத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு மன பலத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வெற்றிப் பயணத்தில் எதிர்ப்புகளைச் சமாளிப்பது எப்படி?
Man and Boy

4) தகவல் தொடர்பு மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்கள் (Communication and Problem Solving):

மற்றவர்களுடன் திறம்பட தொடர்பு கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் திறன்களை வளர்த்துக் கொள்வதும், வாழ்வில் ஏற்படும் சவால்களுக்கு தீர்வுகளைக் கண்டறியும் திறன்களை வளர்த்துக் கொள்வதும் முக்கியம். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொள்வதும், கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றுவதும் அவசியம். முக்கியமாக நேர மேலாண்மை எனப்படும் நேரத்தை திறம்பட நிர்வகிக்கும் திறனும், நிதி மேலாண்மை எனப்படும் நிதி நிலையை நிர்வகிக்கவும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இந்தத் திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் வாழ்வில் நம்மை பிறர் மதிக்கும்படி ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com