
நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நம் மனம்தான் காரணம். அதை எப்படி பக்குவமாக வைத்திருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.
ஒப்பீடு அவசியமற்றது:
எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி நான்தான் எங்கள் குடும்பத்திலேயே முதன் முதலாக கான்வென்டில் படித்தேன். நன்றாக செல்லமாக வளர்ந்தேன். நல்ல குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டேன். என்றாலும் நான் எதையும் சாதிக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொள்ளுவார்.
மற்ற பெண்மணிகளை கூறி அவள் மிகவும் சாதாரணமாகத்தான் வளர்ந்தார். மேன்மையான குடும்ப வாழ்க்கை கிடைத்தது. இதனால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு திறமையை வெளிக்காட்டுகிறாள் அவளுடன் என்னை ஒப்பிடும்போது எனக்கு மிகவும் தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது என்று கூறுவார். இதுபோன்ற ஒப்பீடுகளை நிறுத்திவிட்டால் நம் மனதில் மகிழ்ச்சி தங்கும்.
பயிற்சிகள்:
அமைதியின்மை மற்றும் பதட்டமாக இருப்பதாக உணர்ந்தால் ஆழமாக சுவாசிக்கவும். ஆழ்ந்த மூச்சு பயிற்சி மனதை அமைதி படுத்த உதவும். சுவாச பயிற்சிகள் மன அழுத்தத்தை குறைக்க உதவும். இதனால் மனதில் ஒருவித அமைதி நிலவும். அதேபோல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது பதற்ற உணர்வு, மனச்சோர்வை குறைக்கும். சுயமரியாதை உணர்வை பேணவும், மகிழ்ச்சியை அதிகரிக்கவும் வழிவகை செய்யும்.
தூக்கம்:
தூக்கம் தடைபட்டால் ஒட்டுமொத்த செயல்பாடும் பாதிப்படையும். மன அழுத்தம், மனச்சோர்வு வரும். அது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தொலைத்துவிடும். ஆதலால் தூக்கமமின்மை பிரச்னையை அலட்சியமாக எதிர்கொள்ளாமல் ஆழ்ந்த தூக்கத்திற்கான வழிமுறைகளை கண்டறிந்து நன்றாக தூங்கும் முயற்சி எடுத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும்.
புன்னகை:
எந்த சூழ்நிலையிலும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை புன்னகை பூத்த முகத்துடன் வரவேற்பதில் ஆர்வம் காட்டவேண்டும். இதனாலேயே பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். இக்கட்டான ஒரு சூழ்நிலையில் நாம் புன்னகை பூக்க முடியாமல் தவித்தால் கூட அதை உணர்ந்திருக்கும் நம் உறவுகள் ஏதோ அந்த பெண்ணிற்கு மிகவும் தவிர்க்க முடியாத சூழ்நிலை.
அதனால்தான் சிரிக்கவில்லை என்பதை இயல்பாக எடுத்துக்கொள்வார்கள். ஆதலால் புன்னகையுடன் எப்பொழுதும் இருப்பது நல்லது. புன்னகைக்கு மகிழ்ச்சியை தக்க வைக்கும் சக்தி உண்டு, மனமும் நிம்மதி பெறும்.