Motivation article
Motivation articleImage credit - pixabay

மன அழுத்தம் போக்கும் சிம்பிளான 5 ஐடியாக்கள்!

Published on

ன அழுத்தம் என்பது நமக்கு பொதுவாக எல்லோருக்குமே ஏதாவது ஒரு வகையில் வந்து கொண்டுதான் இருக்கிறது வீடு அலுவலகம் நண்பர்கள் வட்டாரம் என ஏதாவது ஒரு இடத்தில் மன அழுத்தம் நமக்கு ஏற்படுகிறது. மன அழுத்தத்தால் நமக்கு ஒரு நன்மையும் கிடையாது தவிர தீமையே நிறைய. 

சரி மன அழுத்தத்தை எப்படித்தான் போக்குவது மனசை எப்படித்தான் ரிலாக்ஸ் செய்வது என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கலாம் ரொம்ப சிம்பிளா இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள 5 ஐடியாக்களை பின்பற்றுங்கள் போதும்.

1. மனம்விட்டுப் பேசுங்கள்

மனம் விட்டுப் பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த அனைத்தையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

 2. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

3. தெளிவாகச் செய்யுங்கள்

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் செய்த வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

4. விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

இதையும் படியுங்கள்:
மனதை ஒருமுகப்படுத்துவதன் அவசியம்!
Motivation article

5. மற்றவர்களையும் கவனியுங்கள்

உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும்!"

logo
Kalki Online
kalkionline.com