ஜப்பானியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 6 நல்ல பழக்கங்கள்!

Japanese
Japanese
Published on

ஜப்பான்ன்னா நமக்கு டக்குன்னு ஞாபகம் வர்றது அவங்களோட டெக்னாலஜியும், அவங்க கடைபிடிக்கிற ஒழுங்கும்தான். ஆனா அவங்ககிட்ட நம்ம கத்துக்க நிறைய நல்ல விஷயங்கள் இருக்குங்க. நம்மளோட தனிப்பட்ட வளர்ச்சிக்கு அவங்க கடைபிடிக்கிற சில சூப்பர் பழக்கங்களை நாமளும் ஃபாலோ பண்ணா வாழ்க்கையில முன்னேற்றம் காணலாம். வாங்க அப்படிப்பட்ட 7 பழக்கங்களைப் பத்தி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. "இக்கிகை" (Ikigai): இது என்னன்னா, நம்ம வாழ்க்கையோட அர்த்தம் என்ன, நம்ம எதுக்காக இந்த உலகத்துல இருக்கோம்னு கண்டுபிடிக்கிறதுதான். ஒவ்வொருத்தருக்கும் அவங்களுக்கான ஒரு பேஷன் இருக்கும். அதை கண்டுபிடிச்சு அதுல முழுசா ஈடுபடும்போது நம்ம வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும். 

2. "ஷோகுனின்" (Shokunin): இது என்னன்னா, நாம எந்த வேலை செஞ்சாலும் அதுல முழு கவனத்தையும், திறமையையும் காட்டுறது. சின்ன வேலையா இருந்தாலும் சரி, பெரிய வேலையா இருந்தாலும் சரி, அதை ரொம்ப அர்ப்பணிப்போட செய்யணும்னு அவங்க நம்புறாங்க. இந்த பழக்கம் நம்மளோட வேலையில ஒரு பெர்ஃபெக்ஷனைக் கொண்டு வரும்.

3. "கைஸன்" (Kaizen): இது ரொம்ப சிம்பிள்ங்க. ஒவ்வொரு நாளும் நாம கொஞ்சம் கொஞ்சமா நம்மள மேம்படுத்திக்கிட்டே இருக்கணும். நேத்து இருந்ததை விட இன்னைக்கு நாம ஒரு சின்ன விஷயத்தையாவது புதுசா கத்துக்கணும் இல்லன்னா நம்மளோட திறமையை வளர்த்துக்கணும். இந்த பழக்கம் நம்மள எப்பவும் முன்னேற்றப் பாதையில வச்சுக்கும்.

4. "மைண்ட்ஃபுல்னஸ்" (Mindfulness): அதாவது இந்த நிமிஷத்துல என்ன நடக்குதோ அதுல முழு கவனத்தோட இருக்கிறது. நாம சாப்பிடும்போது சாப்பாட்டுல மட்டும் கவனம் செலுத்துறது, பேசும்போது பேசுறவங்க சொல்றதை மட்டும் கவனிக்கிறதுன்னு சின்ன சின்ன விஷயங்கள்ல கூட இந்த பழக்கத்தை கொண்டு வரலாம். இது நம்ம மனசை அமைதியா வச்சுக்க உதவும்.

5. ஜப்பான்காரங்க இயற்கையை ரொம்ப மதிப்பாங்க. அவங்க எப்பவும் இயற்கையோட ஒன்றி இருக்க முயற்சி பண்ணுவாங்க. சின்னதா ஒரு செடி வளர்க்குறதுல இருந்து, பூங்காவுக்கு போறது வரைக்கும் இயற்கையோட தொடர்பில இருக்கிறது மனசுக்கு ரொம்ப நல்லது. 

இதையும் படியுங்கள்:
தர்பூசணி சாப்பிட ரொம்ப பிடிக்குமா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
Japanese

6. அவங்களோட சாப்பாட்டு முறை ரொம்ப ஆரோக்கியமானது. அவங்க அதிகமா காய்கறிகள், மீன், அரிசி இதுங்களதான் சாப்பிடுவாங்க. அதுவும் சின்ன சின்ன அளவுகள்ள சாப்பிடுவாங்க. நிறைய சாப்பிடாம, அளவா சாப்பிடுறது நம்மளோட உடல் ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது. 

இந்த 6 நல்ல பழக்கங்களையும் நாம ஜப்பான்காரங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டா நம்ம வாழ்க்கையில நிறைய நல்ல மாற்றங்களைக் கொண்டு வரலாம். நம்மளோட தனிப்பட்ட வளர்ச்சியும் ரொம்ப நல்லா இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மூன்று வேளையுமா அரிசி உணவு? உஷார்...
Japanese

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com