
ஒவ்வொருத்தருக்கும் வாழக்கையில் பலவிதமான பிரச்னைகள் இருக்கின்றன. நாம் எல்லோரும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வாழ்க்கையை கழிக்கின்றோம். பல தரப்பட்ட, வெவ்வேறு சிந்தனைகள் கொண்ட மனிதர்களை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. அப்படி இருக்கும் தருணத்தில் நாம் நம் சுயமதிப்பை பற்றி எப்போதும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
வீடாக இருந்தாலும் சரி, ஆபீஸாக இருந்தாலும் சரி, பொது இடமாக இருந்தாலும் சரி, நம்மை நாமே மேம்படுத்தி சுயமதிப்பை நிலை நாட்ட வேண்டும். நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளாவிட்டால் அடுத்தவர்களிடமிருந்து நமக்கு எப்படி மதிப்பு கிடைக்கும். நம் சுயமதிப்பை மேம்படுத்த உதவும் அதற்கான 6 முக்கியமான குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
குறைகளை கண்டு பயப்படாதீர்கள்:
உங்களிடம் குறை எதாவது இருந்தால் எதை எண்ணி தனக்குதானே மட்டமாக நினைக்காதீர்கள். அதை பெரிதாகவும் நினைக்காதீர்கள். குறைகள் இல்லாத மனிதர்களே இல்லே. நான் waste, தண்டம், எனக்கு ஒன்றும் தெரியாது என்றெல்லாம் புலம்புவதை நிறுத்துங்கள். என்னிடம் குறை இருக்கிறது என்று நீங்கள் நினைக்க நினைக்க உங்களுக்கே உங்களுடைய மதிப்பு குறைந்து விடும். உங்களிடம் இருக்கும் குறைகளை ஆராய்ந்து அதை சரி செய்ய என்ன வழியோ அதை கண்டுபிடியுங்கள்.
Comfort zone -ல்இருந்து வெளியே வரவும்:
நீங்கள் எப்போதும் உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட comfort zone-லேயே இருக்க முயற்சி செய்யாதீர்கள். Comfort zoneல் இருக்கும்போது புதிய சிந்தனையோ அல்லது புதிய முயற்சியை செய்யும் எண்ணமோ வராது. அதைவிட்டு வெளியே வந்தால்தான் புது புது சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய சவால்களை ஏற்று வெற்றி கொள்ளும்போது உங்களின் சுயமதிப்பு அதிகமாகும்.
பாராட்டுகளை ஏற்றுக்கொள்ள தயங்காதீர்கள்:
உங்களுக்கு பாராட்டு கிடைத்தால் அதை கம்பீரத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் தயங்கி தயங்கி குழப்பமான நிலையோடு அதை ஏற்றுக்கொண்டால் உங்களுக்கே உங்களின் மீது மதிப்பில்லை மற்றும் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். இதனால் அடுத்தவர்களுக்கும் உங்கள் மதிப்பின் மீது சந்தேகமும் கீழ்நோக்கமும் வரும்.
எதிர்மறை எண்ணங்களை அகற்றவும்:
நம் வாழ்வில் நம்முடைய எல்லா முன்னேற்றத்திற்கும் இந்த எதிர்மறை எண்ணங்கள்தான் மிக முக்கியமான எதிரி. ஆகவே எதிர்மறை எண்ணத்தை மனதிலிருந்து நீக்க முயற்சிக்கவும். மனதை அமைதிபடுத்த புது புது நுட்பங்களை கையாளவும். புதிய புதிய முயற்சிகளை கையாண்டு என்னால் எல்லாம் முடியும் என்று களத்தில் தைரியமாக இறங்குங்கள். அப்போதுதான் உங்கள் மதிப்பு உங்களுக்கே தெரியவரும்.
சாதனைகளை மேலும் மேலும் நடத்தவும்:
ஒரு நாட்குறிப்பில் தினம் தினம் நடந்ந சாதனைகளையும் அதற்கேற்ற வெற்றி தோல்வியையும் குறித்து வைக்கவும். அதை பார்க்க பார்க்க உங்களுக்கே தெரியும் எத்தனை வெற்றி கிடைத்துள்ளது, நம்முடைய மதிப்பு என்ன என்று. அதற்கேற்றவாறு இன்னும் தேவையான திட்டங்களைத் தீட்டி, உங்களை நீங்களே மென்மேலும் மேம்படுத்தி கொள்ளலாம்.
மற்றவர்களோடு உங்களை ஒப்பிடுவதை நிறுத்துங்கள்:
ஒவ்வொருவருக்கும் தனித்தனியான வேறுபட்ட கருத்து, சூழ்நிலை மற்றும் அமைப்பாடு இருக்கும். அதற்கேற்றவாறுதான் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அதற்குரிய பலன்களை பெறுகிறார்கள. அடுத்தவர்களின் நிலையோடு உங்களின் நிலையை ஒருபோதும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். என்னோட நிலையில் நான் great என்று தனக்குதானே பெருமைபடுங்கள். அடுத்தவர்களோடு ஒப்பிடும்போது தாழ்வு மனப்பான்மை ஏற்படும், தேவை இல்லாமல் மனதில் குழப்பம் வரும். பிறகு நாளடைவில் பெரிதாகி மன அழுத்தத்திற்கு தள்ளப்படுவீர்கள். ஆகவே ஒப்பிட்டு பார்ப்பதை இப்போதே நிறுத்தவும்.
மேலே சொல்லப்பட்ட குறிப்புகளை நினைவில் வைத்துகொண்டு உங்களின் சுயமதிப்பை உயர்த்துங்கள்!